Actor Vijay: நடிகர் சங்க கட்டிட பணிகளுக்காக விஜய் நிதியுதவி.. ரூ 1 கோடி வழங்கினார்!

சென்னை: நடிகர் விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கோட் படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் தன்னுடைய தமிழக வெற்றிக் கழகம் கட்சி குறித்த அறிவிப்பை வெளியிட்ட அவர் இந்த கட்சியில் உறுப்பினராக சேர செயலியையும் அறிமுகப்படுத்தினார். தொடர்ந்து தன்னுடைய கட்சியை வலுப்படுத்தும் வகையில் ஆலோசனைக் கூட்டங்களையும் நடத்தி வருகிறார் விஜய். இதனிடையே அடுத்ததாக தளபதி 69 படத்துடன் சினிமாவில் இருந்து விலக உள்ளதாகவும் தீவிர அரசியலில் ஈடுபட உள்ளதாகவும் அவர் முன்னதாக அறிவித்திருந்தார். இந்நிலையில் தென்னிந்திய நடிகர் சங்க கட்டிடம் கட்டுவதற்கான நிதியை அவர் அளித்துள்ளார்.

நடிகர் சங்க கட்டிடம் கட்டுவதற்காக முன்னதாக நடிகர்கள் சூர்யா, கார்த்தி, விஷால் உள்ளிட்டவர்களும் அளித்துள்ளனர். தொடர்ந்து கடந்த 9ம் தேதி உலகநாயகன் கமல்ஹாசனும் கட்டிட வைப்பு நிதியாக 1 கோடி ரூபாயை தன்னுடைய சொந்த நிதியிலிருந்து அளித்திருந்தார். இந்நிலையில் தற்போது நடிகர் விஜய்யும் 1 கோடி ரூபாய் நிதியை நடிகர் சங்க கட்டிடம் கட்டுவதற்காக அளித்துள்ளார். நடிகர் சங்க கட்டிடத்தை விரைவில் கட்டி முடிப்பதற்காக வங்கியிலிருந்து 40 கோடி ரூபாய் கடனாக பெறவும் சமீபத்தில் சங்கக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Actor Vijay Gave one crore rupees for Actors Union building

நடிகர் விஜய்: நடிகர் விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் The Greatest of all time படத்தில் நடித்து வருவது அனைவருக்கும் தெரிந்ததே. இந்த படத்தை தொடர்ந்து தளபதி 69 படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ள விஜய், இந்த இரு படங்களை தொடர்ந்து சினிமாவில் இருந்து விலக உள்ளதாகவும் தீவிர அரசியலில் ஈடுபடவுள்ளதாகவும் சமீபத்தில் அறிவித்திருந்தார். தன்னுடைய அரசியல் என்ட்ரியை முறையாக அறிவித்த அவர் தமிழக வெற்றிக் கழகம் என்ற தன்னுடைய கட்சி குறித்த அறிவிப்பையும் மேற்கொண்டார். தொடர்ந்து கட்சி பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார் விஜய்.

கட்சிப் பணிகளில் விஜய்: கடந்த சில தினங்களுக்கு முன்பு கட்சியில் இணைவதற்கான உறுப்பினர் சேர்க்கை செயலியை அவர் அறிமுகம் செய்திருந்தார். தொடர்ந்து கட்சியின் நடவடிக்கைகள் குறித்து அடுத்தடுத்து ஆலோசனைகள் நடைபெற்று வருகிறது. இதனிடையே சினிமாவிலும் ஒரு பக்கம் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார் விஜய். GOAT படத்தின் ஷூட்டிங் தற்போது சென்னை உள்ளிட்ட இடங்களில் நடந்து வருகிறது. ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் இந்த படத்தின் அடுத்த கட்ட சூட்டிங்கிற்காக படக்குழுவினர் மாஸ்கோ செல்ல உள்ளனர். ஏப்ரல் மாதத்துடன் இந்த படத்தின் ஷூட்டிங் நிறைவு பெற உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

நடிகர் சங்க கட்டிட நிதி வழங்கிய விஜய்: இதனிடையே தென்னிந்திய நடிகர் சங்க கட்டிட நிதியாக நடிகர் விஜய் தற்போது ஒரு கோடி ரூபாய் நிதியை அளித்துள்ளார். கடந்த இரு தினங்களுக்கு முன்பு உலகநாயகன் கமல்ஹாசன், நடிகர் சங்க கட்டிடம் கட்ட வைப்பு நிதியாக 1 கோடி ரூபாய் கொடுத்திருந்த நிலையில், தற்போது விஜய்யும் 1 கோடி ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார். இந்த கட்டிடம் கட்டுவதற்காக 40 கோடி ரூபாய் வங்கியில் கடனாக பெற முன்னதாக சங்கக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்டவற்றை நடத்தி இந்தக் கடனை அடைக்கவும் முடிவு எடுக்கப்பட்டது.

ரசிகர்கள் எதிர்பார்ப்பு: விஜய்யின் தளபதி 69 படத்தின் அறிவிப்பு இம்மாத இறுதியில் அல்லது அடுத்த மாதத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் இயக்குனர் குறித்த அறிவிப்பை எதிர்பார்த்து ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர். இது விஜய்யின் சினிமா கேரியரில் கடைசி படம் என்பதால் இந்த படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு மற்றும் எதிர்பார்ப்பு காணப்படுவது குறிப்பிடத்தக்கது. இதனிடையே வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் GOAT படத்திற்கும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு காணப்படுகிறது. படத்தில் அப்பா மற்றும் மகன் என இரு வேறு கெட்டபுகளில் விஜய் நடித்துவரும் சூழலில் முன்னதாக வெளியான போஸ்டர் உள்ளிட்டவையும் எதிர்பார்ப்பை எகிற செய்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X