ஏன் தலைவா டல்லா இருக்கீங்க... ரசிகர்களுக்கு பதிலளிப்பாரா விஜய்?

சென்னை : நடிகர் விஜய், பூஜா ஹெக்டே லீட் கதாபாத்திரங்களில் நடித்து வெளியாகவுள்ள படம் பீஸ்ட். படம் ரிலீசாக இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், படத்திற்கான பிரமோஷன்களை சன் பிக்சர்ஸ் முடுக்கிவிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக நடிகர் விஜய் 10 ஆண்டுகளுக்கு பிறகு சன் தொலைக்காட்சியில் படம் குறித்து பேட்டியளிக்கவுள்ளார்.

விஜய்யின் பீஸ்ட் படம்

விஜய்யின் பீஸ்ட் படம்

நடிகர் விஜய், பூஜா ஹெக்டே, அபர்ணா தாஸ், யோகி பாபு உள்ளிட்டவர்கள் லீட் கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம் பீஸ்ட். இந்தப் படம் வரும் 13ம் தேதி சர்வதேச அளவில் ரிலீசாக உள்ளது. இந்தியாவில் மட்டும் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட ஐந்து மொழிகளில் படம் ரிலீசாக உள்ளது.

அனைத்து தரப்பினரும் எதிர்பார்ப்பு

அனைத்து தரப்பினரும் எதிர்பார்ப்பு

இந்தப் படத்தின் ரிலீசை விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி அனைவரும் எதிர்பார்த்து காத்துள்ளனர். கடந்த ஆண்டில் வெளியான மாஸ்டர் படம் விஜய் ரசிகர்களுக்கு மாஸ் படமாக அமைந்தது. ஆயினும் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வெளியாக உள்ள பீஸ்ட் படம் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

பட்டையை கிளப்பும் பாடல்கள்

பட்டையை கிளப்பும் பாடல்கள்

படத்தின் 2 பாடல்கள் வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது. இதனிடையே கடந்த இரண்டாம் தேதி படத்தின் ட்ரெயிலர் ரிலீசானது. படத்தின் இந்தி ட்ரெயிலரும் நேற்றைய தினம் வெளியானது. இதேபோல தெலுங்கில் இன்று மாலை 5 மணியளவில் ட்ரெயிலர் ரிலீசாகவுள்ளது. இதேபோல இந்தி மற்றும் தெலுங்கில் ஜாலியோ ஜிம்கானா பாடல் இன்று மாலை 6 மணியளவில் வெளியாகவுள்ளது.

பான் இந்தியா படம்

பான் இந்தியா படம்

இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி என பான் இந்தியா படமாக வெளியாகவுள்ளது. விஜய்க்கு சர்வதேச அளவில் ஏராளமான ரசிகர்கள் காணப்படுகின்றனர். இதையொட்டியே படம் பான் இந்தியா படமாக வெளியாகவுள்ளது. தமிழ் மட்டுமின்றி படம் வெளியாகும் அனைத்து மொழிகளிலும் பிரமோஷனை சிறப்பாக செய்ய சன் பிக்சர்ஸ் திட்டமிட்டுள்ளது.

விஜய் பேட்டி

விஜய் பேட்டி

இந்நிலையில் கடந்த 10 ஆண்டுகளாக நடிகர் விஜய் தொலைக்காட்சிகளுக்கு பேட்டி எதுவும் கொடுக்காமல் இருந்தார். இதனிடையே, பீஸ்ட் படத்தின் பிரமோஷனையொட்டி வரும் 10ம் தேதி சன் தொலைக்காட்சிக்கு பேட்டியளிக்கவுள்ளார். அவரை பேட்டி காணவுள்ளார் படத்தின் இயக்குநர் நெல்சன் திலீப்குமார்.

விஜய் ரசிகர்களின் காத்திருப்பு

விஜய் ரசிகர்களின் காத்திருப்பு

இதன் பிரமோக்களை தொடர்ந்து சன் டிவி வெளியிட்டு வருகிறது. இதனால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்துடன் காணப்படுகின்றனர். இந்தப் பிரமோக்களில் நெல்சன் கேட்கும் கேள்விகளுக்கு நடிகர் விஜய் சிறப்பான பதிலை அளித்துள்ளார். இதையடுத்து ரசிகர்கள் 10 ஆண்டுகள் கழித்து விஜய் அளிக்கும் இந்த பேட்டிக்காக மரண மாசாக காத்திருக்கின்றனர்.

டல்லடிக்கும் விஜய்

டல்லடிக்கும் விஜய்

ஆனால் எப்போதும் உற்சாகமாக காணப்படுவார் விஜய். அவரது படங்களின் இசை வெளியீடுகளிலும் உற்சாக விஜய்யை பார்க்க முடியும். ஆனால் நெல்சன் எடுத்துள்ள இந்த தொலைக்காட்சி பேட்டியில் அவரது உற்சாகம் மிஸ்ஸிங். கேள்விகளுக்கு சிறப்பான பதில்களை கூறும் அவரிடம் உற்சாகம் இல்லாத நிலை காணப்படுகிறது.

வித்தியாசமான தலைமுடி

வித்தியாசமான தலைமுடி

மேலும் அதிகமான தலைமுடியுடன் வித்தியாசமாக காணப்படுகிறார் விஜய். இது வேண்டுமானால் அவரது அடுத்த கெட்டப் என்று கூறலாம். ஆனால் விஜய்யின் உற்சாகமின்மைக்கு என்ன காரணம் என்பதை அவர்தான் தெளிவுப்படுத்த வேண்டும். அதேபோல விஜய்யின் இசை வெளியீடு ரத்தானதற்கும் ஏராளமான காரணங்கள் கூறப்படுகின்றன.

உற்சாகமின்மைக்கு காரணம்?

உற்சாகமின்மைக்கு காரணம்?

அதையொட்டி தற்போது விஜய் உற்சாகமில்லாமல் காணப்படுகிறாரா என்ற சந்தேகமும் அவரது ரசிகர்களுக்கு ஏற்பட்டுள்ளது. தற்போது சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ள ப்ரமோக்களில் மட்டுமே உற்சாகமில்லாத விஜய்யை பார்க்க முடிகிறது. ஒட்டுமொத்த பேட்டியையும் பார்த்தால் மட்டுமே தெளிவான முடிவுக்கு வரமுடியும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X