கஜா புயல்... சத்தமில்லாமல் உதவி செய்த விஜய்!
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நடிகர் விஜய் உதவி செய்து வருகிறார்.
Recommended Video

சென்னை: கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளின் கணக்குகளில் பணம் செலுத்தி இருக்கிறார் நடிகர் விஜய்.
கடந்த 15ம் தேதி கோரதாண்டவமாடிய கஜா புயலால், காவிரி டெல்டா மாவட்டங்களில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஏராளமான மக்கள் தங்கள் வீடுகளை இழந்து, குடிக்கக் கூட தண்ணீர் இல்லாமல் தவித்து வருகின்றனர்.

தமிழக அரசும், அரசியல் கட்சியினரும், தன்னார்வலர்களும் தங்களால் முடிந்த அளவுக்கு அந்த மக்களுக்கு உதவிகளை செய்து வருகின்றனர். தமிழ் சினிமா துறையினரும் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் விஜய் தனது ரசிகர் மன்றங்களின் மூலம் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் உதவிகளை செய்துள்ளார். மதுரை, கடலூர், திருச்சி, தஞ்சாவூர், நாகை ஆகிய மாவட்டங்களில் உள்ள நிர்வாகிகளின் கணக்குகளில் பணம் செலுத்தி, இந்த உதவிகளை செய்து வருகிறார்.

மதுரை மாவட்ட நிர்வாகிக்கு ரூ.2 லட்சம், கடலூர் ரூ.4.5 லட்சம், திருச்சி ரூ.1.5 லட்சம், தஞ்சாவூர் ரூ.2 லட்சம், நாகை ரூ.5 லட்சம் என மொத்தம் ரூ15 லட்சத்தை நிர்வாகிகளுக்கு பிரித்து கொடுத்து, நிவாரணப் பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டிருக்கிறார் நடிகர் விஜய்.

விஜய்யின் இந்த நடவடிக்கை முதற்கட்டம் தான் என்றும் விரைவில் அடுத்தக்கட்ட நிவாரணப் பணிகளை அவர் மேற்கொள்வார் என்றும் விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகள் தெரிவித்தனர்.


Click it and Unblock the Notifications











