வெறித்தனமான ஒர்க்கவுட்.. வைரலாகும் சூர்யாவின் வீடியோ கால்!
சென்னை : பொதுவாக சூர்யாவின் திரைப்படங்கள் என்றாலே ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பு இருந்து வரும் நிலையில் சூரரைப் போற்று திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் திரைப்படத்தில் நடிக்க தயாராகி வருகிறார்.
முழுக்க முழுக்க கிராமத்து பின்னணியைக் கொண்டு உருவாகிவரும் வாடிவாசல் படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ள நிலையில் கொரானாப் பரவலால் பல மாதங்களாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது.
அசுரத்தனமான இயக்குனர் அசுரத்தனமான நடிகர் என இருவரும் முதன் முறையாக இணையும் வாடி வாசல் திரைப்படத்தைப் பற்றிய அப்டேட்களை ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில் இப்பொழுது ஜிம்மில் வெறித்தனமாக ஒர்க்கவுட் செய்தவாறு சூர்யா பேசியுள்ள வீடியோ கால் சாட் இப்பொழுது வைரலாகி வருகிறது.

தெலுங்கு ரசிகர்களிடமும்
என்ஜிகே, காப்பான் போன்ற திரைப்படங்கள் விமர்சன ரீதியாக அனைவரது பாராட்டுக்களையும் பெற்று வந்தாலும் வசூல் ரீதியாக வெற்றி பெற தவறிவிட்டது என்றே சொல்லலாம். சூர்யாவின் திரைப்படங்களுக்கு தமிழில் மட்டுமல்லாமல், மலையாளம் மற்றும் தெலுங்கு ரசிகர்களிடமும் மிகப்பெரிய வரவேற்பு இருந்து வரும் நிலையில் இவரின் திரைப்படங்கள் அங்கும் வெளியாகி வெற்றி பெற்று வருகின்றன.

பிளாக்பஸ்டர் வெற்றி
இறுதிச்சுற்று திரைப்படத்திற்கு பிறகு இயக்குனர் சுதா கொங்கரா இயக்கிய சூரரைப்போற்று திரைப்படத்திற்காக வேறு எந்த ஒரு திரைப்படத்திலும் ஒப்பந்தம் ஆகாமல் முழு மூச்சுடன் நடித்து வந்த சூர்யாவுக்கு மிகப்பெரிய பலனாக இந்த திரைப்படம் பிளாக்பஸ்டர் வெற்றி பெற்று உலக அளவில் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இன்றுவரை தொடங்கப்படாமல்
தொடர்ந்து ஆக்சன் திரைப்படங்களில் நடித்து வரும் சூர்யா வெற்றிமாறன் இயக்கத்தில் முழுக்க முழுக்க கிராமத்து பின்னணியைக் கொண்டு உருவாகி வரும் வாடிவாசல் திரைப்படத்தில் நடிக்கவிருக்க விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்த படப்பிடிப்பு கொரானா பரவலால் நிறுத்தப்பட்டது இன்றுவரை தொடங்கப்படாமல் உள்ளது.

புதிய திரைப்படத்தில்
இந்த நிலையில் சூர்யா சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் புதிய திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்க, நம்ம வீட்டுப் பிள்ளை மிகப்பெரிய வெற்றி பெற்ற பின் குடும்பங்கள் கொண்டாடும் இயக்குனராக மாறியுள்ள இயக்குனர் பாண்டிராஜ் இந்தப் படத்தை இயக்குகிறார்.

நரைத்த தாடியுடன்
பாண்டிராஜின் திரைப்படத்திற்காக வித்தியாசமான தோற்றத்திற்கு மாறி வரும் சூரியா அதற்காக ஜிம்மில் வெறித்தனமாக ஒர்க்கவுட் செய்து வருகிறார். கொரோனா பாதுகாப்பு நலன் கருதி வீடியோ காலிங் மூலம் பயிற்சியாளரிடம் டிப்ஸ் கேட்டு உடற்பயிற்சியை மேற்கொண்டு வரும் சூர்யா ஜிம் மாஸ்டருடன் வீடியோ காலில் பேசியப் புகைப்படம் இப்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வர. அதில் நரைத்த தாடியுடன் பல்க்கான ஆர்ம்ஸ் வைத்துக் கொண்டு சூர்யா இருக்கின்ற இந்தப் புகைப்படம் இப்பொழுது ரசிகர்களால் வைரல் ஆக்கப்பட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications











