சூர்யாவின் அடுத்தப்பட டைட்டில் இதுவா.. சூர்யாவுடன் ஜோடி சேரும் ஜிவி பிரகாஷின் நாயகி!
சென்னை: நடிகர் சூர்யாவின் கங்குவா படம் அடுத்த மாதம் 14ம் தேதி சர்வதேச அளவில் 10ற்கும் மேற்பட்ட மொழிகளில் ரிலீசாக உள்ளது. இந்த படத்தையடுத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா 44 படத்திலும் சூர்யா நடித்து முடித்துள்ளார். இதனிடையே சூர்யா 45 படத்தின் அறிவிப்பும் கடந்த இரு தினங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டுள்ளது.
ட்ரீம் வாரியர் மூவிஸ் தயாரிக்கவுள்ள சூர்யா 45 படத்தை ஆர்ஜே பாலாஜி இயக்கவுள்ளார். ஏஆர் ரஹ்மான் இசையமைக்க உள்ளார். படத்தின் சூட்டிங் விரைவில் துவங்கவுள்ளது. இதனிடையே இந்த படத்தின் டைட்டில் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன. படத்தின் ஹீரோயினாக முன்னதாக ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியான சிவப்பு மஞ்சள் பச்சை படத்தில் அவருக்கு ஜோடி சேர்ந்திருந்த நடிகை நடிக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

நடிகர் சூர்யா: நடிகர் சூர்யாவின் அடுத்தடுத்த பட தேர்வுகள் ரசிகர்களிடையே மிகப் பெரிய கவனத்தை பெற்று வருகின்றன. அடுத்ததாக வரும் நவம்பர் 14ம் தேதி சூர்யாவின் கங்குவா படம் சர்வதேச அளவில் 10ற்கும் மேற்பட்ட மொழிகளில் ரிலீசாகவுள்ளது. இந்த படத்தின் ரிலீஸ் தள்ளிப்போன நிலையிலும் அதுவும் சிறப்பானதாகவே பார்க்கப்படுகிறது. மழை உள்ளிட்ட பல பாதிப்புகளால் தற்போது தமிழகம் தத்தளித்து வரும் நிலையில் இந்தப் படத்தின் ரிலீஸ் அடுத்த மாதத்திற்கு தள்ளிப் போனது சிறப்பாகவே பார்க்கப்படுகிறது. இந்நிலையில் சூர்யாவின் கேரியரிலேயே மிகவும் பிரம்மாண்டமாக அதிகமான பொருட்செலவில் உருவாகியுள்ள கங்குவா படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
கங்குவா படம்: இந்த படம் ரிலீசுக்கு முன்னதாகவே சிறப்பாக கல்லா கட்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் இந்த படத்தின் ப்ரோமோஷன்களை படக்குழுவினர் தற்போது துவங்கி அடுத்தடுத்து மேற்கொண்டு வருகின்றனர், இதில் விரைவில் சூர்யாவும் பங்கேற்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனிடையே கங்குவா படத்தை தொடர்ந்து அடுத்ததாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கம் மற்றும் தயாரிப்பில் உருவாகியுள்ள சூர்யா 44 படத்திலும் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை தன்னுடைய 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் மூலம் கார்த்திக் சுப்புராஜுடன் இணைந்து சூர்யாவும் தயாரித்துள்ளார்.

சூர்யா 45 படம்: சூர்யா 44 படத்தின் சூட்டிங் நிறைவடைந்து போஸ்ட் ப்ரொடக்ஷன்ஸ் வேலைகள் நடந்து வருகிறது. அடுத்த ஆண்டு துவக்கத்தின் படம் ரிலீசாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் சூர்யாவின் சூர்யா 45 படம் குறித்த அறிவிப்பும் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியாகியுள்ளது. இந்த படத்தை ட்ரீம் வாரியர் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள நிலையில் படத்தை பிரபல இயக்குனர் மற்றும் நடிகர் ஆர்ஜே பாலாஜி இயக்கவுள்ளார். படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைக்கவுள்ள நிலையில் இந்த படத்தின் ஷூட்டிங் விரைவில் துவங்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்னும் டைட்டில் வைக்கப்படாத இந்த படத்திற்கு ஹிண்ட் என்று பெயரிடப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
படத்தின் டைட்டில் & நாயகி: முன்னதாக இந்த படத்தின் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ள நிலையில் அதில் அரிவாள், கத்தி போன்றவற்றிற்கு பட்டையிடப்பட்டுள்ளதாகவும் குதிரை போன்ற ஒரு உருவம் அந்த போஸ்டரில் இடம் பெற்றுள்ளதாகவும் காணப்பட்டது. இந்நிலையில் படத்திற்கு ஹிண்ட் என்று பெயரிடப்பட்டுள்ளது சற்றும் பொருத்தம் இல்லாத வகையில் காணப்படுவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக சிவப்பு பச்சை மஞ்சள் படத்தில் ஜிவி பிரகாஷுக்கு ஜோடியாக நடித்த காஷ்மிரா பர்தேசி நடிக்க உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. விரைவில் இந்த தகவல்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











