பெண்களை மோசமாக பேசிவிட்டு இப்படி நடிக்கிறார்.. எஸ்.வி.சேகர் நல்லவரா கெட்டவரா!

சென்னை: சினிமா பிரபலங்கள் பலரும் படங்களில் நடித்துகொண்டிருக்கும்போதே பிடித்த அரசியல் கட்சிகளை பின்தொடர்வது ஆரம்பகாலகட்டத்தில் இருந்தே இருக்கிறது. அதேபோன்று இயக்குநரும் நடிகருமான எஸ்.வி.சேகர் பாஜகவில் முக்கிய பொறுப்பு வகித்தார். பின்பு அதிமுக சென்றார். பின்பு அக்கட்சியில் இருந்து விலகி எந்த அரசியல் தொடர்பும் இல்லாமல் இருக்கிறார். தற்போது ரமலான் நோன்பு கூட்டத்தில் கலந்துகொண்ட அவர் இறைவனை பற்றி பேசியிருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. சர்ச்சைகளில் மட்டுமே சிக்கி வந்த அவரா இப்படி பேசியிருக்கிறார் என ரசிகர்களுக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

இயக்குநர் விசுவிற்கு எப்படி கே.பாலச்சந்தரோ அதேபோன்று எஸ்.வி.சேகருக்கு விசு. விசுவின் அனைத்து படங்களிலும் எஸ்.வி.சேகர் சிறிய கதாப்பாத்திரத்திலாவது வந்து விடுவார். விசுவின் குடும்ப டிராமா கதைகளுக்கு என்று தனி ரசிகர்கள் இருக்கிறார்கள். அதேபாணியில் எஸ்.வி.சேகரும் மணல் கயிறு படத்தின் மூலம் குருவின் இடத்தை சிஷ்யனாக தக்க வைத்துக்கொண்டார். ரஜினி, கமல், பிரபு, முரளி, கார்த்திக் என 80களில் அனைத்து ஸ்டார் நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். சில படங்களில் இரண்டாவது ஹீரோவாகவும் வந்து டூயட் பாடியுள்ளார் எஸ்.வி.சேகர்.

actor-sv-shekhars-video-talking-about-god-goes-viral

சர்ச்சை: சினிமா வாய்ப்புகள் குறைந்த நிலையில், ஒரு சில படங்களில் மட்டுமே நடித்து வந்தார். பின்பு தேசிய கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த போது பத்திரிகையாளர்களையும் அங்கு பணியாற்றும் பெண்களையும் மோசமான வார்த்தைகளால் விமர்சித்திருந்தார். அது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பின்னர், தமிழகம் முழுவதும் அவருக்கு கண்டனங்கள் எழுந்தன. கைது செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மோசமாக பேசியதற்கு மன்னிப்பும் கேட்டார். பின்பு பணமதிப்பிழப்பு, நடிகைகளை பற்றி பேசுவது என தொடர்ந்து சர்ச்சைகளை கிளப்பி வந்தார்.

விஜய்க்கு ஓட்டு விழுகாது: நடிகர் விஜய் கட்சி தொடங்கிய பின்பு திரை பிரபலங்கள் பலரும் எதிர்கருத்துக்களை பபேசாமல் நடிகராகவே இருந்திருக்கலாம் என கலகலப்பாக தெரிவித்தார். திமுக - அதிமுக தாண்டி விஜய் ஜெயிக்க முடியுமா என்று கேள்வி கேட்டார். இதற்கு விஜய் ரசிகர்கள் அவரை கடுமையாக விமர்சித்தனர். எஸ்.வி.சேகர் பேசினாலே அது சர்ச்சைதான், எதாவது ஒன்றை உலறி கொட்டுவார் என்றும் நெட்டிசன்கள் தெரிவித்தனர். விஜய்க்கு அரசியல் தெளிவு இல்லை என்பது தான் ரசிகர்களை கோபப்படுத்தியது. நாளொரு வண்ணம் பிரச்னைகளை கண்டு வரும் எஸ்.வி.சேகர் கடவுளை பற்றி பேசி பாராட்டை பெற்றிருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

actor-sv-shekhars-video-talking-about-god-goes-viral

எதிரிகள் கிடையாது: சமீபத்தில் நடந்த ரமலான் நோன்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் எஸ்.வி.சேகர், "நான் எந்த மதத்திற்கும், கடவுளுக்கும் எதிரானவன் கிடையாது. மதத்தை எதிர்ப்பது கடவுள் இல்லை மனிதர்கள் தான். நான் ஒரு கொள்கையை தீவிரமாக பின்பற்றுகிறேன். அதற்காக மற்ற மதத்தினரை இழிவாக பேசியது கிடையாது. அப்படி பேசுவது தவறு. இங்கு வாழும் அனைவரும் அனைத்து கடவுளுக்கு சமம். நம்முடன் கடவுள் இருக்கும் வரை எதிரிகளே கிடையாது. அன்பும் மனிதத்தளை வளர்க்க வேண்டும். அன்பு அரவணைத்து செல்லும். வெறுப்பை விதைத்தால் வெறுப்பு தான் கிடைக்கும்" என எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார்.

actor-sv-shekhars-video-talking-about-god-goes-viral

நெட்டிசன்கள்: ஒரு பக்கம் நல்லவர் போன்று பேசினாலும், பெண்களை இழிவாக பேசிவிட்டு இப்படி வேஷம் போடுகிறார் என நெட்டிசன்கள் விமர்சித்துள்ளனர். பெண் பத்திரிகையாளர்களை பற்றிய பேசிய விவகாரத்தில் எஸ்.வி.சேகருக்கு நீதிமன்றம் விலக்கு அளித்துள்ளது குறப்பிடத்தக்கது. இதனிடையே, இவர் பேசியது நல்ல செயலாக இருந்தாலும் நடிகரை போந்று மாத்தி மாத்தி பேசுவதாக நெட்டிசன்கள் விமர்சிக்கின்றனர்.

FAQs
எஸ்.வி.சேகர் இயக்கிய முதல் படம் எது தெரியுமா?

மணல் கயிறு

Filmibeat Entertainment

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X