சிங்கமுத்து ஆதரவாளர் புகார்... வடிவேலு உதவியாளர் கைது!

நாங்க புதுசா என்ற பெயரில் படமெடுத்து வருபவர் கண்ணன். இந்தப் படத்தில் சிங்கமுத்து தனி காமெடியனாக நடிக்கிறார்.
சாலிகிராமத்தில் வடிவேலு அலுவலகம் எதிரில் கண்ணன் வீடு உள்ளது. அவர் தனது குழந்தைக்கு அங்கு வைத்து பிறந்த நாளை கொண்டாடினார். விழாவுக்கு சிங்கமுத்துவை அழைத்து இருந்தார். வீட்டுக்கு வந்த சிங்கமுத்துவுக்கு பட்டாசு வெடித்து வரவேற்பு கொடுத்தார். தங்களை வெறுப்பேற்றுவதற்காகவே இவ்விழா என வடிவேலு ஆட்கள் கருதினர். இதை எதிர்த்து போலீசில் புகார் செய்தனர்.
இதைத் தொடர்ந்து தனது வீட்டில் வடிவேலு ஆட்கள் புகுந்து உறவினர்களை தாக்கியதாக போலீஸ் கமிஷனரிடம் மனு கொடுத்தார் தயாரிப்பாளர் கண்ணன். சிங்கமுத்துவை வைத்து படம் எடுப்பதை கண்டித்து இந்த தாக்குதலில் ஈடுபட்டதாகவும் அவர் புகாரில் தெரிவித்தார்.
இதன் அடிப்படையில் போலீசார் 448, 323 மற்றும் 341 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து வடிவேலு உதவியாளர் சத்தியேந்திரனை கைது செய்து சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். உடனடியாக அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.
வடிவேலுவின் இன்னொரு உதவியாளரான சங்கர் கொடுத்த புகாரின் பேரில் சிங்கமுத்து, கண்ணன் உள்பட 14 பேர் மீது போலீசார் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











