அட நம்ம தளபதி விஜய்ய பாருங்கய்யா… குட்டி கிருஷ்ணர் வேடத்தில்… வைரலாகும் போட்டோ!
சென்னை : கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு நடிகர் விஜய் சிறுவயதில் கிருஷ்ணன் வேடத்தில் போஸ் கொடுத்துள்ள புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது.
அந்த புகைப்படத்தில் நடிகர் விஜய் கிருஷ்ணர் போலவே அட்டகாசமாக போஸ் கொடுத்துள்ளார்.
இந்த புகைப்படத்திற்கு லைக்குகள் குவிந்து வரும் நிலையில், விஜய் ரசிகர்கள் இந்த புகைப்படத்தை வைரலாக்கி உள்ளனர்.

நாளைய தீர்ப்பு
நடிப்பின் மீது ஆர்வம் ஆசை, ஏன் தீராத காதல் இருந்ததால் திரைத்துறையில் தனது தடத்தை பதிக்க நுழைந்தார் விஜய். தனது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரின் இயக்கத்தில் நாளைய தீர்ப்பு திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார் . இத்திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெற்றுத்தரவில்லை.

இளைய தளபதி
விஜய்காந்துடன் செந்தூரப்பாண்டி படத்தில் இணைந்து நடித்திருந்தார். பின்னர், ரசிகன் படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படத்தில் தான் இளைய தளபதி என்ற அடைமொழி விஜய்க்கு வழங்கப்பட்டது. தற்போது முன்னணி நடிகர் என பெயர் எடுத்து, தெறி, மெர்சல்,சர்கார், மாஸ்டர் என பிளாக் பஸ்டர் வெற்றிப்படங்களை கொடுத்து வருகிறார். தற்போது இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பில் பரபரப்பாக நடித்து வருகிறார். இந்த படத்தில் முதல் முறையாக விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார்.

அனிருத் இசை
அனிருத் இசை அமைக்கும் இந்தப் படத்துக்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நிறைவடைந்த நிலையில், ஈசிஆரை தொடர்ந்து சென்னையிலுள்ள கோகுலம் ஸ்டூடியோவில் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

டெல்லியில் படப்பிடிப்பு
சமீபத்தில் சென்னையில் படப்பிடிப்பு தளத்தில் கிரிக்கெட் வீரர் தோனியை விஜய் நேரில் சந்தித்த புகைப்படங்கள் எல்லாம் சமூக வலைதளங்களில் வைரலானது. விரைவில் படக்குழு இறுதிக்கட்ட படப்பிடிப்பிற்காக செப்டம்பர் மூன்றாம் வாரத்தில் டெல்லி செல்கின்றனர். அங்கு 5 நாட்கள் படப்பிடிப்பு நடைபெறுகிறது. அதை முடித்துக்கொண்டு சென்னை திரும்பும் படக்குழுவினர் இறுதிக்கட்ட படப்பிடிப்பை தொடங்குவார்கள் என்றும், நவம்பர் மாதத்திற்குள் முழு படப்பிடிப்பும் நிறைவடைந்து விடும் என்று கூறப்படுகிறது.

பீஸ்ட் பொங்களுக்கு
பீஸ்ட் பொங்கல் விருந்தாக 2022ம் ஆண்டு ஜனவரி மாதம் தியேட்டர்களில் வெளியாகும் என்ற தகவல் இணையத்தில் வெளியாகி உள்ளது. பீஸ்ட் படத்தின் முதல் சிங்கிளை தீபாவளி அன்று வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. தீபாவளி, பொங்கல் என விஜய் ஃபேன்ஸ் செம்ம குஷியாக பண்டிகை கொண்டாட திட்டமிட்டுள்ளனர்.

குட்டி கிருஷ்ணர்
இந்நிலையில், கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு நடிகர் விஜய் சிறுவயதில் கிருஷ்ணன் வேடத்தில் போஸ் கொடுத்துள்ள புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது. அந்த புகைப்படத்தில் நடிகர் விஜய் கையில் புல்லாங்குழல் வைத்துக்கொண்டு, தலையில் தலைப்பாகை கட்டி, நெற்றியில் அழகாக பொட்டு வைத்து, நகைகளை அணிந்து கொண்டு போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படத்திற்கு லைக்குகள் குவிந்து வரும் நிலையில், விஜய் ரசிகர்கள் இந்த புகைப்படத்தை குட்டி கிருஷ்ணர் என்று வைரலாக்கி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











