மாற்றுத்திறனாளியாக நடிக்கும் சூர்யா... சூப்பர் ஹிட் இயக்குனரின் கூட்டணியில் !
சென்னை: நடிகர் சூர்யாவின் சூரரைப்போற்று மற்றும் ஜெய்பீம் உள்ளிட்ட திரைப்படங்கள் சர்வதேச அளவில் கவனத்தைப் பெற்று விருதுகளை குவித்தன.
இந்த நிலையில் தற்போது இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடித்துள்ள எதற்கும் துணிந்தவன் மார்ச் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது
நந்தா, பிதாமகன் உள்ளிட்ட படங்களைத் தொடர்ந்து சூர்யா, பாலா இணைய உள்ள புதிய படத்தில் சூர்யாவின் கதாபாத்திரம் குறித்த முக்கிய தகவல் கிடைத்துள்ளது.

மிகப்பெரிய திருப்புமுனையை
அசால்டாக தேசிய விருதுகளை தட்டி தூக்க கூடிய பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் வெற்றி இயக்குனராக உள்ளவர் இயக்குனர் பாலா. சூர்யா உடன் இணைந்து நந்தா, பிதாமகன் உள்ளிட்ட படங்களில் பணியாற்றியுள்ளார். இந்த இரண்டு திரைப்படங்களும் சூர்யாவின் திரை வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய படங்கள். இந்த நிலையில் நீண்ட காலமாக பாலா மற்றும் சூர்யா கூட்டணி இணைந்து பணியாற்றாமல் இருந்தது ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றமாகவே இருந்தது இந்த நிலையில் பாலா, சூர்யா கூட்டணி இப்பொழுது புதிய திரைப்படத்தில் இணைந்துள்ளனர்.

விருதுகளை வென்றது
நடிகர் சூர்யாவின் சமீபத்திய திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவைப் பெற்று வருகின்றன. ஒரே மாதிரி கதைகளில் நடிக்காமல் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து சமூகப் பிரச்சினைகளை தன்னுடைய ஒவ்வொரு படங்களிலும் பேசியும் வரும் சூர்யாவின் சமீபத்திய படங்களான சூரரைப்போற்று மற்றும் ஜெய்பீம் உள்ளிட்ட திரைப்படங்கள் சர்வதேச அளவில் மிகப்பெரிய கவனத்தைப் பெற்று பல விருதுகளையும் வென்று வந்தது.

வெற்றிமாறனுடன் வாடிவாசல்
இந்த இரண்டு திரைப்படங்களும் ஆஸ்கர் பட்டியலிலும் இடம் பெற்றது. இந்த நிலையில் அடுத்ததாக பல குடும்பப் படங்களை இயக்கிய கமர்ஷியல் ஹிட் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள எதற்கும் துணிந்தவன். இந்த படம் மார்ச் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக தயாராக உள்ளது . இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார். இப்படத்தின் வெளியீட்டு பணிகள் மிக தீவிரமாக நடைபெற்றுக் கொண்டுள்ளது. அதை அடுத்து வெற்றிமாறனுடன் இணைந்து வாடிவாசல் படத்தில் சூர்யா நடித்து வருகிறார்

மாற்றுத் திறனாளி கதாபாத்திரத்தில்
இந்த நிலையில் பாலா மற்றும் சூர்யா இணையும் படம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரிக்க உள்ளது. மேயாதமான்,பிகில் உள்ளிட்ட படங்களில் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய நடிகை இந்துஜா ரவிச்சந்திரன் சூர்யாவின் தங்கையாக இதில் நடிக்கிறார் என கூறப்படுகிறது. இந்த நிலையில் முக்கிய தகவலாக இந்த படத்தில் சூர்யா காது கேட்காத, வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளி கதாபாத்திரத்தில் இந்த படத்தில் நடிக்க உள்ளார் என்ற தகவல் தற்போது கிடைத்துள்ளது.


Click it and Unblock the Notifications











