Actor Vijay: தொடர்ந்து 2வது நாளாக ரசிகர்களை சந்தித்த விஜய்.. செல்ஃபி எடுத்து கொண்டாட்டம்!
சென்னை: நடிகர் விஜய்யின் அடுத்தடுத்த படங்கள் ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது. தற்போது The greatest of all time படத்தில் நடித்து வருகிறார் விஜய். இந்தப் படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். படத்தில் பிரஷாந்த், பிரபுதேவா, அஜ்மல், மோகன், லைலா, சினேகா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து வருகின்றனர். சென்னை, ஐதராபாத் உள்ளிட்ட இடங்களில் படத்தின் சூட்டிங் நடந்து முடிந்த நிலையில் தற்போது புதுச்சேரியில் படத்தின் சூட்டிங் நடந்து வருகிறது. இதையடுத்து ராஜஸ்தான் உள்ளிட்ட இடங்களில் படத்தின் சூட்டிங் நடக்கவுள்ளது.
படத்தின் சூட்டிங்கை வரும் ஏப்ரல் மாதத்திற்குள் நிறைவு செய்ய இயக்குநர் வெங்கட் பிரபுவிற்கு விஜய் அறிவுறுத்தியுள்ள நிலையில் படத்தின் சூட்டிங் விரைவு படுத்தப்பட்டுள்ளது. முன்னதாக படத்தின் பாடல் காட்சி படமாக்கப்பட்ட நிலையில் பிரஷாந்த், பிரபுதேவா, அஜ்மல் உள்ளிட்டவர்கள் அதில் பங்கேற்றனர். இந்தப் பாடலுக்கு பிரபுதேவா நடனம் அமைத்துள்ளார். இந்தப் பாடல் மிகச்சிறப்பாக அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. படத்தில் அப்பா மற்றும் மகன் என இருவேறு கெட்டப்புகளில் விஜய் நடித்துள்ள நிலையில், மகன் கேரக்டருக்காக அவருக்கு டீ-ஏஜிங் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

நடிகர் விஜய்: நடிகர் விஜய்யின் நடிப்பில் கடந்த ஆண்டில் வாரிசு, லியோ என அடுத்தடுத்த படங்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. குறிப்பாக லியோ படம் 600 கோடி ரூபாய்களை தாண்டி வசூலித்தது. இந்தப் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார் மாஸ்டர் படத்தை தொடர்ந்து விஜய் -லோகேஷ் கனகராஜ் கூட்டடணி இந்தப் படத்தில் இரண்டாவது முறையாக இணைந்திருந்தது. படத்தில் விஜய் -திரிஷா கெமிஸ்ட்ரியும் பேசப்பட்டது. அர்ஜூன், சஞ்சய் தத், மிஷ்கின், சாண்டி மாஸ்டர் என படத்தில் வில்லன்களுக்கு பஞ்சமில்லாமல் இருந்தது. இந்தப் படத்தை தொடர்ந்து தற்போது தன்னுடைய 68வது படத்தில் வெங்கட் பிரபு இயக்கத்தில் இணைந்துள்ளார் விஜய்.
The greatest of all time படம்: The greatest of all time என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் விஜய்யுடன் பிரஷாந்த், பிரபுதேவா, அஜ்மல், மோகன், லைலா, சினேகா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்டவர்கள் இணைந்துள்ளனர். படத்தின் சூட்டிங் அடுத்தடுத்து சென்னை, ஐதராபாத் உள்ளிட்டஇடங்களில் படமாக்கப்பட்டுள்ளன. தற்போது புதுச்சேரியில் படத்தின் சூட்டிங் நடந்து வருகிறது. இதையடுதது ராஜஸ்தான், இஸ்தான்புல் ஆகிய இடங்களில் படத்தின் சூட்டிங் திட்டமிடப்பட்டுள்ளது. விஜய் படத்தின் சூட்டிங் எங்கு நடந்தாலும் அந்த இடத்தை அவரது ரசிகர்கள் பரபரப்பாக மாற்றி விடுவார்கள். அந்த வகையில் தற்போது புதுசேரியில் சூட்டிங் நடக்கும் இடமும் உற்சாகமாக மாறியுள்ளது.
ரசிகர்களை சந்தித்த விஜய்: நேற்றைய தினமும் சூட்டிங் ஸ்பாட்டில் ரசிகர்களை சந்தித்து விஜய் செல்ஃபி எடுத்த நிலையில் இன்றும் இரண்டாவது நாளாக ரசிகர்களை சந்தித்து செல்ஃபி எடுத்துள்ளார். இதனால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகமடைந்துள்ளனர். விஜய்க்கு மலர்த்தூவி வாழ்த்துக்களை பகிர்ந்தனர். தளபதி என்று அவர்கள் உற்சாக முழக்கமிட்ட நிலையில் அவர்களுக்கு flying kiss கொடுத்து மேலும் உற்சாகப்படுத்தினார் விஜய். மிகவும் எளிமையான உடையுடன் அவர் காணப்பட்டதும் அனைத்து தரப்பினரையும் வெகுவாக கவர்ந்தது. கடந்த சில தினங்களுக்கு முன்பு அவர் தனது தமிழக வெற்றி கழகம் கட்சி குறித்து அறிவித்த நிலையில் அவரது ஒவ்வொரு அசையும் மிகுந்த கவனத்திற்குள்ளாகியுள்ளது.
விஜய்யின் அரசியல் என்ட்ரி: முன்னதாக விஜய் மக்கள் இயக்கம் சார்பில் பல்வேறு நலத்திட்டங்களை மேற்கொண்டு வந்த விஜய், தற்போது கட்சி துவங்கியுள்ளார். விரைவில் அவரது கட்சியின் கொடி உள்ளிட்டவை குறித்தும் பகிர்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது GOAT படத்தில் நடித்துவரும் விஜய் அடுத்ததாக தன்னுடைய தளபதி 69 படத்தில் நடித்துவிட்டு சினிமாவில் இருந்து விலகவுள்ளதாகவும் தீவிர அரசியலில் ஈடுபட உள்ளதாகவும் அறிவித்துள்ளார். இதையடுத்து அவரது இறுதிப்படமாக தளபதி 69 படம் மிகுந்த கவனத்தை பெற்றுள்ளது. இந்தப் படத்தின் இயக்குநர் குறித்து அறிந்துக் கொள்ளவும் ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











