உம்மா தரேன் அம்மா ஆகுறியா!...அப்பா சென்டிமென்ட் ஐட்டம் சாங்.. டி.ஆர்-ஐ கழுவி ஊத்தும் ஃபேன்ஸ்
சென்னை: தமிழ் படங்களில் இடம்பெறும் பாடல்கள் சமீபகாலமாக பெரும் சர்ச்சையாக மாறி வருகின்றன. சில இசையமைப்பாளர்கள் வெளிநாட்டு பாடலின் இசையை காபி அடித்து தமிழ் ரசிகர்களுக்கு ஏற்றவாறு இசையமைத்து ஹிட் அடிக்கின்றனர். ஆனால், இங்கு டி.ஆர் பாடியிருக்கும் பாடல் வரி மிகவும் கொச்சையாக இருப்பதாக விமர்சனம் எழுந்துள்ளது. அப்படி எந்த பாடலை பாடினார் என்றும் தமிழை போற்றும் டி.ஆரா இப்படி பாடியிருக்கிறார் என்றும் ரசிகர்கள் சந்தேகத்துடன் இருக்கின்றனர். அந்த பாடலை பலரும் தேடி பார்க்க தொடங்கிவிட்டனர்.
தமிழில் 60களில் வெளியான படங்களில் காட்சிகளை விட பாடல்களே அதிகம் ஆக்கிரமித்திருந்தனர். காரணம் ரசிகர்களை கவர வேண்டும் என்பதற்காகவே உருவாக்கப்பட்ட பாடல்கள் பின்னாளில் ஒரு படத்தில் 5 பாடல்கள் இருக்க வேண்டிய சூழல் உருவானது. சில நேரங்களில் படத்தை விட பாடல்களுக்காகவே ஹிட் அடித்த படங்களும் இருக்கின்றன. ஆனால், தமிழ் ரசிகர்கள் பாடலின் வரிகளை ரசித்து கேட்டு சிலாகிப்பதும் உண்டு. காதலோ காமமோ, கவிதையாகவே ரசித்து பாடுவார்கள். ஆனால், சில பாடலின் வரிகள் கேட்கவே நாராசமாக இருக்கும் காதில் கேட்கவே கசப்பது போன்ற உணர்வை தரும்.

அந்த வகையில் தற்போது டி. ஆர். பாடியிருக்கும் பாடல் ஒன்று சர்ச்சையாக மாறியுள்ளது. முன்னதாக டி.ஆர்.ஹம்மிங்கில் உருவான கூலி சிக்கு வைப் ஆனது. பெரும் வரவேற்பை பெற்றது. அதேபோன்று மார்க் ஆண்டனி படத்தில் முதல் முறையாக ஜி.வி.பிரகாஷ் இசையில் அவர் பாடிய அதிருதா பாடல் மிகப்பெரிய ஹிட் அடைந்தது. அவர் வாய்ஸ்க்கென்றே தனி ரசிகர்கள் இருக்கின்றனர். அவர் பேசும் வசனம் போன்றே பாடல்களும் வித்தியாசமான உணர்வை தரும். அவரது வாய்ஸில் ஒரு எனர்ஜி இருக்கும்.
அம்மாடி அம்மாடி: டிஆர் இப்போதுதான் அப்படியா என்று கேட்க வேண்டாம் அவர் பாடினாலே ஒரு வைப் மோடுதான் கிரியேட் ஆகும். அவர் வல்லவன் படத்திற்காக யுவன் இசையில் ஒரு பாடலை பாடியிருப்பார். அன்றைய காலத்தில் 90ஸ் கிட்களை கவர்ந்த பாடல் வரிசையில் அதுவும் ஒன்று. அம்மாடி ஆத்தாடி பாடல் பட்டி தொட்டியெங்கும் கலக்கியது. அதேபோன்று ஒஸ்தி படத்தில் கலாசலா பாடலை பாடி கலகலப்பை ஏற்படுத்தியிருப்பார். அவரது குரலில் என்ன மாயம் இருக்கிறது தெரியாது அப்படி ஒரு எனர்ஜி டிரின்க்ஸ் சாப்பிட்டது போன்று உணர்வு கேட்பவர்களுக்கு இருக்கும். டிஆர் வசனம் மட்டும் அல்ல அவர் பாடினாலே அது ஃபயர் ஆகத்தான் இருக்கும் என்பதை நிரூபித்து காட்டியவர் டி.ஆர்.
இளைஞர்களின் குரல்: வீராசாமி படத்திற்கு பிறகு அவர் படங்கள் இயக்குவது கிடையாது. ஒரு சில படங்களில் நடித்தும், கெளரவ தோற்றத்திலும் வந்து செல்கிறார். கவண் படத்தில் அவரது கதாப்பாத்திரத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதையும் தாண்டி அனிருத், ஹிப்ஆப் ஆதி, யுவன், ஜி.வி.பிரகாஷ் போன்ற இளம் இயக்குநர்கள் படத்தில் பாடல்களை பாடி கவர்ந்து வருகிறார். கவண் படத்தில் விஜய் சேதுபதியுடன் சேர்ந்து டான்ஸ், ஆக்சன், பாட்டு என கலக்கியிருப்பார். பழைய டி.ஆர்ரை பார்த்த ரசிகர்களுக்கு மட்டுமே தெரியும் அவர் சாதாரண ஆள் இல்லை அனைத்தும் கற்றரிந்த கலைஞன் என்பது. அதெல்லாம் ஓகே ஆனால், இந்த பாடலை நீங்க பாடலாமா என்று தான் தற்போது ரசிகர்கள் கேட்கின்றனர். இளம் பட்டாளங்களுடன் இணைந்து வைப் மோடுக்கு கொண்டு செல்லும் டி.ஆர் குரலில் இப்படி ஒரு பாடலா என்று நெட்டிசன்கள் வசைபாட தொடங்கி விட்டனர்.
இசையில் புதுமை: டி.ஆர் இயக்கி நடித்த படங்களில் அவரே இசையமைப்பாளராகவும், கவிஞராகவும் இருந்திருக்கிறார். அவரது படத்தில் லெஜண்ட் சிங்கர்கள் எஸ்.பி.பி., ஜேசுதாஸ் பாடல்களை பாடியுள்ளனர். அந்த பாடல்களும் மிகப்பெரிய ஹிட் அடைந்தன. இளைஞர்களின் மனதின் வலிகளை வார்த்தைகளாய் கொண்டு வந்தவர் டிஆர். அவரது பாடல்கள் என்றுமே தனித்துவம் கொண்டது. வீராசாமி படத்தை பலரும் ட்ரோல் செய்வதை பார்க்க முடிகிறது. ஆனால், தமிழை நேசித்த இயக்குநர்களில் இவரும் ஒருவர். இசையில் மட்டும் அல்ல அவர் இயக்கிய படங்களும் புதுமையான விசயங்களை கடத்தி சென்றிருக்கிறது. கலைஞரே அவரை பார்த்து வியந்திருக்கிறார்.
உம்மா தரேன்: 8 தோட்டாக்கள் படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர் வெற்றி. தற்போது அவர் ராஜபுத்திரன் என்ற படத்தில் நடித்து வருகிறார். நடிகர் பிரபு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தின் இசையமைப்பாளர் சித்தார்த் விபின் இசையமைத்திருக்கும் இந்த படத்தில் டி.ஆர் ஒரு பாடலை பாடியுள்ளார். படம் அடுத்த மாதம் ரிலீஸ் ஆக உள்ள நிலையில் பாடலை கவனம் பெற இப்படி ஒரு முயற்சியை படக்குழு எடுத்துள்ளது. அதாவது உம்மா தரேன் அம்மா ஆகுறியா என இடம்பெறும் வரிகளுடன் இப்பாடல் தொடங்குகிறது.
இந்த பாடலை டிஆர் பாடும் முன்பு ஷாக் ஆகியுள்ளார். பின்னர் இந்த பாடலை பாடியுள்ளார். மேலும், இப்படத்தில் சலீம் 2 படத்தில் மஸ்காரா பாடலுக்கு நடனம் ஆடிய பிரியா அஷ்மிதா குத்தாட்டம் போட்டுள்ளார். ஒரு பையன் அப்பாவை சந்தோசப்படுத்துவதற்காக உருவாகும் பாடல்தானாம் இது. பாட்டின் சுட்சுவேசன் அப்பா மகன் சென்டிமென்ட் என சொல்லிவிட்டு இப்படியொரு பாடலையா வைப்பது. அதுவும் குடும்ப படம் என்று கூறி கும்மியடிக்க விட்டிட்டீர்களே என போஸ்ட் போட்டுள்ளனர் ரசிகர்கள் என்ன கன்றாவி வரிகள் இது. தமிழ் படங்களை ஏன் இப்படி கெடுக்கிறீர்கள் என நெட்டிசன்கள் விமர்சிக்க தொடங்கிவிட்டனர். டிஆர் பாடினால் ஃபயராக இருக்கும் தான். அதற்காக வரிகளில் இப்படி ஃபயர் தேவைதானா. இசையமைப்பாளர் சித்தார்த் விபினுக்கு ஹிட் கொடுக்க வேண்டிய அவசியம் இருப்பதால் இப்படி ஒரு பாட்டிற்கு இசையமைக்க ஓகே சொல்லியிருப்பார் போலும். அவரும் அனிருத் ரேஞ்சிற்கு வருவதற்காக இப்படியா செய்வது என ரசிகர்கள் கமாண்ட் அடிக்கின்றனர்.
ஆனால், இதில ஏன் டி.ஆர்-ஐ பாட வைத்தீர்கள். அவரையும் வைப் மோடுக்கு கொண்டு வரேன் சொல்லி ஜல்லி ஜல்லியா நொருக்கிட்டீங்களே என அவரது ரசிகர்கள் கமாண்ட் பதிவிட்டுள்ளனர். இதெல்லாம் ஒரு பாட்டா என விமர்சனம் எழுந்திருக்கிறது. ராஜபுத்திரன் படத்திற்கு பெரிய புரோமோஷன் தேடுறாங்களாம், அதற்கு இப்படி ஒரு பாட்டை போட்டால் மக்களும் திட்டியாவது படத்தை பார்க்க வருவார்கள் என்ற நல்ல எண்ணத்தோடு உம்மா தரேன் அம்மா ஆகுறியா பாடலை பாட வைத்துள்ளனர் என்று நெட்டிசன்கள் வறுத்தெடுக்க தொடங்கிவிட்டனர்.


Click it and Unblock the Notifications











