29 ஆண்டு கலைப்பயணம்… ட்ரெண்டாகும் விஜய்யின் சிறப்பு போஸ்டர்

சென்னை : நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் சிறு வயதிலேயே தன்னை நடிகராக நிலை நிறுத்திக் கொண்டுள்ளார்.

தொடர்ந்து தளபதியாக தனது ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார்.

தற்போது 29 ஆண்டுகளை சினிமாவில் அவர் கடந்துள்ளதையடுத்து அவரது சிறப்பு போஸ்டர் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.

நடிகர் விஜய்

நடிகர் விஜய்

நடிகர் விஜய் சிறு வயதாக இருந்தபோதே சினிமாவில் கால் பதித்து தனது கேரியரை துவக்கியவர். தன்னுடைய தந்தையின் படங்களில் நடித்ததன்மூலம் இவர் சிறப்பான அறிமுகத்தை பெற்றார். தொடர்ந்து கடந்த 1992ல் நாளைய தீர்ப்பு படத்தின்மூலம் தன்னை ஹீரோவாகவும் நிலைநிறுத்திக் கொண்டார். தொடர்ந்து தன்னுடைய கடினமான உழைப்பால் ரசிகர்களுக்கு சிறப்பான படங்களை கொடுத்து வருகிறார்.

ரசிகர்கள் கொண்டாட்டம்

ரசிகர்கள் கொண்டாட்டம்

ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கு உரியவராக காணப்படுகிறார் விஜய். இளைய தளபதி என்றும் தளபதி என்றும் இவரை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். தொடர்ந்து தேர்ந்தெடுத்த கதைகளில் நடித்துவரும் இவர் புதிய இயக்குநர்களுக்கும் வாய்ப்புக்களை அளித்து வருகிறார்.

29 ஆண்டுகள் நிறைவு

29 ஆண்டுகள் நிறைவு

இந்நிலையில் இவர் கலைத்துறைக்கு வந்து 29 ஆண்டுகள் கடந்துள்ளதை சமூக வலைதளங்களில் சக நடிகர்கள் மற்றும் ரசிகர்கள் ட்ரெண்டாக்கி வருகின்றனர். இதை குறிக்கும் வகையில் விஜய்யின் புதிய போஸ்டர் ஒன்று வடிவமைக்கப்பட்டு சமூக வலைதளங்களில் ட்ரெண்டாக்கப்பட்டு வருகிறது.

சிறப்பு போஸ்டர்

சிறப்பு போஸ்டர்

நடிகர் பிரேம்ஜி அமரன், பிரசன்னா, தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு உள்ளிட்ட பலரும் இந்த போஸ்டரை ஷேர் செய்து வருகின்றனர். 29 ஆண்டுகால விஜய்யிசம் என்ற பெயரில் இது ட்ரெண்டாகி வருகிறது. இதையொட்டி விஜய்யின் ரசிகர்களும் பல்வேறு நலத்திட்டங்களை திட்டமிட்டு நிகழ்த்தி வருகின்றனர். தொடர்ந்து அவரது இந்த நிகழ்வை திருவிழாவாக கொண்டாடி வருகின்றனர்.

பீஸ்ட் படம்

பீஸ்ட் படம்

தற்போது நடிகர் விஜய் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கிவரும் பீஸ்ட் படம் சிறப்பான வகையில் உருவாகி வருகிறது. இதன் படப்பிடிப்பு ஏறக்குறைய நிறைவடைந்த நிலையில் அடுத்த ஆண்டு கோடைக் கொண்டாட்டமாக படம் வெளியாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. படத்தில் விஜய்க்கு ஜோடியாகியுள்ளார் பூஜா ஹெக்டே.

மாஸ்டர் படம்

மாஸ்டர் படம்

முன்னதாக மாஸ்டர் படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் விஜய். இந்தப் படம் வசூல்ரீதியாக சிறப்பான வெற்றியை பெற்றது. கல்லூரி பேராசிரியராக இருப்பவர் எவ்வாறு சிறுவர் சீர்த்திருத்த பள்ளியில் ஆசிரியராக மாணவர்களின் நலனுக்காக பணியாற்றுகிறார் என்பதாக அந்தப் படத்தின் கதைக்களம் அமைந்திருந்தது.

சிறப்பான படங்கள்

சிறப்பான படங்கள்

தொடர்ந்து சிறப்பான படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் விஜய். பீஸ்ட் படத்திற்கு பிறகு அவர் அடுததடுத்து நடிக்கவுள்ள படங்கள், அதன் இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் என அடுத்தடுத்த செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. இது ரசிகர்களுக்கு மிகுதியான உற்சாகத்தை அளித்து வருகிறது.

29 ஆண்டுகள் நிறைவு

29 ஆண்டுகள் நிறைவு

தற்போது சினிமாவில் தன்னுடைய 29 ஆண்டுகளை பூர்த்தி செய்துள்ள நடிகர் விஜய் தொடர்ந்து மேலும் பல ஆண்டுகள் தன்னுடைய தேர்ந்தெடுத்த நடிப்பால் ரசிகர்களை கவர்வார் என்பதில் சிறிதும் ஐயம் இல்லை. தொடர்ந்து சிறப்பான படங்களை தனது ரசிகர்களுக்கும் பரிசளிக்க அவர் சிறப்பாக வேலை செய்து வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X