பிகில் படக்குழுவினருக்கு நடிகர் விஜய் கொடுத்த இன்ப அதிர்ச்சி.. என்னன்னு பாருங்க!

Recommended Video

Bigil Song Leaked:வெறித்தனம் பாடல் Viral ஆகியுள்ளது

சென்னை: பிகில் படக்குழுவினருக்கு நடிகர் விஜய் இன்ப அதிர்ச்சி ஒன்றை கொடுத்துள்ளார்.

நடிகர் விஜய் நடிக்கும் 63வது படம் பிகில். இந்தப் படத்தை இயக்குநர் அட்லி இயக்கி வருகிறார். இந்தப் படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைக்கிறார்.

அட்லியும் நடிகர் விஜயும் இந்தப் படத்தின் மூலம் மூன்றாவது முறையாக கூட்டணி சேர்ந்துள்ளனர். இந்தப்படத்தில் நடிகர் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கிறார்.

நடிகை நயன்தாரா

நடிகை நயன்தாரா

இளம் வயதில் கால்பந்து பயிற்சியாளராக ஒரு விஜயும் வயதில் மூத்தவராக ஒரு விஜயும் நடிக்கின்றனர். கதாநாயகியாக நடிகை நயன்தாரா நடிக்கிறார்.

இறுதிக்கட்டப் பணிகள்

இறுதிக்கட்டப் பணிகள்

நயன்தாரா இந்தப்படத்தில் மருத்துவ மாணவி என கூறப்படுகிறது. பிகில் படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது.

சிங்கிள் ட்ராக்

சிங்கிள் ட்ராக்

படம் வரும் தீபாவளிக்கு ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் போஸ்டர்கள், சிங்கப்பெண்ணே பாடலின் சிங்கிள் ட்ராக் ஆகியவை அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளன.

இன்ப அதிர்ச்சி

இன்ப அதிர்ச்சி

அதேநேரத்தில் படத்தின் சில காட்சிகளும் இணையத்தில் அவ்வப்போது வெளியாகி படக்குழுவை அதிர்ச்சியடைய செய்து வருகிறது. இந்நிலையில் பிகில் படக்குழுவினருக்கு நடிகர் விஜய் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

மோதிரம் பரிசு

அதாவது, பிகில் படத்தில் பணிபுரிந்த தொழில்நுட்ப கலைஞர்களுக்கு தங்க மோதிரத்தை பரிசளித்துள்ளார் விஜய். அதில் ஸ்பெஷல் என்னவென்றால் அந்த மோதிரங்களில் பிகில் என எழுதப்பட்டுள்ளதாம்.விஜயின் இந்த இன்ப அதிர்ச்சியை பார்த்து படக்குழுவினர் அசந்து போய்விட்டனராம்.

பரிசுப் பொருள்

பரிசுப் பொருள்

கடந்த சில ஆண்டுகளாகவே தன்னுடன் பணியாற்றும் படக்குழுவினருக்கு படப்பிடிப்பு முடிக்கும் தறுவாயில் ஏதேனும் பரிசளித்து வருகிறார் விஜய். தங்க நாணயம், மோதிரம், சங்கிலி என ஒவ்வொரு முறையும் பரிசுப் பொருள் மாறும். மெர்சல் படத்தில் நடித்து முடித்த போது கூட அனைவருக்கும் தங்க நாணயம் வழங்கி மகிழ்ச்சிப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X