தாடியோட சூப்பரா இருக்காரே சூர்யா... வெளியானது சூர்யா41 படத்தின் புதிய லுக்!

திருவனந்தபுரம் : நடிகர் சூர்யா தற்போது பாலா இயக்கத்தில் சூர்யா 41 படத்தின் சூட்டிங்கில் பிசியாக நடித்து வருகிறார். இந்தப் படத்திற்கு இன்னும் பெயர் வைக்கப்படவில்லை. விரைவில் படத்தின் சூட்டிங்கை முடித்துவிட்டு இந்த ஆண்டு இறுதிக்குள் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

நடிகர் சூர்யா

நடிகர் சூர்யா

நடிகர் சூர்யாவின் சூரரை போற்று, ஜெய்பீம், எதற்கும் துணிந்தவன் ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியாகி அவருக்கு வெற்றிப் படங்களாக அமைந்துள்ளன. இதில் முதல் இரண்டு படங்கள் நேரடியாக ஓடிடியில் வெளியான நிலையில் எதற்கும் துணிந்தவன் படம் திரையரங்குகளில் ரிலீசானது.

சூர்யா 41 படம்

சூர்யா 41 படம்

இந்நிலையில் அவர் அடுத்ததாக தன்னுடைய 41வது படத்திற்காக பாலா இயக்கத்தில் இணைந்துள்ளார். இந்தப் படத்தின் சூட்டிங், கடந்த சில வாரங்களுக்கு முன்பு கன்னியாகுமரியில் துவக்கப்பட்டு தற்போது சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதன் புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியது.

இந்த ஆண்டு ரிலீஸ்

இந்த ஆண்டு ரிலீஸ்

இந்நிலையில், இந்தப் படத்தின் சூட்டிங்கை விரைவில் முடித்துவிட்டு இந்த ஆண்டு இறுதிக்குள் படத்தை வெளியிட சூர்யா திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அவர் இந்தப் படத்தை தனது 2டி என்டர்டெயின்மெண்ட் சார்பில் தயாரித்து வருகிறார். 18 ஆண்டுகளுக்கு பிறகு சூர்யா -பாலா கூட்டணி இந்தப் படத்தில் இணைந்துள்ளது எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது.

அடுத்தடுத்த படங்கள்

அடுத்தடுத்த படங்கள்

இந்தப் படத்தை முடித்துவிட்டு வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்திலும் சூர்யா இணையவுள்ளார். தொடர்ந்து சுதா கொங்கரா இயக்கத்திலும் அவர் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ள நிலையில், தற்போது பாலா படத்தை விரைவில் முடிக்க அவர் திட்டமிட்டுள்ளார்.

சூர்யா 41 லுக்

சூர்யா 41 லுக்

இந்தப் படத்தின் அப்டேட் கேட்டு ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் படத்தில் சூர்யாவின் லுக் தற்போது வெளியாகியுள்ளது. அவர் திருவனந்தபுரத்திலிருந்து மும்பைக்கு செல்வதற்காக விமான நிலையம் சென்றபோது அவரை ரசிகர்கள் வீடியோ எடுத்துள்ளனர்.

விமான நிலையத்தில் சூர்யா

விமான நிலையத்தில் சூர்யா

இந்த வீடியோ மற்றும் சூர்யாவின் சூர்யா 41 படத்தின் லுக் ஆகியவை இந்த வீடியோவில் வெளியாகியுள்ளது. இந்த வீடியோவில் அடர்த்தியான தாடியுடன் மிகவும் அழகாக காணப்படுகிறார் சூர்யா. விமான நிலையத்தில் ரசிகர்களுடன் அவர் புகைப்படமும் எடுத்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X