ஒரே ட்வீட்டில் 5 லட்சம் லைக்குகள்... இந்திய அளவில் முதல் நடிகராக விஜய் சாதனை!

சென்னை : நடிகர் விஜய் சிறப்பான நடிகராக ரசிகர்களை கவர்ந்து வருகிறார். தற்போது பீஸ்ட் படத்தில் நடித்து முடித்துள்ளார்.

Recommended Video

2021-ல் அதிகம் பேசப்பட்ட Suriya, Vijay, Ajith | Jaibhim, Thala Ajith, Rolls Royce

ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இவரை அரிதாகவே பார்க்க முடிகிறது. ஆயினும் அதிகமான லைக்ஸ்களை அள்ளி விடுகிறார்.

இந்நிலையில் விஜய்யின் ஒரு ட்வீட் ட்விட்டரில் அதிகமான லைக்ஸ்களை பெற்றுள்ளது. இந்திய அளவில் இந்த பெருமையை பெற்ற முதல் நடிகர் என்ற சிறப்பும் அவருக்கு கிடைத்துள்ளது.

நடிகர் விஜய்

நடிகர் விஜய்

நடிகர் விஜய், தன்னுடைய படங்கள் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார். தளபதி என்ற அடைமொழியையும் தன்னுடைய ரசிகர்களிடம் பெற்றுள்ளார். அவரது அடுத்தடுத்த வெற்றிப் படங்கள் ரசிர்களிடையே அவருக்கு சிறப்பான பெயரை பெற்றுத் தந்துள்ளது.

அதிக வசூலை ஈட்டிய மாஸ்டர்

அதிக வசூலை ஈட்டிய மாஸ்டர்

அவரது கடந்த படமான மாஸ்டர், இந்த ஆண்டின் அதிக வசூலை ஈட்டிய படமாக உள்ளது. இதை புக் மை ஷோ உறுதிப்படுத்தியுள்ளது. இந்நிலையில் தற்போது பீஸ்ட் படத்தில் விஜய் நடித்து முடித்துள்ளார். படத்தின் டப்பிங் பணிகளையும் முடித்துக் கொடுத்துள்ளார்.

விரைவில் அடுத்த படம்

விரைவில் அடுத்த படம்

தொடர்ந்து அடுத்ததாக தன்னுடைய 66வது படத்திலும் அடுத்த மாதத்தில் அவர் நடிக்க துவங்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. படத்தை வம்சி படிப்பள்ளி இயக்கவுள்ளார். படத்தின் மற்ற நடிகர் நடிகைகள் தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது.

சமூக வலைதளங்களில் குறைவான செயல்பாடு

சமூக வலைதளங்களில் குறைவான செயல்பாடு

படங்களில் பிசியாக நடித்துவரும் விஜய், சமூக வலைதளங்களில் குறைவாகவே செயல்பட்டு வருகிறார். பீஸ்ட் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு என சிறப்பான சம்பவங்களின்போது மட்டுமே ட்விட்டர் பக்கத்தில் இவர் பதிவிடுவார். ஆனால் இந்த பதிவுகள் அவரது ரசிகர்களிடையே அதிகமான வரவேற்பை பெற்று விடும்.

மரக்கன்றை நட்ட விஜய்

மரக்கன்றை நட்ட விஜய்

கிரீன் இந்தியா மூவ்மெண்டிற்காக தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு மரம் நடுவதற்காக நடிகர் விஜய்யை கடந்த ஆண்டில் டேக் செய்திருந்தார். இதையொட்டி நடிகர் விஜய் தன்னுடைய தோட்டத்தில் மரக்கன்றை நட்டு, அதன் புகைப்படங்களை ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

5 லட்சம் லைக்ஸ்

5 லட்சம் லைக்ஸ்

இந்தப் புகைப்படங்கள் அவரது ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளன. தொடர்ந்து வைரலான இந்த புகைப்படங்கள் தற்போது 5 லட்சம் லைக்ஸ்களை பெற்றுள்ளன. இந்திய அளவில் ஒரு ட்வீட்டிற்கு 5 லட்சம் லைக்ஸ்களை பெற்ற ஒரே நடிகர் என்ற பெருமையும் விஜய்க்கு கிடைத்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X