Actor Suriya: குளுகுளு ஊட்டிக்கு பயணமான நடிகர் சூர்யா.. அட இதுதான் விஷயமா?
சென்னை: நடிகர் சூர்யாவின் கங்குவா படம் அக்டோபர் 10ம் தேதி சர்வதேச அளவில் ரிலீசாகவுள்ளது. வரலாற்று பின்னணியில் மிகவும் பிரம்மாண்டமாக அதிக பட்ஜெட்டுடன் உருவாகியுள்ள இந்தப் படத்தை இயக்குநர் சிவா இயக்கி முடித்துள்ளார். படத்தின் அடுத்தடுத்த பிரமோஷன்கள் விரைவில் நடக்கவுள்ள நிலையில் இந்தப் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பிற்கு உள்ளாகியுள்ளது.
இதனிடையே சூர்யா, அடுத்ததாக கார்த்திக் சுப்புராஜுடன் இணைந்துள்ள சூர்யா 44 படத்தின் அடுத்தடுத்த கட்ட ஷூட்டிங்குகள் நடந்து வருகின்றன. ஒரு மாதத்தை கடந்து இந்த படத்தின் முதல் கட்ட சூட்டிங் அந்தமானில் நடைபெற்று முடிந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சூட்டிங்கை நிறைவு செய்துவிட்டு டீம் சென்னை திரும்பியது. இந்நிலையில் இன்றைய தினம் உதகையில் அடுத்த கட்ட சூட்டிங் துவங்கப்பட்டுள்ளது.

நடிகர் சூர்யா: நடிகர் சூர்யாவின் கங்குவா படம் வரும் அக்டோபர் மாதம் ரிலீசாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் அடுத்தடுத்த பிரமோஷன்களை படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். கடந்த இரு தினங்களுக்கு முன்பு இந்தப் படத்தின் ஃபயர் பாடல் சூர்யாவின் பிறந்தநாளையொட்டி வெளியானது. மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்து ஏராளமான லைக்ஸ்களை இந்தப் பாடல் பெற்று வருகிறது. இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக சூர்யா வெற்றிமாறனின் வாடிவாசல் அல்லது சுதா கொங்கராவுடன் சூர்யா 43 படங்களில் நடிக்க திட்டமிட்டிருந்தார்.
சூர்யா 44 படம்: ஆனால் இந்தப் படங்களை தவிர்த்துவிட்டு கார்த்திக் சுப்புராஜுடன் சூர்யா 44 படத்திற்காக இணைந்துள்ளார் சூர்யா. இந்தப் படத்தின் முதல்கட்ட ஷூட்டிங் அந்தமானில் தொடர்ந்து ஒரு மாத காலத்தை தாண்டி நடந்து முடிந்துள்ளது. சூர்யாவின் பிறந்தநாளையொட்டி இந்தப் படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவும் வெளியான நிலையில் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. படத்தில் சூர்யாவுடன் பூஜா ஹெக்டே, ஜெயராம் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து வருகின்றனர். அந்தமான் ஷூட்டிங்கை கடந்து சில தினங்களுக்கு முன்னதாக நிறைவு செய்த டீம் சென்னை திரும்பியது. இந்நிலையில் 2வது மற்றும் அடுத்த கட்ட ஷூட்டிங்கிற்காக தற்போது உதகைக்கு சென்றுள்ளனர்.
2வது கட்ட சூட்டிங்: இன்றைய தினம் உதகையில் சூட்டிங் துவங்கியுள்ளது. பூஜா ஹெக்டே உள்ளிட்டவர்கள் இந்த சூட்டிங்கில் சூர்யாவுடன் பங்கேற்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது. உதகையில் தொடர்ந்து பதினைந்து நாட்கள் இந்த சூட்டிங் நடைபெற உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இந்த படத்தின் ஷூட்டிங் வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் நிறைவு செய்யப்பட்டு விரைவில் படத்தின் ரிலீஸ் அப்டேட் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படமும் இந்த ஆண்டு இறுதியிலேயே ரிலீஸ் ஆகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
சூர்யாவின் அடுத்தடுத்த திட்டம்: முன்னதாக கங்குவா படத்தின் பிரமோஷன்களிலும் சூர்யா அதிகமான அளவில் பங்கேற்பார் என்று கூறப்பட்டுள்ளது. இதற்கு ஏற்றாற்போல தன்னுடைய சூர்யா 44 படத்தின் சூட்டிங்கை அவர் திட்டமிடுவார் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்தப் படங்களை தொடர்ந்து அடுத்ததாக வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தில் சூர்யா இணையவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், விடுதலை 2 படத்தின் சூட்டிங்கை நிறைவு செய்துவிட்டு சூர்யாவுடன் இணைய வெற்றிமாறன் திட்டமிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











