Actor Suriya: நாய்க்குட்டியுடன் க்யூட் போஸ்.. கல்லூரி மாணவன் லுக்கில் சூர்யா!

சென்னை: நடிகர் சூர்யா அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்து வருகிறார். நடிப்பில் பிசியாக நடித்துவந்தாலும் தன்னுடைய குடும்பத்தினருடன் நேரம் செலவிடுவதிலும் சிறப்பாக இருக்கிறார். சமீபத்தில் வெளிநாட்டில் சூர்யா -ஜோதிகா விடுமுறை கொண்டாட்டத்தில் ஈடுபடுவதை பார்க்க முடிந்தது. இதேபோல தன்னுடைய மகள் தியாவின் பள்ளி விழாவில் பதக்கம் வாங்கிய தன்னுடைய மகளை உற்சாகப்படுத்தியதையும் பார்க்க முடிந்தது. இதனிடையே தன்னுடைய அறக்கட்டளை சார்பில் நடக்கும் நிகழ்வுகளிலும் பங்கேற்று வருகிறார். தற்போது கங்குவா படத்தில் நடித்து முடித்துள்ளார் சூர்யா.

அடுத்ததாக சுதா கொங்கராவுடன் சூர்யா 43 படத்திற்காக இணைந்துள்ளார். இந்தப்படத்திற்கு புறநானூறு என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த தலைப்பு தற்காலிகமாகமானது என்றும் இதில் மாற்றம் ஏற்படலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. முன்னதாக சுதா கொங்கரா -சூர்யா கூட்டணியில் சூரரை போற்று படம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்தப் படம் பயோபிக்காக வெளியான நிலையில், தற்போது புறநானூறு படம் உண்மை சம்பவங்களின் அடிப்படையில் உருவாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. படத்தில் கல்லூரி மாணவராக சூர்யா நடிக்கவுள்ளார். அவருடன் துல்கர் சல்மான், நஸ்ரியா உள்ளிட்டவர்களும் லீட் கேரக்டர்களில் நடிக்கவுள்ளனர்.

Actor Suriyas latest click makes his fans more impressive

நடிகர் சூர்யா: நடிகர் சூர்யாவின் அடுத்தடுத்த படங்கள் வித்தியாசமான ஜானர்களில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகின்றன. சூரரை போற்று, ஜெய்பீம், எதற்கும் துணிந்தவன், விக்ரம் என அடுத்தடுத்த வித்தியாசமான கேரக்டர்களில் தன்னை வெளிப்படுத்தி படங்களை வெற்றிப்படங்களாக்கி வருகிறார் சூர்யா. இந்நிலையில் இந்தப் படங்களை தொடர்ந்து தற்போது இயக்குநர் சிவாவுடன் கங்குவா படத்தில் இணைந்துள்ளார். வரலாற்று பின்னணியில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் சூட்டிங் நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.

கங்குவா படம்: மிகுந்த பிரம்மாண்டமான அளவில் அதிகமான பொருட்செலவில் உருவாகியுள்ள கங்குவா படம் ஆகஸ்ட் மாதத்தில் ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. படத்தில் திஷா பதானி சூர்யாவிற்கு ஜோடியாகியுள்ளார். இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக சுதா கொங்கராவுடன் புறநானூறு படத்தில் இணைந்துள்ளார் சூர்யா. படத்தில் கல்லூரி மாணவராக சூர்யா நடிக்கவுள்ள நிலையில் துல்கர் சல்மான், நஸ்ரியா உள்ளிட்டவர்களும் லீட் கேரக்டர்களில் நடிக்கவுள்ளார். கங்குவா படத்திற்காக தன்னுடைய உடலை கணிசமாக ஏற்றியிருந்த சூர்யா, இந்தப் படத்தில் கல்லூரி மாணவன் லுக்கிற்காக இளமையாக மாற்றியுள்ளார். இதற்காக உணவு கட்டுப்பாடு, பயிற்சிகள் என மெனக்கெட்டுள்ளார்.

புறநானூறு படத்தில் சூர்யா லுக்: புறநானூறு படத்தில் சூர்யாவின் கெட்டப்பை பார்க்க ரசிகர்கள் ஆர்வம் காட்டிவந்த நிலையில், தற்போது அவரது அடுத்தடுத்த வீடியோக்கள், புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகின்றன. சமீபத்தில் சூர்யா, ஜோதிகா, நக்மா உள்ளிட்டவர்கள் இணைந்திருந்த குடும்ப நிகழ்வின் புகைப்படங்கள் வெளியாகி வரவேற்பை பெற்றன. இந்நிலையில் நாய்க்குட்டியுடன் சூர்யா காணப்படும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் ஏராளமான ரசிகர்களால் பகிரப்பட்டு வருகின்றன. இந்தப் புகைப்படத்தில் சூர்யா மட்டுமில்லாமல் அந்த நாய்க்குட்டியும் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

Actor Suriyas latest click makes his fans more impressive

வரலாற்று படங்களில் சூர்யா: தற்போது அடுத்தடுத்த வரலாற்று படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் சூர்யா. கங்குவா படத்தில் வரலாற்று பின்னணியில் சிவா இயக்கத்தில் நடித்துமுடித்துள்ளார். இந்தப் படம் இரண்டு பாகங்களாக உருவாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதேபோல அடுத்ததாக பாலிவுட்டில் ராகேஷ் ஓம்பிரகாஷ் இயக்கத்தில் கர்ணா படத்தில் கமிட்டாகியுள்ளார். இந்தப் படமும் 2 பாகங்களாக உருவாகவுள்ளதாக கூறப்படும் நிலையில் படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது. இதனிடையே புறநானூறு படமும் வரலாற்றை கூறும் படமாகவே உருவாகவுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X