லைகர் படத்துக்காக 4 மடங்காக சம்பளத்தை உயர்த்திய விஜய் தேவரகொண்டா?.. கைகொடுத்ததா படம்!

ஐதராபாத் : நடிகர் விஜய் தேவரகொண்டா, அனன்யா பாண்டே உள்ளிட்டவர்கள் நடிப்பில் இன்றைய தினம் லைகர் படம் வெளியாகியுள்ளது.

Recommended Video

Liger Movie Review | Yessa ? Bussa ? | |Vijay Deverakonda|Ananya Panday|Ramya Krishna|Puri Jagannadh

இந்தப் படம் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ள போதிலும் படத்தில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் ஸ்கோர் செய்துள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இந்தப் படத்தில் அவரது ஆக்ஷன் காட்சிகள் உள்ளிட்டவை மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளன. படத்திற்காக சிறப்பான வகையில் அவர் உடலை ஏற்றியுள்ளார்.

நடிகர் விஜய் தேவரகொண்டா

நடிகர் விஜய் தேவரகொண்டா

நடிகர் விஜய் தேவரகொண்டா, காதல் கதைகளில் சிறப்பாக நடித்து பெயர் பெற்றவர். தெலுங்கில் மட்டுமில்லாமல் சர்வதேச அளவில் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் காணப்படுகின்றனர். குறிப்பாக ஏராளமான பெண் ரசிகைகள் இவருக்கு அதிகமாக உள்ளனர். அர்ஜுன் ரெட்டி போன்ற படங்கள் இவருக்கு ஏற்றத்தை கொடுத்தவை.

லைகர் படம்

லைகர் படம்

இந்நிலையில் இன்றைய தினம் இவரது நடிப்பில் லைகர் படம் வெளியாகியுள்ளது. இந்தப் படம் தற்போது கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளன. விஜய் தேவரகொண்டா தவிர்த்து படத்தில் சொல்லிக் கொள்ளும்படியாக எதுவும் இல்லை என்று விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

சம்பளத்தை உயர்த்திய விஜய் தேவரகொண்டா

சம்பளத்தை உயர்த்திய விஜய் தேவரகொண்டா

ஆனால் பிரபல பாலிவுட் இயக்குநர் கரண் ஜோஹர், நடிகை சார்மி ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தில் நடிப்பதற்கு சான்ஸ் கிடைத்தவுடன் விஜய் தேவரகொண்டா, முதலில் ஒரு விஷயத்தைதான் செய்தாராம். அது தன்னுடைய சம்பளத்தை உயர்த்தியதுதான். இந்தப் படத்திற்கு முன்னதாக ஒரு படத்தில் நடிப்பதற்கு 6 முதல் 7 கோடி ரூபாய் சம்பளம் வாங்கிவந்த அவர் இந்தப் படத்தில் அதை 25 கோடி ரூபாயாக உயர்த்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 பான் இந்தியா படம்

பான் இந்தியா படம்

இந்தப் படம் பான் இந்தியா படமாக தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 5 மொழிகளில் இந்தியாவில் வெளியானது. படத்திற்காக 40 நாட்கள் அனன்யா பாண்டேவுடன் இணைந்து சிறப்பான பிரமோஷன்களில் ஈடுபட்டார் விஜய் தேவரகொண்டா. இந்நிலையில் இந்தப் படத்திற்காக தன்னுடைய சம்பளத்தை அவர் 4 மடங்கிற்கும் மேலாக உயர்த்தியுள்ளது தற்போது வெளியாகியுள்ளது.

ரசிகர்களின் வாதம்

ரசிகர்களின் வாதம்

இந்தப் படத்தின் வெற்றிக்காக விஜய் தேவரகொண்டா, சிறப்பாக தன்னுடைய உடம்பை ஏற்றி, ஸ்டைலாக காணப்படுகிறார். ஆனால் பூரி ஜெகன்னாத், திரைக்கதையில் சொதப்பியுள்ளதாக விமர்சனங்கள் எழுந்த நிலையில், விஜய் தேவரகொண்டா, தன்னுடைய சம்பளத்தை உயர்த்தியது குறித்து பரவாயில்லை என்பதே ரசிகர்களின் வாதமாக உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X