என்ன கன்றாவிடா இது.. உடம்பில் ஒட்டு துணி இல்லாமல் மரம் ஏறும் வில்லன் நடிகர்!

சென்னை: தளபதி விஜய் நடித்த சூப்பர் ஹிட் திரைப்படமான 'துப்பாக்கி' யில் மெயின் வில்லனாக நடித்து தமிழ் ரசிகர்களிடம் தனி அடையாளம் பெற்றவர் பிரபல பாலிவுட் நடிகர் வித்யுத் ஜமால். தற்போது அவர் பகிர்ந்துள்ள ஒரு வீடியோ, சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

1980 டிசம்பர் 10-ம் தேதி, ஜம்மு & காஷ்மீரில் பிறந்த வித்யுத் ஜமால் தற்போது 46 வயதாகிறார். ஆரம்பத்தில் வில்லன் நடிகராக அறிமுகமான இவர், பின்னர் ஹீரோவாகவும் பல இந்தி படங்களில் நடித்துள்ளார். 2011-ம் ஆண்டு ஜூனியர் என்டிஆர் நடித்த 'சக்தி' திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான வித்யுத், 2012-ம் ஆண்டு ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய், காஜல் அகர்வால் நடித்த 'துப்பாக்கி' படத்தில் மெயின் வில்லனாக நடித்து மாஸ் காட்டினார். அதே ஆண்டில் வெளியான அஜித் நடித்த 'பில்லா 2' படத்திலும் அவரது நடிப்பு கவனம் பெற்றது.

vidyut jamwal Bollywood
Photo Credit:

நடிகர் வித்யுத் ஜமால்: அதன் பிறகு சில ஆண்டுகள் தமிழ் சினிமாவில் அவர் முகம் காட்டாமல் இருந்த நிலையில், மீண்டும் பல ஆண்டுகளுக்குப் பிறகு ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த 'மதராஸி' படத்தில் நடித்திருந்தார். சினிமாவைத் தாண்டி, வித்யுத் ஜமால் தனது வித்தியாசமான வாழ்க்கை முறை காரணமாகவும் அடிக்கடி செய்திகளில் இடம் பிடித்து வருகிறார். குறிப்பாக, 2023-ம் ஆண்டு இமயமலையில் முழு நிர்வாணமாக காட்டுப்பகுதிகளில் அடுப்பை பற்ற வைத்து சமைக்கும் புகைப்படங்கள், நதியில் இறங்கி குளிக்கும் புகைப்படங்கள் ஆகியவற்றை அவர் பகிர்ந்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தினார். அப்போது அவர், "14 ஆண்டுகளுக்கு முன்பு இந்த பயணம் தொடங்கியது. ஒவ்வொரு ஆண்டும் 7 முதல் 10 நாட்கள் முழுமையான தனிமையில் இருப்பேன். இது என் வாழ்க்கையின் பிரிக்க முடியாத ஒரு பகுதி"
என்று பதிவிட்டிருந்தார்.

நிர்வாணமாக: வித்யுத் ஜமால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், உடம்பில் ஒட்டுத் துணி இல்லாமல் மரத்தில் ஏறும் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், "இது என்ன கன்றாவிட வீடியோ?" என்று கேள்வி எழுப்பி பல்வேறு கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். அந்த ஆன்மீக-தனிமை பயணத்தின் ஒரு பகுதியாக ஆடை இல்லாமல் மரத்தில் ஏறும் வீடியோவை வெளியிட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும், இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X