Vijay: விஜய் மாஸ் என்ட்ரி.. விமானநிலையத்தில் காத்திருந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள் உற்சாகம்!

சென்னை: நடிகர் விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் The greatest of all time படத்தில் நடித்து வருகிறார். அவரது இந்த படத்தின் ஷூட்டிங் சென்னை பாங்காக் உள்ளிட்ட இடங்களில் நடந்து முடிந்துள்ள நிலையில் தற்போது படத்தின் சூட்டிங் கேரளாவின் திருவனந்தபுரத்தில் இன்றைய தினம் துவங்கியுள்ளது. இந்தப் படத்தின் சூட்டிங்கில் பங்கேற்பதற்காக முன்னதாக படக்குழுவினர் கேரளா புறப்பட்டு சென்ற நிலையில் இன்றைய தினம் நடிகர் விஜய்யும் கேரளா சென்றுள்ளார். முன்னதாக 14 ஆண்டுகளுக்கு முன்பு விஜய், அசின் நடிப்பில் வெளியான காவலன் படத்திற்காக கேரளா சென்றிருந்தார் விஜய்.

தற்போது இத்தனை ஆண்டுகள் கழித்து மீண்டும் கேரளாவிற்கு ஷூட்டிங்கிற்காக சென்றுள்ளார். விஜய்யின் GOAT பட சூட்டிங் மற்றும் விஜய்யின் வருகையை கேள்வியுற்ற கேரள ரசிகர்கள் மிகச்சிறப்பான வகையில் விஜய்யை வரவேற்க தயாராகியிருந்தனர். அவருக்காக பேனர்கள் வைத்தும் பைக் ஊர்வலம் போன்றவற்றையும் செய்து தங்களது அன்பை வெளிப்படுத்தினர். தொடர்ந்து விமானம் மூலம் விஜய் வரவுள்ளதாக கூறப்பட்ட நிலையில், விமானநிலையத்தில் பல மணிநேரங்கள் காத்திருந்து விஜய்யை நேரில் சந்தித்து மகிழ்ந்தனர்.விமானத்திலிருந்து இறங்கிய விஜய்யும் ரசிகர்களுக்கு கையசைத்தும் வணக்கம் சொல்லியும் தன்னுடைய அன்பை வெளிப்படுத்தினார்.

Actor Vijay landed in kerala for the GOAT movie shooting and huge crowd gathered in Airport

நடிகர் விஜய்: நடிகர் விஜய்யின் நடிப்பில் உருவாகி வரும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தை இயக்கி வருகிறார் வெங்கட் பிரபு. இந்தப் படத்தின் ஷூட்டிங் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் நடந்து முடிந்துள்ள நிலையில் அடுத்ததாக ரஷ்யா தலைநகர் மாஸ்கோவிற்கு படக்குழுவினர் வரும் ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் பயணமாக உள்ளனர். இதனிடையே தற்போது கேரளாவின் திருவனந்தபுரத்தில் இந்த படத்தின் சூட்டிங் துவங்கியுள்ளது. இந்த படத்தின் ஷூட்டிங் சில தினங்கள் கேரளாவில் நடக்கவுள்ள நிலையில் சூட்டிங்கில் பங்கேற்பதற்காக நடிகர் விஜய் இன்றைய தினம் கேரளாவிற்கு சென்றுள்ளார்.

கேரள ரசிகர்கள் வெறித்தனம்: முன்னதாக அவரது இந்த ஷூட்டிங் குறித்த தகவல் அறிந்த கேரள ரசிகர்கள் அவரை வரவேற்பதற்காக காத்திருந்தனர். கோட் படத்தின் ஷூட்டிங் நடக்க உள்ள ஸ்போர்ட்ஸ் கிளப்பிலும் விஜய்க்கு சிறப்பான பேனர்களை வைத்து ரசிகர்கள் தங்களது அன்பை வெளிப்படுத்தினர். இதேபோல விஜய் பாணியில் பைக் ஊர்வலம் நடத்தியும் அவர்கள் மாஸ் காட்டினர். இந்நிலையில் இன்றைய தினம் விஜய் கேரளாவிற்கு விமானம் மூலம் வரவுள்ளதாக தகவல்கள் வெளியானதையடுத்து திருவனந்தபுரம் விமான நிலையத்தில் ஏராளமான ரசிகர்கள் காத்திருந்தனர். இதன் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்தது.

14 ஆண்டுகள் கழித்து விசிட்: விஜய்க்கு கேரளாவில் மரண மாஸான ரசிகர்கள் அதிகமானோர் உள்ளனர். அந்த வகையில் விஜய்யின் படம் கேரளாவில் ரிலீசானால் மற்ற கேரள நடிகர்களின் படங்கள் கூட அங்கு எடுபடாமல் போகும். அந்த வகையில் விஜய்க்கு கேரளாவில் தீவிர ரசிகர்கள் காணப்படுகின்றனர். இந்நிலையில் காவலன் படத்தை தொடர்ந்து 14 ஆண்டுகள் கழித்து விஜய் இன்றைய தினம் கேரளாவிற்கு பயணம் ஆகி உள்ளார். இதையடுத்து விமான நிலையத்தில் ஏராளமான ரசிகர்கள் குவிந்ததால் அங்கு போலீசார் தீவிர பாதுகாப்பில் ஈடுபட்டனர். இதையடுத்து விஜய் விமானத்தில் வந்து இறங்கியவுடன் அவரை உற்சாக ஆரவாரத்துடன் ரசிகர்கள் வரவேற்றனர்.

உற்சாகமான விஜய்: இதையடுத்து அவர்களுக்கு கையசைத்தும் கைகளை குவித்து வணக்கம் செலுத்தியும் விஜய் தன்னுடைய அன்பை வெளிப்படுத்தினார். தொடர்ந்து போலீசாரின் உதவியுடன் அவர் தன்னுடைய காரில் ஏறி தான் தங்கும் இடத்திற்கு விரைந்தார். தொடர்ந்து அடுத்தடுத்த நாட்கள் ஸ்போர்ட்ஸ் கிளப் கிரிக்கெட் ஸ்டேடியத்திலும் விமான நிலையத்தை ஒட்டிய பகுதிகளிலும் இந்த படத்தின் சூட்டிங் நடக்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது. முன்னதாக சென்னையில் விஜய்யின் கோட் பட சூட்டிங் கோவளம் உள்ளிட்ட பகுதிகளில் நடந்தபோது அவரை நேரில் கண்டு ரசிகர்கள் தங்களது அன்பை வெளிப்படுத்தினர். அதேபோல கேரளாவிலும் ரசிகர்கள் தினந்தோறும் அவரை சந்திக்க முயற்சிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X