சூர்யாவின் அடுத்தடுத்த படங்களுக்கு இசையமைக்கும் இசை அசுரன்... சூப்பர் அப்டேட்!
சென்னை : நடிகர் சூர்யாவின் அடுத்தடுத்த படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன.
நவம்பர் 2ம் தேதி அவரது நடிப்பு மற்றும் தயாரிப்பில் உருவாகியுள்ள ஜெய் பீம் படம் வெளியாக உள்ளது.
இந்நிலையில் அவரது அடுத்தடுத்த இரு படங்களுக்கு இசை அசுரன் ஜிவி பிரகாஷ் இசையமைக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் சூர்யா
நடிகர் சூர்யாவின் தயாரிப்பில் அடுத்தடுத்த படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன. இவரது நடிப்பு மற்றும் தயாரிப்பில் உருவாகியுள்ள ஜெய் பீம் படம் வரும் நவம்பர் 2ம் தேதி அமேசான் ப்ரைமில் ரிலீசாக உள்ளது. இதன் டீசர், பாடல் உள்ளிட்டவை வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளன.

சூரரை போற்று படம்
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்திருந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்தார். இந்தப் படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை அனைத்தும் மிகுந்த வரவேற்பை பெற்றிருந்தன. சில தினங்களுக்கு முன்பு இந்தப் படத்தின் பாடல் குறித்து பாலிவுட் ஸ்டார் அமிதாப் பச்சன் பாராட்டி ட்வீட் செய்திருந்தார்.

சூர்யாவுடன் இணையும் ஜிவி பிரகாஷ்
இந்நிலையில் தற்போது சூர்யாவின் அடுத்தடுத்த படங்களில் இசையமைக்க ஜிவி பிரகாஷ் தற்போது ஒப்பந்தமாகியுள்ளார். வெற்றி மாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ள வாடிவாசல் படத்தில் அவர் இசையமைக்க உள்ளது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Recommended Video

பாலா இயக்கத்தில் இசை
முன்னதாக பாலா இயக்கத்தில் சூர்யா நடித்து தயாரிக்கவுள்ள படத்திலும் ஜிவி பிரகாஷ் இசையமைக்க உள்ளதாக தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்திற்கான நடிகர், நடிகைகள் தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது. அடுத்த மாதத்தில் படப்பிடிப்பு துவங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜெய் பீம் படம்
சூர்யாவின் நடிப்பில் தற்போது ஜெய் பீம் படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது. நவம்பர் 2ம் தேதி இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் பழங்குடியின பெண்ணின் உரிமைக்காக போராடும் வழக்கறிஞர் வேடத்தில் சூர்யா நடித்துள்ளார். நேற்றைய தினம் படத்தின் பாடல் வெளியாகியுள்ளது.

ஷான் ரோல்டன் இசை
படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். இந்நிலையில் சூர்யாவின் அடுத்தடுத்த படங்களுக்கு ஜிவி பிரகாஷ்குமார் இசையமைக்கவுள்ளது படத்திற்கான எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது. சூரரை போற்று படத்தின் இசை பரவலாக பாராட்டுக்களை பெற்ற நிலையில் தற்போது 2 படங்களுக்கு அவர் இசையமைக்க உள்ளார்.


Click it and Unblock the Notifications











