Vijay devarakonda: பொன்னியின் செல்வன் 2 நாயகியுடன் இணையும் விஜய் தேவரகொண்டா.. மாஸ் தான்!

ஐதராபாத்: விஜய் தேவரகொண்டா தெலுங்கில் முன்னணி ஹீரோவாக அடுத்தடுத்து மாஸான வெற்றி படங்களை கொடுத்து வருகிறார். இவருக்கு டோலிவுட்டில் மட்டுமில்லாமல் சர்வதேச அளவில் குறிப்பாக தமிழில் ஏராளமான ரசிகர்கள் காணப்படுகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பாக இவரது நடிப்பில் வெளியான குஷி படம் மிகச்சிறந்த வெற்றியை பெற்றது. இந்த படத்தில் சமந்தாவுடன் இணைந்து நடித்திருந்தார் விஜய் தேவரகொண்டா. இந்தப் படத்தின் கதைக்களம் மட்டுமில்லாமல் பாடல்களும் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றன. இந்நிலையில் அடுத்ததாக இவரது ஃபேமிலி ஸ்டார் படம் ஏப்ரல் ஐந்தாம் தேதி ரிலீசாக உள்ளது.

அடுத்தடுத்த படங்களில் முன்னணி இயக்குனர்களுடன் இணைந்து நடித்து வரும் விஜய் தேவரகொண்டா, அடுத்ததாக VD12 படத்தில் கௌதம் தின்னனூரி இயக்கத்தில் நடித்து வருகிறார் விஜய் தேவரகொண்டா. இந்த படத்தில் அவருக்கு இரண்டு ஜோடிகள் கமிட்டாகி நடித்து வருகின்றனர். இதில் ஒருவர் பிரபல தெலுங்குப்பட நடிகை ஸ்ரீலீலா. மற்றவர் சாரா அர்ஜுன். இவர் முன்னதாக பொன்னியின் செல்வன் 2 படத்தில் இளம் வயது நந்தினியாக நடித்து ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவர். முன்னதாக சினிமாவில் சிறுமியாக சைவம் உள்ளிட்ட படங்களில் நடித்து ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவர்.

Actor Vijay Devarakonda joined with Ponniyin selvan 2 actress Sara Arjun in his VD12 movie

நடிகர் விஜய் தேவரகொண்டா: நடிகர் விஜய் தேவரகொண்டா அடுத்தடுத்து முன்னணி இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பு நிறுவனங்களுடன் இணைந்து நடித்து வருகிறார். இவருடன் இணைந்து நடிக்க இளம் நடிகைகளும் ஆர்வம் காட்டி வருகின்றனர். முன்னதாக ராஷ்மிகா மந்தனாவுடன் ஜோடி போட்டு கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் ஆகிய படங்களில் நடித்து ஏராளமான ரசிகர்களை கவர்ந்திருந்தார் விஜய் தேவரகொண்டா. இவர்கள் இருவரும் காதலித்து வருவதாகவும் விரைவில் இவர்களின் திருமண நிச்சயதார்த்தம் குறித்த அறிவிப்பு வெளியாக உள்ளதாகவும் தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வருகின்றன.

ராஷ்மிகாவுடன் காதல்?: இவர்கள் இருவருமே இது குறித்து தங்களது மௌனத்தை கலைக்காத நிலையில் இது உண்மைதான் என்ற நிலைப்பாட்டிற்கு ரசிகர்கள் தற்போது வந்துள்ளனர். இதற்கேற்ப இவர்கள் இருவரும் வெளிநாடுகளில் ஜோடிப் போட்டுக் கொண்டு சுற்றித் திரிகின்றனர். இதன் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகின்றன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு விஜய் தேவரகொண்டாவின் குஷி படம் வெளியாகி சூப்பர் ஹிட்டடித்தது. இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக சமந்தா நடித்திருந்தார். இந்த இருவரின் கெமிஸ்ட்ரியும் படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

குஷி படம்: இந்த படத்தை தொடர்ந்து தன்னுடைய நோய் பாதிப்பு காரணமாக சமந்தா தற்போது நடிக்காமல் உள்ளார். அதனால் அவரது ரசிகர்களுக்கு இந்த படம் மிகப்பெரிய ட்ரீட்டாக அமைந்தது. இந்நிலை அடுத்ததாக விஜய் தேவரகொண்டா நடிப்பில் ஃபேமிலி ஸ்டார் படம் வரும் ஏப்ரல் மாதத்தில் ரிலீஸ் ஆக உள்ளது. இதனிடையே அடுத்தடுத்த படங்களில் நடித்து வரும் விஜய் தேவரகொண்டா தனது VD12 படத்தில் தற்போது நடித்து வருகிறார். இந்த படத்தின் இரண்டு கட்ட ஷூட்டிங் நடந்து முடிந்துள்ளது. படத்தின் அடுத்தக்கட்ட சூட்டிங் மார்ச் 2வது வாரத்தில் துவங்கவுள்ளது.

VD12 படம்: இந்தப்படத்தில் அவருக்கு ஜோடியாக ஸ்ரீ லீலா மற்றும் சைவம் உள்ளிட்ட படங்களில் சிறுமியாக நடித்து ரசிகர்களை கவர்ந்த சாரா அர்ஜுன் ஜோடி சேர்ந்துள்ளனர். கடந்த ஆண்டில் சாரா அர்ஜுன் நடிப்பில் வெளியான பொன்னியின் செல்வன் 2 படம் அவருக்கு மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்று தந்தது குறிப்பிடத்தக்கது. படத்தில் இளம்வயது நந்தினியாக அவர் நடித்திருந்தார். இதனிடையே அவர் தற்போது டோலிவுட்டின் முன்னணி நடிகரான விஜய் தேவரகொண்டாவிற்கு ஜோடியாக கமிட் ஆகியுள்ளது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X