மாண்புமிகு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களுக்கு நடிகர் உதயாவின் கடிதம்

சென்னை: நடிகர் உதயா தமிழ் சினிமாவில் குறிப்பிட்ட சில நல்ல திரைப்படங்களில் நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் மிகவும் பிரபலமான இயக்குனர் ஏ எல் விஜய் அவர்களது சகோதரன் உதயா என்பது குறிப்பிடத்தக்கது .

உதயாவின் மனைவி கிருத்திகா தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் ஒரு டப்பிங் கலைஞர். உதயாவின் அப்பா ஏ. எல்.அழகப்பன் பல வித்தியாசமான திரைப்படங்களை தயாரித்த ஒரு முக்கியமான தயாரிப்பாளர் ஆவார்.

சமூக அக்கறை கொண்டு பலவிதமான குறும்படங்களை உதயா இதற்கு முன்பு இயக்கியுள்ளார் அதற்காக பாராட்டையும் பெற்றுள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே. இப்பொழுது நடந்து வரும் சூழலில் கொரானா விழிப்புணர்வு மற்றும் திரையரங்கத்திற்கு மக்கள் வருகை தருவதை பற்றி முதல்வருக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளார் உதயா .

அன்பு வணக்கம்.

அன்பு வணக்கம்.

பதவி ஏற்ற நாள் முதல் பம்பரமாக சுற்றி சுழன்று அனைத்து தரப்பு மக்களுக்கும் நல்லாட்சி வழங்கி எளிமைக்கு எடுத்துக்காட்டாகவும் உழைப்புக்கு உதாரணமாகவும் விளங்கி வருகிறீர்கள்.

கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக தாங்கள் தொடர்ந்து எடுத்து வரும் அற்புதமான நடவடிக்கைகளுக்கு மிக்க நன்றி.

முன்னெச்சரிக்கை

முன்னெச்சரிக்கை

தடுப்பூசி போட்டுக்கொண்ட சான்றிதழ் இல்லாதவர்களை நேற்று முதல் திரையரங்குகள் உள்ளே அனுமதிக்காமல் திருப்பி அனுப்பி வருகின்றன என்பதை தங்களின் மேலான கவனத்திற்கு எடுத்து வர விரும்புகிறேன். இதனால் பல திரையரங்குகளில் பார்வையாளர்களே இல்லை எனலாம்.

கொரோனாவை முற்றிலும் ஒழிப்பதற்கான தங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மனமாரப் பாராட்டுகிறோம்.

கால அவகாசத்தை

கால அவகாசத்தை

தடுப்பூசி போட்டுக்கொண்ட சான்றிதழ் இல்லாதவர்கள் திரையரங்குகள் மற்றும் மால்களில் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்பது குறித்த விழிப்புணர்வை போதுமான அளவில் மக்களிடம் ஏற்படுத்த சிறிது கால அவகாசத்தை வழங்குமாறு தங்களை பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம். ஏனென்றால், இந்த திடீர் அறிவிப்பின் காரணமாக புதிய திரைப்படங்களின் வசூல் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பிலிருந்து திரையுலகம் மெல்ல மெல்ல மீண்டு வரும் நிலையில், இதனால் மீண்டும் பெரும் நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளது.

Recommended Video

Actor Bharani | Cool Suresh | Marimuthu Speech | Thael Audio Launch |Filmibeat Tamil
முயற்சிகளுக்கு

முயற்சிகளுக்கு

எனவே, எனது கோரிக்கையை கனிவுடன் பரிசீலிக்குமாறு மாண்புமிகு முதல்வர் அவர்களை பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். கொரோனாவை ஒழிப்பதற்கான தங்களின் முயற்சிகளுக்கு மனமார்ந்த ஒத்துழைப்பை வழங்க திரையுலகம் உள்ளிட்ட அனைவரும் உறுதி கூறுகிறோம்.

மிக்க நன்றி,

பணிவன்புடன்,

நடிகர் உதயா

என்று நடிகர் உதயா குறிப்பிட்டு உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X