ரஜினியின் இடத்தை விஜய் பிடித்து விட்டார்... பிரபல தயாரிப்பாளர் ஓபன் டாக்!

சென்னை : தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வருபவர் நடிகர் ரஜினிகாந்த்

கடைசியாக சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் பக்கா வில்லேஜ் கதாபாத்திரத்தில் நடித்து பட்டையை கிளப்பி இருந்தார்
ரஜினியின் படங்களுக்கு இணையாக விஜய்யின் படங்களும் இப்பொழுது வசூலில் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கும் நிலையில் ரஜினியின் இடத்தை விஜய் பிடித்து விட்டதாக பிரபல தயாரிப்பாளர் ராஜன் கூறியுள்ளார்.

இரண்டு பிளாக்பஸ்டர்

இரண்டு பிளாக்பஸ்டர்

தமிழ் சினிமாவில் தற்போது நம்பிக்கை இயக்குனராக வலம் வந்து கொண்டுள்ளன இயக்குனர் லோகேஷ் கனகராஜ். மாநகரம், கைதி என இரண்டு பிளாக்பஸ்டர் வெற்றிகளை கொடுத்தார். அதைத் தொடர்ந்து விஜய்யை வைத்து மாஸ்டர் என்ற படத்தை இயக்கினார் . விஜய் இதுவரை நடித்த படங்களிலேயே முற்றிலும் வித்தியாசமான கதைக்களத்தில் உருவான மாஸ்டர் படத்தில் விஜய்யை கல்லூரி ப்ரொபசராக நடித்திருப்பார்.

வசூலை அள்ளியது

வசூலை அள்ளியது

மேலும் மது பழக்கம் கொண்டவராகவும் இந்த படத்தில் நடித்திருப்பதால் விஜய் ரசிகர்களுக்கு முற்றிலும் வித்தியாசமான அனுபவத்தைக் கொடுத்தது.பெரும் எதிர்பார்ப்பில் மிகப் பெரிய நட்சத்திரப் பட்டாளத்துடன் வெளியானது மாஸ்டர் மாபெரும் வெற்றி பெற்று வசூலை அள்ளியது. அதை தொடர்ந்து இப்பொழுது இயக்குனர் நெல்சன் உடன் இணைந்து பீஸ்ட் திரைப்படத்தில் விஜய் நடித்து வருகிறார்

வில்லேஜ் கதாபாத்திரத்தில்

வில்லேஜ் கதாபாத்திரத்தில்

தொடர்ந்து கமர்சியல் ஹிட்டுகளை கொடுத்து வரும் சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த திரைப்படம் அண்ணாத்த. பல தடைகளை தாண்டி கொரோனா பரவலுக்கு மத்தியிலும் படப்பிடிப்பு நடத்தப்பட்டு படம் தீபாவளிக்கு வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.அண்ணன்-தங்கை பாசத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தில் ரஜினிகாந்த் ஹீரோவாக வில்லேஜ் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் நீண்ட வருடங்களுக்கு பிறகு ரஜினி வில்லேஜ் கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். இந்த படத்தில் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருப்பார். சுரேஷ் ரஜினிகாந்தின் தந்தையாக நடித்திருப்பார். மேலும் குஷ்பு, மீனா ஆகியோர் முக்கிய வேடங்களில் இந்த படத்தில் வந்து செல்வார்கள்

வசூலில் சாதனை

வசூலில் சாதனை

தமிழ் சினிமாவின் ஆல் டைம் சூப்பர் ஸ்டாராக உள்ள ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் ஒவ்வொன்றும் அடுத்தடுத்த வசூல் சாதனைகளை செய்து வருகிறது. எந்திரன், சிவாஜி, கபாலி என ரஜினி நடித்த திரைப்படங்கள் வசூலில் சாதனை செய்து பின் அந்த வசூல் சாதனைகளை ரஜினியின் திரைப்படங்களே முறியடிப்பது வரலாறு.

இந்திய அளவில் ட்ரெண்டிங்

இந்திய அளவில் ட்ரெண்டிங்

ஆனால் சமீபகாலமாக ரஜினியின் திரைப்படங்களை விடவும் விஜய்யின் திரைப்படங்கள் அதிக வசூலை செய்து வருகிறது. மாஸ்டர் படத்திற்கு பிறகு விஜய்யின் மார்க்கெட் இந்திய அளவில் மிகப் பெரிய நிலைக்கு உயர்ந்து இருக்கும் நிலையில் அடுத்ததாக பீஸ்ட் படம் உருவாகி வருகிறது. அரபி குத்து பாடல் இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் உள்ளது.

விஜய் முந்தியது உண்மைதான்

விஜய் முந்தியது உண்மைதான்

இந்தப் படமும் வசூலில் புதிய ரெக்கார்டு படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது பற்றிய பேசிய பிரபல தயாரிப்பாளர் ராஜன் வசூலில் ரஜினியை விஜய் முந்தியது உண்மைதான். அது காலத்தின் கட்டாயம். ஒரு காலத்தில் சிவாஜி நடிக்கும் திரைப்படங்கள் தான் வசூலில் முன்னிலையில் இருந்தது பின் ரஜினிகாந்த் வந்தார். அந்த இடத்தை கைப்பற்றினார். ரஜினிகாந்த் மற்றும் சிவாஜி என இருவரும் படிக்காதவன் திரைப்படத்தில் இணைந்து நடித்தனர்.

ரஜினியின் இடத்தை விஜய்

ரஜினியின் இடத்தை விஜய்

அப்பொழுது சிவாஜியை விட ரஜினிக்குதான் அதிக கைதட்டல் கிடைத்தது. இப்போது அதே சூழ்நிலைதான் ரஜினிகாந்துக்கும் வந்துள்ளது ரஜினிகாந்தை விடவும் விஜய்க்கு இளைஞர்கள் பட்டாளம் அதிக அளவில் உள்ளனர். விஜய்யின் ஒவ்வொரு படங்களும் வசூலில் சாதனை படைத்து வருகிறது. எனவே ரஜினிகாந்தின் இடத்தை விஜய் பிடித்து விட்டார் என்பதில் என்ற ஒரு மாற்றுக் கருத்தும் இல்லை என தயாரிப்பாளர் ராஜன் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X