போதைப் பொருள் கடத்தல் கும்பலுடன் நடிகர் தருணுக்கு தொடர்பா?

தெலுங்கு பட தயாரிப்பாளர் வெங்கடேஸ்வர ராவை போதை பொருட்கள் கடத்தியதாக ஆந்திர போலீசார் கைது செய்துள்ளனர். போதைப் பொருள் கடத்தலுக்கு அவர் பயன்படுத்திய காரும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இந்தக் குற்றத்தை அவர் மும்பையில் செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்கிடையில் போதை பொருள் கடத்தல் கும்பலுடன் முன்னணி நடிகர் தருணுக்கும் தொடர்பு இருப்பதாக தகவல் பரவியுள்ளது. இது தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர போலீசார் இதுபற்றி தீவிரமாக விசாரித்து வருகிறார்கள். தருண் தவிர வேறு சில முக்கிய நடிகர்களுக்கும் இந்த போதை கடத்தல் கும்பலுடன் தொடர்பு இருக்கலாம் என்றும் சந்தேகிக்கின்றனர்.
தருண் பழைய நடிகை ரோஜாரமணியின் மகன். அஞ்சலி படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழில் உனக்கு 20 எனக்கு 18, காதல் சுகமானது போன்ற படங்களில் நடித்துள்ளார்.
தெலுங்கு நடிகை ஆர்த்தி அகர்வாலை இவர் காதலித்து கைவிட்டதும், இதனால் ஆர்த்தி தற்கொலைக்கு முயன்று பின் காப்பாற்றப்பட்டதும் நினைவிருக்கலாம்.


Click it and Unblock the Notifications











