பாலிவுட் நடிகருடன் காபி குடிக்க விருப்பம் தெரிவித்த சூர்யா.. எதுக்காக தெரியுமா?

சென்னை : நடிகர் சூர்யாவின் நடிப்பில் உருவாகி வருகிறது சூர்யா 42 படம். இந்தப் படத்தை இயக்கி வருகிறார் இயக்குநர் சிவா.

முன்னதாக பாலா இயக்கத்தில் வணங்கான் படத்தில் சூர்யா நடித்துவந்த நிலையில், அந்தப் படத்தின் சூட்டிங் நிறுத்தப்பட்டுள்ளது.

அடுத்ததாக வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் சூட்டிங்கிலும் இணையவுள்ளார் சூர்யா.

நடிகர் சூர்யா

நடிகர் சூர்யா

நடிகர் சூர்யாவின் அடுத்தடுத்த படங்கள் சமூக அக்கறையுடன் வெளிவந்து ரசிகர்களின் ஆதரவையும் பெற்றுள்ளது. சூரரைப் போற்று ஜெய்பீம், எதற்கும் துணிந்தவன் போன்ற படங்கள் இத்தகைய ஜானரில் வெளியான நிலையில், அடுத்ததாக வெளியான ரோலக்ஸ் கேரக்டரில் மிரட்டினார் சூர்யா.

கொடூர வில்லன்

கொடூர வில்லன்

சூர்யாவை அத்தகைய நெகட்டிவ் ரோலில், கொடூரமான வில்லனாக பார்ப்பதற்கு அவருடைய ரசிகர்களுக்கு விருப்பம் இருக்குமோ இல்லையோ, ஆனால் அந்த கேரக்டர் கொடுத்த தாக்கம் அவர்களை மிகவும் மிரட்டலுக்கு உள்ளாக்கியது. தொடர்ந்து பாலாவின் இயக்கத்தில் 18 ஆண்டுகளுக்கு பிறகு வணங்கான் படத்திலும் இணைந்திருந்தார் சூர்யா.

 நிறுத்தப்பட்ட வணங்கான் சூட்டிங்

நிறுத்தப்பட்ட வணங்கான் சூட்டிங்

இந்தப் படத்தின் சூட்டிங் தவிர்க்க முடியாத காரணங்களால் நிறுத்தப்பட்ட நிலையில் தற்போது சிவா இயக்கத்தில் சூர்யா 42 படத்தில் இணைந்துள்ளார் சூர்யா. இந்தப் படத்தின் சூட்டிங் துவங்கப்பட்டு பிரம்மாண்டமான செட்டில் கோவாவில் நடைபெற்று வருகிறது. இதனிடையே இந்தப் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.

சூர்யாவின் பழைய வீடியோ

சூர்யாவின் பழைய வீடியோ

இதனிடையே நடிகர் சூர்யாவின் பழைய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் சூர்யாவை பேட்டியெடுக்கும் டிடி அவரை கேள்விக்கணைகளால் துளைத்து எடுக்கிறார். உடன் நித்யா மேனன் காணப்படுகிறார். அதில் நடிகராக அல்லது தம்பியாக எப்படி கார்த்தியை பிடிக்கும் என்ற கேள்விக்கு தம்பியாக என்று பதிலளிக்கிறார்.

சல்மானுடன் காபி குடிக்க சூர்யா விருப்பம்

சல்மானுடன் காபி குடிக்க சூர்யா விருப்பம்

தொடர்ந்து ஒரு காபி குடிக்க வேண்டுமென்றால் யாருடன் செல்லப் பிடிக்கும் என்று டிடி கேட்க, நடிகர் சல்மான் கானுடன் காபி குடிக்க வேண்டும் என்று ஆசை உள்ளதாகவும், அவரது பிட்னஸ் உள்ளிட்டவை குறித்து கேட்டறிய வேண்டும் என்று தான் ஆசைப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

வாடிவாசல் படத்தின் சூட்டிங்

வாடிவாசல் படத்தின் சூட்டிங்

பாலாவின் வணங்கான் சூட்டிங் நிறுத்தப்பட்டு சிவா இயக்கத்தில் சூர்யா 42 படத்தில் இணைந்துள்ளார் சூர்யா. இந்தப் படத்தை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்தப் படத்திற்காக சூர்யா ஜல்லிக்கட்டு மாடுகளை வைத்து பயிற்சி செய்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X