விஜய் என்னோட அந்தப் படத்தை பார்த்துவிட்டு பாராட்டினார்... எந்த படம் தெரியுமா!

சென்னை: நடிகர் விஜய் ஆண்டனி இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இப்பொழுது தனித்துவமான நடிகராக வலம் வந்துள்ளார்

கடைசியாக இயக்குனர் ஆனந்த கிருஷ்ணன் இயக்கத்தில் நடித்த கோடியில் ஒருவன் மிகப்பெரிய வெற்றி பெற்றது

இப்பொழுது அக்னி சிறகுகள், தமிழரசன், காக்கி, ரத்தம் என பல படங்களில் ஹீரோவாக நடித்து வரும் விஜய் ஆண்டனி தன்னுடைய படத்தை விஜய் பார்த்துவிட்டு விஜய் பாராட்டியுள்ளது பற்றி பகிர்ந்துள்ளார்.

இசையமைப்பாளராக இருந்தபோதே ஹீரோவாக

இசையமைப்பாளராக இருந்தபோதே ஹீரோவாக

இசையமைப்பாளராக இருந்து நடிகராவது அவ்வளவு சுலபமான காரியம் இல்லை. அப்படியே நடிகராக ஆனாலும் ஹீரோவாக நடித்து ரசிகர்கள் ஏற்றுக் கொள்வது மிகப் பெரிய வரம் என்றே சொல்லலாம். ஆனால் விஜய் ஆண்டனி தமிழ் சினிமாவில் வெற்றிகரமான இசையமைப்பாளராக இருந்தபோதே ஹீரோவாக அறிமுகமாகி ரசிகர்களை ரசிக்க வைத்தவர். தனித்துவமான இசை, கேட்டவுடனே குத்தாட்டம் போடும் குத்து பாடல்கள் என தமிழ் ரசிகர்களை குஷி படுத்திய விஜய் ஆண்டனி இப்பொழுது தமிழ் சினிமாவில் மிகச் சிறந்த நடிகராக வலம் வந்து கொண்டுள்ளார்

சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது

சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது

இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர் இயக்கத்தில் வெளியான சுக்ரன் திரைப்படத்துக்கு இசையமைத்தன் மூலம் இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர் உடன் மிகவும் நெருக்கமான விஜய் ஆண்டனி அதைத் தொடர்ந்து பந்தயம் என்ற படத்திற்கும் இசையமைத்தார். இதனால் விஜய்- க்கும் மிகவும் நெருக்கமானார். பின் விஜய்க்கு வேட்டைக்காரன் மற்றும் வேலாயுதம் உள்ளிட்ட படங்களுக்கு விஜய் ஆண்டனி இசையமைத்திருந்தார். விஜய் மற்றும் விஜய் ஆண்டனி கூட்டணியில் வெளியான பாடல்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. இன்றும் இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகருக்கும் விஜய்க்கு மிக நெருங்கிய நண்பராக விஜய் ஆண்டனி இருந்து வருகிறார்.

டெக்னிக்கை அறிந்த

டெக்னிக்கை அறிந்த

நல்ல தரமான கதைகளை கொடுத்தால் ரசிகர்கள் கட்டாயம் கொண்டாடுவார்கள் என்ற டெக்னிக்கை அறிந்த விஜய் ஆண்டனி தொடர்ந்து வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் கடைசியாக இயக்குனர் ஆனந்த கிருஷ்ணன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான கோடியில் ஒருவன் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இப்பொழுது அக்கினி சிறகுகள், காக்கி, ரத்தம், தமிழரசன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார்.

விஜய் பாராட்டினார்

விஜய் பாராட்டினார்

இந்த நிலையில் நான் படத்தின் வெற்றிக்கு பிறகு விஜய் ஆண்டனி நடித்த சலீம் படம். 2014ஆம் ஆண்டு வெளியான இந்த படம் த்ரில்லர் கதை களத்தில் வெளியானது.இதில் விஜய் ஆண்டனி டாக்டராக நடித்திருப்பார் . சலீம் திரைப் படத்தை நடிகர் விஜய் பார்த்துவிட்டு தன்னை வெகுவாக பாராட்டினார் என சமீபத்தில் விஜய் ஆண்டனி கொடுத்த பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X