Actor Vijay: என்னாது.. தளபதி 69 படத்தை விஜய் தயாரிக்கிறாரா?.. இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!

நடிகர் விஜய்யின் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். இதில் பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், மோகன், லைலா, சினேகா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்களே இணைந்து நடித்து வருகின்றனர். சயின்ஸ் பிக்ஷன் படமாக உருவாகி வரும் இந்தப் படத்தில் அப்பா மற்றும் மகன் என இருவேறு கேரக்டர்களில் விஜய் நடித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தின் சூட்டிங் தற்போது மாஸ்கோவில் துவங்கி நடந்து வருகிறது.

இன்னும் சில தினங்களில் இந்த படத்தின் ஒட்டுமொத்த சூட்டிங் நிறைவடையவுள்ள சூழலில் வரும் 19ம் தேதி நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக நடிகர் விஜய் நாடு திரும்பி தன்னுடைய ஜனநாயக கடமையை ஆற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக தளபதி 69 படத்தில் வரும் ஜூன் மாதத்தில் இருந்து நடிகர் விஜய் நடிக்க துவங்குவார் என்று கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் ஷூட்டிங் வரும் டிசம்பர் மாதத்திற்குள் நிறைவடைய உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

Actor Vijay going to produce his Thalapathy 69 it seems

நடிகர் விஜய்: நடிகர் விஜயின் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படம் மற்றும் அடுத்ததாக அவர் இணையவுள்ள தளபதி 69 இந்த படங்கள் தான் தற்போது கோலிவுட்டின் ஹாட் டாபிக்காக உள்ளன. தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தின் ஷூட்டிங்கிற்காக மாஸ்கோவில் உள்ளார் விஜய். இந்த ஷூட்டிங்கின் அடுத்தடுத்த சுவாரஸ்யமான வீடியோக்களை படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். இவை அனைத்தும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து ஏராளமான ஷேரிங்கை பெற்று வருகின்றன.

GOAT படம்: இந்நிலையில் இந்த படத்தின் சூட்டிங் இன்னும் சில தினங்களில் மாஸ்கோவில் நிறைவடையுள்ளது. இதையொட்டி படத்தின் ஒட்டுமொத்த சூட்டிங்கையும் படக்குழுவினர் நிறைவு செய்ய உள்ளனர். படம் வரும் செப்டம்பர் 5ம் தேதி ரிலீசாகவுள்ளதாக பட குழுவினர் அறிவித்துள்ளனர். இதனிடையே நாளை மறுதினம் தமிழ் புத்தாண்டையொட்டி இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கள் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக ரசிகர்கள் மரண மாஸாக வெயிட் செய்து வருகின்றனர். இந்நிலையில் அடுத்ததாக விஜய் இணையவுள்ள தளபதி 69 படத்தின் அறிவிப்பு நாடாளுமன்ற தேர்தலை அடுத்து அதிகாரப்பூர்வமாக வெளியாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

தளபதி 69 படத்தை விஜய் தயாரிக்கிறாரா?: இந்தப் படத்தை முன்னதாக பிரபல தெலுங்கு தயாரிப்பு நிறுவனம் டிவிவி கிரியேஷன்ஸ் தயாரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் சில பிரச்சனைகள் காரணமாக அவர்கள் இந்த படத்தில் இருந்து விலகி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் இந்த படத்தை யார் இயக்குவார்கள் என்பது குறித்து பல்வேறு யூகங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களை அதிகமான எதிர்பார்ப்பிற்கு உள்ளாக்கி வருகின்றன. இந்நிலையில் இந்த படத்தை நடிகர் விஜய் சொந்தமாக தயாரிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது எந்த அளவிற்கு உண்மை என்பது குறித்து தெரியவில்லை.

சில தினங்களில் அறிவிப்பு: இருந்தபோதிலும் இன்னும் சில தினங்களில் இந்த படத்தின் அறிவிப்பு வெளியாகும் சூழலில் இந்த படத்தை விஜய் தயாரிப்பாரா அல்லது மற்ற முன்னணி நிறுவனங்கள் யாராவது தயாரிப்பார்களா என்பது குறித்து தெரியவரும். இந்தப் படத்தை ஹெச் வினோத் இயக்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது. படம் அரசியல் கதையை மையமாகக் கொண்டு உருவாக உள்ளதாக அவர் முன்னதாக தன்னுடைய பேட்டியொன்றில் கூறியிருந்தார். தற்போது அரசியலில் என்ட்ரி கொடுத்துள்ள விஜய்க்கு இதுபோன்ற ஒரு ஸ்கிரிப்ட் மிகவும் அவசியமான ஒன்றாக கருதப்படுகிறது. இந்நிலையில் தளபதி 69 படம் குறித்த அறிவிப்புக்காக ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக காத்திருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X