Actor Vadivelu: மாமன்னன் படத்துக்கு அப்புறம் ஒரே சோகம்தான்.. வடிவேலு சொன்ன உண்மை!
சென்னை: சென்னையில் சர்வதேச திரைப்பட விழா நடந்து முடிந்துள்ளது. இதில் சிறந்த திரைப்படமாக அயோத்தி தேர்வாகியுள்ளது.
இதேபோல மாமன்னன் படத்தில் நடித்த வடிவேலு சிறந்த நடிகராக தேர்வாகியுள்ளார். அவர் நிகழ்ச்சியில் பங்கேற்ற வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் தான் மாமன்னன் படத்தில் நடித்ததற்கு பிறகு ஒரே சோகமாகிவிட்டதாக நிகழ்ச்சியில் பேசிய வடிவேலு குறிப்பிட்டுள்ளார்.

சென்னை சர்வதேச திரைப்பட விழா: சென்னையில் சர்வதேச திரைப்பட விழா கடந்த சில தினங்களாக நடத்தப்பட்டு வந்த நிலையில் இதில் சிறந்த திரைப்படமாக சசிக்குமார் நடிப்பில் வெளியான அயோத்தி படம் தேர்வாகியுள்ளது. இதையொட்டி நிகழ்ச்சியில் பங்கேற்ற அயோத்தி படத்தின் இயக்குநர் மந்தரமூர்த்தி மற்றும் தயாரிப்பாளர் ரவீந்திரனுக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசாக கொடுக்கப்பட்டுள்ளது. இரண்டாவது படமாக உடன்பால் படம் தேர்வாகியுள்ள நிலையில் இந்த படத்தின் இயக்குநர் கார்த்திக் ஸ்ரீனிவாசன் மற்றும் தயாரிப்பாளர் வெள்ளதுரைக்கு 50 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பரிசாக வழங்கப்பட்டன.
சிறந்த நடிகராக தேர்வான வடிவேலு: இதனிடையே மாமன்னன் படத்தில் நடித்ததற்காக நடிகர் வடிவேலு சிறந்த நடிகராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவருக்கும் 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. இந்த விருதை பெறுவதற்காக வந்திருந்த நடிகர் வடிவேலு விழா மேடைக்கு செல்வதற்கு முன்னதாக ரசிகர்களின் கரகோஷத்திற்கு கையை ஆட்டி தன்னுடைய உற்சாகத்தை தெரிவித்தார். அவர் காரிலிருந்து இறங்கியது முதல் நிகழ்ச்சியில் பரிசை பெற்று பின்பு பேசியது வரை சமூக வலைதளங்களில் அதிகமான வீடியோக்களை ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர். முன்னதாக நிகழ்ச்சியில் மாமன்னன் படத்தின் தந்தானத்தானா பாடலை அவர் பாடிக்காட்டி அசத்தினார்.


வடிவேலு ரீ என்ட்ரி: தன்னுடைய காமெடியால் தொடர்ந்து ரசிகர்களை சிரிக்க வைத்தவர் நடிகர் வடிவேலு. காமெடியனாக மட்டுமில்லாமல் நாயகனாகவும் இம்சை அரசன் 23ம் புலிகேசி உள்ளிட்ட படங்களில் நடித்து வந்த வடிவேலு தவிர்க்க முடியாத காரணங்களால் தொடர்ந்து படங்களில் நடிக்காமல் விலகியிருந்தார். இந்நிலையில் தற்போது சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்து சந்திரமுகி 2, மாமன்னன் போன்ற படங்களில் நடித்துள்ளார். சந்திரமுகி படத்தில் நடிகர் ரஜினிகாந்த்துடன் முருகேசன் என்ற கேரக்டரில் நடித்து புகழ்பெற்ற வடிவேலு, தற்போது சந்திரமுகி 2 படத்தில் ராகவா லாரன்சுடன் நடித்து ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

வரவேற்பை தந்த மாமன்னன் படம்: இந்நிலையில் உதயநிதியுடன் இணைந்து வடிவேலு நடித்திருந்த மாமன்னன் படத்தில் அவரது கேரக்டர் மிகச்சிறப்பான விமர்சனங்களை பெற்றுள்ளது. இந்தப் படத்தில் உதயநிதியின் அப்பாவாக நடித்து ரசிகர்களை கவர்ந்துள்ளார் வடிவேலு. நகைச்சுவை மாமன்னனான வடிவேலு, மாமன்னன் படத்தில் தன்னுடைய உணர்வுபூர்வமான நடிப்பின்மூலம் தான் எப்போதுமே நடிப்பில் கிங் தான் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார். இந்தப் படம் உதயநிதிக்கு கடைசி படமாக அமைந்துள்ள நிலையில், மாரி செல்வராஜ் இந்தப் படத்தை இயக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











