ட்விட்டரில் 10 ஆண்டுகளை கடந்த நடிகர் விஜய்.. இதுவரை எத்தனை ட்வீட் செய்துருக்காரு தெரியுமா?

சென்னை : ரசிகர்களின் இதயத்துடிப்பை உணர்ந்து அதற்கேற்ப ஸ்கிரிப்ட்களை செலக்ட் செய்து படங்களை கொடுப்பதில் வல்லவராக உள்ளார் நடிகர் விஜய்.

நடிகர் விஜய் ட்விட்டர் பக்கத்தில் கடந்த 2013ம் ஆண்டு முதல் இணைந்து தன்னுடைய ரசிகர்களை சந்தித்து வருகிறார்.

தற்போது அவர் ட்விட்டர் பக்கத்தில் இணைந்து 10 ஆண்டுகளை கடந்துள்ளார். அவரை லட்சக்கணக்கான ரசிகர்கள் பின்தொடர்ந்து வருகின்றனர்.

நடிகர் விஜய்

நடிகர் விஜய்

நடிகர் விஜய் கோலிவுட்டில் சூப்பர் ஹீரோவாக தன்னை ரசிகர்களின் இதயத்தில் நிலை நிறுத்தியுள்ளார். நாளைய தீர்ப்பு படத்தில் துவங்கிய இவரது பயணம் தற்போது தளபதி 67 படத்தில் நிலை கொண்டுள்ளது. இந்தப்படத்தின் சூட்டிங் தற்போது காஷ்மீரின் ஸ்ரீநகரில் நடைபெற்று வருகிறது.

தளபதி 67 படம்

தளபதி 67 படம்

தளபதி 67 படத்தின் சூட்டிங்கில் பங்கேற்பவர்கள் விவரங்களை படக்குழு கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவித்தது. த்ரிஷா, பிரியா ஆனந்த், சஞ்சய் தத், கௌதம் மேனன் உள்ளிட்டவர்கள் விஜய்யுடன் இந்தப் படத்தில் நடித்து வருகின்றனர். இடையில் சில தினங்கள் த்ரிஷா சென்னை திரும்பிய நிலையில் பல்வேறு வதந்திகளும் உலவின.

 2013ம் ஆண்டில் ட்விட்டரில் இணைந்த விஜய்

2013ம் ஆண்டில் ட்விட்டரில் இணைந்த விஜய்

நடிகர் விஜய் சமூக வலைதளப்பக்கமான ட்விட்டரில் கடந்த 2013ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இணைந்தார். தொடர்ந்து சமூக வலைதளங்களில் கருத்து கூறும்வகையில் இல்லாமல் முக்கியமான விஷயங்களை மட்டுமே தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அவர் பதிவிடுவார். இந்த 10 ஆண்டுகளில் இதுவரை 391 ட்வீட்களை மட்டுமே அவர் பகிர்ந்துள்ளார்.

4.3 மில்லியன் பாலோயர்கள்

4.3 மில்லியன் பாலோயர்கள்

தன்னுடைய படங்கள் குறித்த விவரங்கள், பாடல், டைட்டில், ட்ரெயிலர் உள்ளிட்ட வெளியீடுகள் குறித்த தகவல்களை அவர் பெரும்பாலும் பகிர்ந்துக் கொள்வார். குறைந்த அளவிலான ட்வீட்களை மட்டுமே விஜய் பகிர்ந்திருந்தாலும் அவரை ட்விட்டர் பக்கத்தில் 4.3 மில்லியன் ரசிகர்கள் பாலோ செய்து வருகின்றனர்.

யாரையும் பாலோ செய்யாத விஜய்

யாரையும் பாலோ செய்யாத விஜய்

இதனிடையே, அவர் யாரையும் பாலோ செய்யவில்லை. கடந்த 3ம் தேதி தன்னுடைய லியோ படத்தின் டைட்டில் ப்ரமோவை அவர் இறுதியாக பகிர்ந்திருந்தார். முன்னதாக கடந்த ஜனவரியில் வாரிசு படத்தின் ட்ரெயிலரை பகிர்ந்திருந்த விஜய், ஷாருக்கின் பதான் படத்தின் ட்ரெயிலர் வெளியீட்டிற்கும் வாழ்த்து தெரிவித்திருந்தார்.

5 மில்லியன் வியூஸ் பெற்ற டைட்டில் ப்ரமோ

5 மில்லியன் வியூஸ் பெற்ற டைட்டில் ப்ரமோ

இவ்வாறு சில குறிப்பிட்ட நிகழ்வுகளுக்கு மட்டுமே அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பயன்படுத்தி வருகிறார். இதனால் அவரது ட்விட்டர் பக்கத்தில் அவர் பகிரும் இந்த சில விஷயங்கள் மிகுந்த வரவேற்பையும் வியூசையும் லைக்ஸ்களையும் பெற்று வருகின்றன. சமீபத்தில் அவர் பகிர்ந்திருந்த தளபதி 67 டைட்டில் ப்ரமோ 5க்கும் மேற்பட்ட மில்லியன் வியூசையும், 1.8 லட்சம் லைக்சையும் பெற்றது குறிப்பிடத்தக்கது.

ரிசர்வ்ட் டைப் விஜய்

ரிசர்வ்ட் டைப் விஜய்


எப்போதுமே மற்றவர்களுடன் அதிகமாக பேசாமல் ரிசர்வ்ட் டைப்பாக இருக்கும் விஜய், தன்னுடைய சமூக வலைதளப்பக்கத்திலும் அதையே பின்பற்றி வருகிறார். இவ்வாறு ரிசர்வ்டாக இருக்கும் விஜய் கேமரா முன்பு சென்றுவிட்டால், தான் ஏற்று நடிக்கும் கேரக்டராகவே மாறிவிடுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X