சின்ன கேப்டனுக்காக கதைக்கேட்கும் தளபதி?

நடிகர் விஜய் விஜயகாந்தின் மகன் சண்முகப்பாண்டியனுக்காக இயக்குநர்களிடம் கதை கேட்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை: நடிகர் விஜய் விஜயகாந்தின் மகன் சண்முகப்பாண்டியனுக்காக இயக்குநர்களிடம் கதை கேட்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜயகாந்தின் இளையமகன் சண்முகப்பாண்டியன் திரைப்படங்களில் நடித்து வருகிறார். அவர் நடித்த சகாப்தம் படம் பெரியளவில் ஹிட்டாகவில்லை.

Actor vijay asking story for Vijayakanth son Shanmugapandiyan

இருப்பினும் மதுரவீரன் எதிர்ப்பார்த்த அளவுக்கு வசூலித்தது. இதைத்தொடர்ந்து தமிழன் என்று சொல்லடா படத்தில் நடித்து வருகிறார் சண்முகப்பாண்டியன். இதில் விஜயகாந்தும் கவுரவத் தோற்றத்தில் நடிக்கிறார்.

இந்நிலையில் சண்முகப்பாண்டியனுக்கு டர்னிங் பாயிண்டு கொடுக்கும் வகையில் அவரை வைத்து ஹிட் படத்தை கொடுக்க முடிவு செய்துள்ளாராம் நடிகர் விஜய். இதற்காக இயக்குநர்களிடம் சண்முகப்பாண்டியனுக்கு ஏற்றார்போல் கதை கேட்டு வருகிறாராம் விஜய்.

விஜயின் நாளைய தீர்ப்பு படம் கைக்கொடுக்காத நிலையில் செந்தூரப்பாண்டி மூலம் விஜய்க்கு உதவினார் நடிகர் விஜயகாந்த். இந்த நன்றிக்கடனுக்காக விஜய், சண்முகப்பாண்டியனுக்கு ஒரு வாழ்க்கையை ஏற்படுத்தி தர எண்ணியுள்ளாராம்.

தனது சொந்த செலவில் படத்தை தயாரிக்கவுள்ளதாகவும் இந்தப்படத்தில் இசையமைப்பாளர், கேமராமேன் என பெரிய டெக்னிஷியன்களை பயன்படுத்தவும் நடிகர் விஜய் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X