கொரோனா நேரத்தில்.. எனது பிறந்த நாளை கொண்டாட வேண்டாம்.. ரசிகர்களுக்கு நடிகர் விஜய் வேண்டுகோள்!

By

சென்னை: கொரோனா நேரத்தில் எனது பிறந்த நாளை கொண்டாட வேண்டாம் என்று நடிகர் விஜய் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Recommended Video

எனது பிறந்த நாளை கொண்டாட வேண்டாம்.. ரசிகர்களுக்கு நடிகர் விஜய் வேண்டுகோள்!

நடிகர் விஜய்க்கு வரும் 22 ஆம் தேதி பிறந்த நாள். ஒவ்வொரு வருடமும் அவரது பிறந்த நாளை, ரசிகர்கள் சிறப்பாகக் கொண்டாடுவது வழக்கம்.

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் நலத்திட்ட உதவிகளையும் வழங்குவார்கள்.

நலத்திட்ட உதவிகள்

நலத்திட்ட உதவிகள்

இந்நிலையில் இந்த வருட பிறந்த நாளையும் சிறப்பாகக் கொண்டாட ரசிகர்கள் முடிவு செய்திருந்தனர். பேனர்கள் வைத்தல், தோரணங்கள் கட்டுதல், சுவரொட்டி ஒட்டுதல் போன்ற பணிகளில் ஈடுபட முடிவு செய்திருந்தனர். ஏழைகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கவும் ஏற்பாடுகள் செய்திருந்தனர்.. இது பற்றி நடிகர் விஜய்க்கு தகவல் வந்தது.

விஜய் வேண்டுகோள்

விஜய் வேண்டுகோள்

கொரோனா தொற்று வேகமாகப் பரவி வரும் இந்த நேரத்தில், நூற்றுக்கணக்கான ரசிகர்கள் ஒன்று கூடி பிறந்த நாளை கொண்டாடினால், கொரோனா தொற்று பரவலாம் என்ற அச்சம் ஏற்பட்டது. இதையடுத்து தனது பிறந்த நாளை ரசிகர்கள் கொண்டாட வேண்டாம் என்று நடிகர் விஜய் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ரத்து செய்யும்படி

ரத்து செய்யும்படி

அகில இந்திய விஜய் மக்கள் இயக்க பொறுப்பாளர் புஸ்சி ஆனந்திடம் பிறந்த நாள் நிகழ்ச்சிகளை ரத்து செய்யும்படி அவர் அறிவுறுத்தி உள்ளார். இதையடுத்து அனைத்து மாவட்ட விஜய் மக்கள் இயக்க பொறுப்பாளர்களுக்கும் பிறந்த நாளை கொண்டாட வேண்டாம் என்று தொலைபேசி மூலமாக தகவல் அனுப்பப்பட்டு உள்ளது.

நிவாரண உதவிகள்

நிவாரண உதவிகள்

விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ஏற்கனவே அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதற்காக ரசிகர்களின் வங்கி கணக்கில் விஜய் பணம் செலுத்தி இருக்கிறார் என்று கூறப்படுகிறது. நடிகர் விஜய் இப்போது மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் ரிலீஸூக்கு ரெடியாக இருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X