எங்களுடைய அன்பு இருக்கிறது: விஜய் தேவரகொண்டாவுக்கு சூர்யா ஆதரவு

Recommended Video

காற்றின் மொழி முதல்நாள் முதல்காட்சி | சோகத்தில் விஜய் தேவரகொண்டா- வீடியோ

சென்னை: விஜய் தேவரகொண்டாவுக்கு ஆதரவு அளிப்பதாக நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.

அர்ஜுன் ரெட்டி புகழ் விஜய் தேவரகொண்டா நடித்திருக்கும் படம் டாக்சி வாலா. இப்படம் வரும் 17ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த நிலையில் தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது படக்குழுவை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Actor Surya support Vijay Devarakonda!

சர்கார் படத்தை தமிழ் ராக்கர்ஸில் வெளியிட முடியாது என சொல்லப்பட்ட நிலையில், அதுவும் வெளியானது. இப்போது டாக்சி வாலா ரிலீஸுக்கு முன்பே வெளியானதால் திரையுலகினர் கடும் கோபத்தில் உள்ளனர்.

படம் தமிழ் ராக்கர்ஸில் ரிலீஸானதால் ரசிகர்கள் பலரும் விஜய் தேவரகொண்டாவின் வளர்ச்சி பிடிக்காமல் விஷமிகள் இவ்வாறு செய்வதாக ட்விட்டரில் கண்ணீர் வடிக்கின்றனர்.

இந்த நிலையில் நடிகர் விஜய் தேவரகொண்டாவுக்கு ஆதரவளிப்பதாக சூர்யா ட்வீட் செய்திருக்கிறார். எங்கள் எல்லோரின் அன்பும் உள்ளது. இதுவும் கடந்துபோகும். ஆனால் நீங்கள் இங்கு இருக்க வேண்டும் என ட்வீட் செய்துள்ளார். சூர்யா சார் ஐ லவ் யூ... என விஜய் ட்வீட் பதிலளித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X