வாவ்.. என்ன ஸ்மார்ட்.. இதுதான் தளபதி 66 லுக்கா?.. ட்ரெண்டான விஜய்யின் புகைப்படம்!

சென்னை : தளபதி விஜய் ஸ்மார்ட் லுக்கில் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது.

விஜய் தற்போது தெலுங்கு இயக்குனர் வம்சி உடன் தளபதி 66 படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு தற்காலிகமாக தளபதி 66 என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

தெலுங்கு சினிமாவில் கலக்கி வரும் தமன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். படத்தில் சில பாடல்கள் ஏற்கனவே கம்போஸ் செய்து முடிக்கப்பட்டு விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பீஸ்ட்

பீஸ்ட்

கடந்த ஏப்ரல் 13ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகி மாஸ் காட்டிய படம் பீஸ்ட். இந்த படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கியிருந்தார். முன்னதாக மாஸ்டர் வெற்றியை தொடர்ந்து விஜய் இந்த படத்தில் நடித்திருந்தார். இதில் பூஜா ஹெக்டே, இயக்குனர் செல்வராகவன், விடிவி கணேஷ், யோகிபாபு என பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

ரூ. 240 கோடி வசூல்

ரூ. 240 கோடி வசூல்

பீஸ்ட் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் முதல் நாளிலேயே 100 கோடி வசூலாகி பாக்ஸ் ஆபீஸில் ரேட்டிங்கை பெற்றது. உலகம் முழுவதும் பீஸ்ட் படத்தின் வசூல் ரூ. 240 கோடியை தாண்டியுள்ளது. இதனால் விஜய்யின் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தளபதி 66

தளபதி 66

இதையடுத்து விஜய் தற்போது தெலுங்கு இயக்குனர் வம்சி உடன் கைகோர்த்துள்ளார். தில் ராஜு தயாரித்து வரும் இந்த படத்தில் நாயகியாக தெலுங்கு நாயகி ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இவர் முன்னதாக சமீபத்தில் வெளியாகி ஹிட் கொடுத்த புஷ்பா படத்தில் அல்லு அர்ஜூனுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

ஹைதராபாத்தில் ஷூட்டிங்

ஹைதராபாத்தில் ஷூட்டிங்

தளபதி 66 படத்தில் சரத்குமார், ஷாம், யோகிபாபு உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து உள்ளனர். குடும்ப சென்டிமென்ட், ஆக்ஷன், காதல்,காமெடி என அனைத்தும் கொண்ட படமாக தளபதி 66 திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் விஜய்யின் தந்தையாக நடிகர் சரத்குமார் நடிக்க உள்ளார். கடந்த மாதம் பூஜையுடன் தளபதி 66 படப்பிடிப்பு தொடங்கி 3ம் கட்டமாக படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது.

ஸ்மார்ட் லுக்கில் விஜய்

ஸ்மார்ட் லுக்கில் விஜய்

இந்நிலையில், தளபதி விஜய் ஸ்மார்ட் லுக்கில் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது. கறுப்பு டீ ஷர்ட்டில், கண்ணாடி போட்டுக்கொண்டு காருக்குள் அமர்ந்து இருக்கிறார் விஜய். இந்த புகைப்படம் வெளியான சிறிது நேரத்தில் இணையத்தில் தளபதியின் ரசிகர்கள் டிராண்டாக்கி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X