Vijay: எல்லா மலையாளிகளுக்கும் எண்டே ஹ்ருதயம் நிறஞ்ச நன்னி.. மாஸ் கூட்டத்தில் செல்ஃபி எடுத்த விஜய்!
திருவனந்தபுரம்: நடிகர் விஜய்யின் திரைப்பயணம் 40 ஆண்டுகளை கடந்து மாஸ் காட்டி வருகிறது. சிறுவனாக தன்னுடைய அப்பாவின் இயக்கத்தில் நடித்துள்ள விஜய், ஹீரோவாக நாளைய தீர்ப்பு படம் மூலம் தமிழில் என்ட்ரி கொடுத்திருந்தார். இந்தப் படத்தில் அவர் கல்லூரி மாணவராக களமிறங்கினார். ஹீரோவாகவும் 30 ஆண்டுகளை கடந்து நடித்து வருகிறார். அடுத்ததாக தன்னுடைய அரசியல் என்ட்ரி குறித்தும் அவர் அறிவித்துள்ளார். 2026ம் ஆண்டில் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலில் தன்னுடைய தமிழக வெற்றிக் கழகம் போட்டியிடும் என்று அறிவித்துள்ள விஜய், அதற்கேற்ப உறுப்பினர் சேர்க்கை உள்ளிட்ட பல விஷயங்களை முன்னெடுத்து வருகிறார்.
சினிமாவில் தற்போது ஒரு படத்திற்கு 200 கோடி ரூபாய் வரையில் விஜய் சம்பளமாக பெற்று வருவதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் அடுத்ததாக தளபதி 69 படத்திற்காக அவர் 250 கோடி ரூபாய் சம்பளம் பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. கடந்த ஆண்டில் மட்டுமே வாரிசு மற்றும் லியோ என இரு படங்களில் நடித்திருந்தார் விஜய். இந்த அளவிற்கு அதிகமான சம்பளம் பெற்றுவரும் அவர், தளபதி 69 படத்துடன் சினிமாவில் இருந்து விலகி தீவிர அரசியலில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளது அவரது ரசிகர்களை மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த சினிமா உலகத்தையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

நடிகர் விஜய்: நடிகர் விஜய்யின் நடிப்பில் உருவாகி வரும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தின் ஷூட்டிங் கேரளாவின் திருவனந்தபுரத்தில் இன்றைய தினம் ஐந்தாவது நாளாக தொடர்ந்து வருகிறது. இதையொட்டி கடந்த சில தினங்களுக்க முன்பு திருவனந்தபுரம் வந்த விஜய்க்கு கேரள ரசிகர்கள் மாஸ் வரவேற்பு கொடுத்தனர். தொடர்ந்து அவர் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு சென்றபோது அவருடன் இணைந்து ஊர்வலமாக அவர்களும் சென்றதை பார்க்க முடிந்தது. விஜயின் டை ஹார்ட் ரசிகர்களாக கேரள ரசிகர்களும் காணப்படுகின்றனர். கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு காவலன் படத்திற்காக விஜய் கேரளா சென்றிருந்த நிலையில் தற்போது மீண்டும் GOAT படத்தின் ஷூட்டிங்கிற்காக அவர் கேரளா சென்றுள்ளார்.
கேரள ரசிகர்கள் உற்சாகம்: இதனால் அவரது கேரளா ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்திற்கு உள்ளாகியுள்ளனர். தினந்தோறும் விஜய் படத்தின் சூட்டிங் ஸ்பாட் மற்றும் அவர் தங்கி உள்ள ஹோட்டல் ஆகிய இடங்களில் அவரை காத்திருந்து சந்தித்து வருகின்றனர். இத்தகைய வெறித்தனமான ரசிகர்களை சற்றும் ஏமாற்றாமல் தொடர்ந்து நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவர்களை சந்தித்து தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகிறார் விஜய். சூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்த ஒரு குழந்தையை கொஞ்சி மகிழ்ந்தார். அந்த குழந்தை அவருக்கு பதிலுக்கு முத்தம் கொடுத்திருந்தது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்திருந்தது.
ரசிகர்களிடையே விஜய் பேச்சு: இந்நிலையில் தன்னை பார்ப்பதற்காக காத்திருந்த மாற்றுத்திறனாளியையும் சந்தித்து அவருடன் கைகுலுக்கி புகைப்படங்களையும் எடுத்துக் கொண்டார் விஜய். இதனிடையே முன்னதாக அதிகமான கூட்ட நெரிசலில் தனக்கு மாலை போடுவதற்காக காத்திருந்த ரசிகரின் அன்பையும் நிராகரிக்காமல் ஓடி சென்று அந்த மாலையை ஏற்றுக் கொண்டார் விஜய். இந்நிலையில் இன்று மாலை அவர் கிரீன் ஃபீல்ட் மைதானத்திற்கு வெளியே ரசிகர்களை சந்தித்து உரையாற்றினார். அவரது பேச்சு கேரள ரசிகர்கள் அனைவரையும் கவரும் வகையில் அமைந்திருந்தது. சேச்சி மற்றும் சேட்டன்மார்களே என்று துவங்கி அவர் பேசினார்.
தமிழ்நாடு -கேரளா ரசிகர்கள்: கேரள ரசிகர்களின் அன்பிற்கு நன்றியை தெரிவித்துக் கொண்ட விஜய், தமிழ்நாடு மற்றும் கேரள ரசிகர்கள் தன்னுடைய இரு கண்கள் போன்றவர்கள் என்று கூறியது கேரள ரசிகர்களை மிகுந்த உற்சாகத்திற்கு உள்ளாக்கியுள்ளது. அவரை பேச விடாமல் தொடர்ந்து தளபதி, தளபதி என்று அனைவரும் அதிகமான கரகோஷங்களை எழுப்பினர். கேரவன் மீது ஏறி ரசிகர்கள் தொடர்ந்து கேரள ரசிகர்கள் முன்பு பேசினார். இந்த ஜென்மம் மட்டுமில்லாமல் எத்தனை ஜென்மங்கள் எடுத்தாலும் தான் அவர்களின் அன்பிற்குரிய விஜய்தான் என்றும் உங்களின் தளபதிதான் அவர் கூறினார்.
விஜய் உற்சாகம்: தன்னுடைய சினிமா கேரியரில் தன்னை ஒரு நடிகனாக மட்டும் பார்க்காமல் அவர்கள் வீட்டு பிள்ளையாக ரசிகர்கள் பார்ப்பது தன்னை ஆச்சர்யத்திற்குள்ளாக்கியுள்ளதாகவும் விஜய் கூறினார். தொடர்ந்து உங்களால் முடிந்த உதவிகளை தொடர்ந்து செய்யுங்கள் என்றம் அவர் ரசிகர்களை கேட்டுக் கொண்டார். முன்னதாக திரளாக காணப்பட்ட ரசிகர்களுடன் இணைந்து செல்ஃபியும் எடுத்துக் கொண்டார். முன்னதாக மாஸ்டர் படத்தின்போது ரசிகர்களுடன் இணைந்து அவர் செல்ஃபி எடுத்துக் கொண்ட நிலையில், தற்போது இந்த இரு புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் மாஸ் காட்டி வருகின்றன.


Click it and Unblock the Notifications











