பாலாவுக்கே கன்டிஷன் போட்ட சூர்யா… கடைசியில் நிலை இப்படி ஆகிபோச்சே!

சென்னை : இயக்குநர் பாலாவின் படத்தில் நடித்து வரும் சூர்யா, பாலாவுக்கே சில கன்டிஷன்களை போட்டுள்ளதாக கோலிவுட்டில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.

நந்தா படத்தின் மூலம் சூர்யாவின் நடிப்பு திசையை திறந்து வைத்தவர் பாலா. அதன் பிறகு அவரது பிதாமகன் திரைப்படத்தில் சூர்யா நடித்திருந்தார். அந்த படத்திலும் சூர்யாவின் நடிப்பு மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது.

பாலாவும் சூர்யாவும் பல வருடங்களுக்கு பின் இப்போது மீண்டும் இணைகிறார்கள்.

இயக்குநர் பாலா

இயக்குநர் பாலா

இயக்குநர் பாலா தன்னுடைய முதல் திரைப்படத்திலேயே சிறந்த இயக்குநர் என பெயர் எடுத்து மக்கள் மனதில் ஆழமாக பதிந்து விட்டார். அது வரை தனது திறமையை நிரூபிக்க முடியாமல் படவாய்ப்புக்காக அலைந்துக்கொண்டிருந்த விக்ரமிற்கு சேது படம் ஒரு திரும்பு முனையானத் திரைப்படமாக அமைந்தது. சேது திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுத்தந்து பாலா, விக்ரம் இருவரையும் உச்சாணிக்கொம்பில் ஏற்றிவிட்டது.

பல வெற்றிப்படங்கள்

பல வெற்றிப்படங்கள்

நந்தா, பிதாமகன், நான் கடவுள், பரதேசி, அவன் இவன் போன்ற திரைப்படங்களை இயக்கினார். இந்த திரைப்படம் அனைத்தும் மிகப்பெரிய அளவில் வெற்றியை பெற்றுத்தந்தன. வர்மா பட பிரச்சனைக்கு பிறகு திரைப்படங்களில் கவனம் செலுத்தாமல் இருந்த பாலா நீண்ட வருடங்களுக்கு பிறகு சூர்யாவை வைத்து படத்தை இயக்க உள்ளார்.

ஷூட்டிங் தொடங்கியது

ஷூட்டிங் தொடங்கியது

சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் இந்தப் படத்தை தயாரிக்கிறது. ஜிவி பிரகாஷ் படத்திற்கு இசையமைக்க உள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த சில நாட்களுக்கு முன் தொடங்கியது. இதில் நாயகியாக க்ருத்தி ஷெட்டி நடிக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் படத்தின் மூலம் அவர் தமிழில் அறிமுகமாக உள்ளார்.

சூர்யா போட்ட கன்டிஷன்

சூர்யா போட்ட கன்டிஷன்

சூர்யா நடிக்கும் பாலாவின் திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்புக்கு உள்ளாகி இருக்கிறது. இதனால் சூர்யா பாலாவிடம் சில கன்டிஷன்களை போட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது, படத்தில் அதிகமாக வன்முறை காட்சிகள் இருக்கக்கூடாது என்றும், தவறான வார்த்தைகளை முடிந்தவரை தவிர்த்துவிடுமாறு கூறியுள்ளதாக தெரிகிறது. இதற்கு பாலாவும் ஒகே சொல்லிவிட்டாராம்.

புலம்பும் ரசிகர்கள்

புலம்பும் ரசிகர்கள்

வழக்கமாக பாலாவின் படம் என்றால், அவர் சொல்வதைத்தான் நடிகர்கள் கேட்பார்கள். அப்படி கேட்கவில்லை என்றால் கண்டபடி திட்டுவார். ஆனால், இப்போது சூர்யாவின் கன்டிஷனை கேட்கும் நிலைமையாகி விட்டதே என்று பாலாவின் ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X