Ajith - ஆசையாக கேட்டேன்.. அஜித் செய்தது என்ன தெரியுமா?.. எனக்கே இதான் நிலைமை.. பிரபல நடிகர் ஓபன் டாக்

சென்னை: அஜித் இப்போது விடாமுயற்சி படத்தில் நடித்துவருகிறார். கடைசியாக அவர் நடித்த துணிவு திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்ததன் காரணமாக அதே உற்சாகத்தோடு அடுத்த படத்திலும் கமிட்டாகியிருக்கிறார். லைகா நிறுவனம் தயாரிக்க மகிழ் திருமேனி படத்தை இயக்குகிறார். படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்துவருவது குறிப்பிடத்தக்கது. முதல் ஷெட்யூல் அஜர்பைஜானில் நடந்து முடிந்திருக்கிறது. அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்தில் நடிக்கிறார். சூழல் இப்படி இருக்க நடிகர் டெலிபோன் ராஜ் அஜித் குறித்து காட்டமாக பேசியிருக்கிறார்.

அஜித் நடிப்பில் கடைசியாக துணிவு திரைப்படம் சூப்பர் ஹிட்டானது. இதனையடுத்து விடாமுயற்சி படத்தில் நடித்துவருகிறார் அவர். தடையறத்தாக்க, மீகாமன், தடம், கலகத்தலைவன் போன்ற சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய மகிழ் திருமேனி இந்தப் படத்தை இயக்கிவருகிறார். திரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா உள்ளிட்டோர் இந்தப் படத்தில் கமிட்டாகியிருக்கின்றனர். அஜர்பைஜானில் படத்தின் ஷூட்டிங் தொடங்கி ரொம்பவே மும்முரமாக நடந்துவருகிறது. அஜித்தும் முழு ஒத்துழைப்பை கொடுத்துவருகிறார்.

Actor Telephone Raj talks about Ajith Unknown Side

என்ன கதை?: இப்படத்தில் அஜித்தும், திரிஷாவும் கணவன் மனைவியாக நடிக்கிறார்கள் என்றும்; அவர்கள் இருவரும் ஒரு வேலை சம்பந்தமாக வெளிநாடு செல்வார்கள் அப்போது திரிஷா கடத்தப்பட்டுவிடுவார். அவரை அஜித் மீட்பதுதான் ஒன்லைன் என்கிறார்கள் கோலிவுட்டினர். மகிழ் திருமேனி திரைக்கதை அமைப்பதில் கில்லாடி என்பதால் கண்டிப்பாக பக்கா ஆக்‌ஷன் படம் விறுவிறுப்பான திரைக்கதையுடன் ரெடி என்று இப்போதே கூறிவருகிறார்கள் அஜித்தின் ரசிகர்கள்.

அடுத்த லொக்கேஷன் எங்கே?: அதேபோல் அஜர்பைஜான் ஷெட்யூல் முடிந்ததைத் தொடர்ந்து அடுத்தக்கட்டமாக எங்கு ஷூட்டிங் நடக்கும் என்று கேள்வி எழுந்தது. அதன்படி ஒன்று சென்னையில் செட் போட்டு படமாக்குவார்கள் இல்லை ஹைதராபாத் ராமோஜி பிலிம் சிட்டிக்கு செல்வார்கள் என்று கூறப்படுகிறது. படத்தை ஏப்ரல் அல்லது மே மாதத்தில் திரைக்கு கொண்டு வர மகிழ் திருமேனி முழு மூச்சோடு வேலை செய்துவருவதாகவும் ஒரு பேச்சு ஓடியது. ஆனால் சில வாரங்களுக்கு முன்பு அஜித்துக்கு சிறிய அளவிலான அறுவை சிகிச்சை செய்யப்பட்டதால் விடாமுயற்சியின் அடுத்தக்கட்ட ஷூட்டிங் எப்போது தொடங்கும் என்று தெரியவில்லை.

Actor Telephone Raj talks about Ajith Unknown Side

அடுத்த படம்: இதற்கிடையே விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங்கே இன்னும் முடியாத சூழலில் அஜித்தின் அடுத்தப் படம் குறித்த தகவல் கடந்த சில மாதங்களாக பரவியது. அதன்படி திரிஷா இல்லனா நயன்தாரா, அன்பானவன் அடங்காதவன் அசராதவன், மார்க் ஆண்டனி ஆகிய படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் அஜித்தின் 63ஆவது படத்தை இயக்குகிறார். படத்துக்கு குட் பேட் அக்லி என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. 2025ஆம் ஆண்டு பொங்கலுக்கு படம் ரிலீஸாகவிருக்கிறது.

அஜித் நல்லவர் இல்லை: இப்படி அஜித்தை சுற்றி எப்போதும் செய்திகள் வந்துகொண்டிருந்தாலும் அவர் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பவர். மேலும் அவரை பலரும் ஜெண்டில்மேன் என்றே சொல்வார்கள். ஆனால் வடிவேலுவுடன் பல படங்களில் நடித்த டெலிபோன் ராஜ் சமீபத்தில் அளித்த பேட்டியில் அஜித் குறித்து காட்டமாக பேசியிருக்கிறார். அவர் அளித்த பேட்டியில், "அஜித்தை எனக்கு பிடிக்காது. ஒருமுறை ஏவிஎம்மில் அவர் நடித்த படத்தின் ஷூட்டிங் நடந்துகொண்டிருந்தது.

ஆசையாக கேட்டேன்: அப்போது நடிகை ரோஹா, ரமேஷ் கண்ணா, நான் உள்ளிட்ட சிலர் சேர்ந்து அஜித்துடன் குரூப் ஃபோட்டோ எடுத்துக்கொள்ளலாம் என்று நான் ஆசையாக கேட்டேன்.ஆனால் அவரோ முடியாது என்று மறுத்துவிட்டு வேகமாக காரில் ஏறி சென்றுவிட்டார். நடிகராகிய எனக்கே இதுதான் நிலைமை. அவர் நல்லவர் என்று சொல்லவே சமூக வலைதளங்களில் ஒரு கூட்டம் வேலை செய்துகொண்டிருக்கிறது. ஆனால் அவர் அவ்வளவு நல்லவர் எல்லாம் கிடையாது" என்றார். டெலிபோன் ராஜின் இந்தப் பேட்டி ரசிகர்களிடையே கவனம் ஈர்த்திருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X