வேலைன்னு வந்துட்டா தான் வெள்ளைக்காரன் மத்தபடி.. சூட்டிங் ஸ்பாட்டில் இவ்வளவு சேட்டை செய்வாரா விஜய்?
சென்னை: நடிகர் விஜய் மிகவும் ரிசர்வ்ட் டைப் என்றும் சூட்டிங் ஸ்பாட்டில் யாரிடமும் அதிகமாக பேச மாட்டார் என்றும் ஆனால் கேமரா என்று வந்து விட்டால் டோட்டலாக ஆளே மாறிவிடுவார் என்றும் அப்போது அந்த கேரக்டருக்கான விஷயங்களை தருவதில் அவர் மிகவும் ஆர்வம் காட்டுவார் என்றும் அவர் மீது பல்வேறு விமர்சனங்கள் தொடர்ந்து சக நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் வைத்து வருகின்றனர்.
இந்நிலையில் நடிகர் விஜய் ஷூட்டிங் ஸ்பாட்டில் மிகவும் கேஷுவலாக இயக்குநர்கள், இசையமைப்பாளர் அனிருத் ஆகியோருடன் கலகலப்பாக இருக்கும்படியான வீடியோ ஒன்று தற்போது வெளியாகி உள்ளது. இந்த வீடியோவில் பீஸ்ட், லியோ, கோட் படங்களின் சூட்டிங் ஸ்பாட்டில் விஜய் கலகலப்பாக இருந்ததற்கான காட்சிகளின் தொகுப்பு காணப்படுகிறது.

நடிகர் விஜய்: நடிகர் விஜய் 40 ஆண்டுகளை கடந்து தன்னுடைய திரைப் பயணத்தை தொடர்ந்து வருகிறார். இவரது இந்தப் பயணம் இந்த ஆண்டு இறுதிக்குள் அல்லது அடுத்த ஆண்டு துவக்கத்திற்குள் நிறைவடையும் என்று கூறப்படுகிறது. தற்போது தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடித்து முடித்துள்ள விஜய் அடுத்ததாக ஹெச் வினோத் இயக்கத்தில் தளபதி 69 படத்தில் இணையவுள்ளார். இந்தப் படம் குறித்த அறிவிப்பு விரைவில் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தின் ஷூட்டிங் நவம்பர் மாதத்தில் துவங்கும் என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த படத்துடன் சினிமாவில் இருந்து விலகி தீவிர அரசியலில் ஈடுபட உள்ளதாக விஜய் அறிவித்துள்ளார்.
விஜய் அரசியல் என்ட்ரி: விஜய்யின் இந்த அறிவிப்பால் ரசிகர்கள் ஏமாற்றத்திற்கு உள்ளான போதிலும் அவரது அரசியல் என்ட்ரி அவர்களுக்கு தெம்பை கொடுத்துள்ளது. குழந்தை நட்சத்திரமாகவே தன்னுடைய அப்பா இயக்கத்தில் சில படங்களில் நடித்துள்ள நடிகர் விஜய், தொடர்ந்து நாளைய தீர்ப்பு படம் மூலம் ஹீரோவாக சினிமாவில் என்ட்ரி ஆனார். துவக்கத்தில் மிகப்பெரிய விமர்சனங்களை இவரது நடிப்பு மற்றும் தோற்றம் பெற்றிருந்தது. அவற்றிலிருந்து தன்னை முன்னேற்றிக் கொண்டு தன்னுடைய அடுத்தடுத்த படங்கள் மூலம் ரசிகர்களை கவர்ந்து தொடர்ந்து இளைய தளபதியிலிருந்து தளபதியாக மாறி ரசிகர்களை கவர்ந்து வருகிறார் விஜய்.
அதிகமாக பேசாத விஜய்: விஜய் என்றாலே ஷூட்டிங்கிற்கு குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாகவே வருவார் என்றும் செட்டில் எப்படி இருந்தாலும் கேமரா முன்பு மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்துவார் என்றும் டோட்டலாக ஆளே மாறிவிடுவார் என்றும் பல்வேறு கருத்துக்கள் சக நடிகர்களால் தொடர்ந்து கூறப்பட்டு வருகிறது. அதிகமாக யாருடனும் பேச மாட்டார் என்றும் விஜய் மீது தொடர்ந்து விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகிறது. மிகவும் ரிசர்வ்ட் டைப் என்றும் விஜய் குறித்து கூறப்பட்டுள்ளது. சிறுவயதில் விஜய் மிகவும் துறுதுறுவென காணப்பட்டதாகவும் அவரது தங்கை வித்யாவின் மரணம் விஜய்யின் கேரக்டரை மாற்றியதாகவும் கூறப்படுகிறது.
சூட்டிங் ஸ்பாட் வீடியோ: இந்நிலையில் விஜய் ஷூட்டிங் ஸ்பாட்டில் அடுத்தடுத்து இயக்குனர், இசையமைப்பாளர் என அனைவரிடமும் மிகவும் ரிலாக்ஸாக தன்னுடைய குறும்புத்தனங்களை வெளிப்படுத்தும் வகையில் நடந்து கொண்ட நிகழ்வுகளின் தொகுப்பு தற்போது வீடியோவாக சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இதில் இயக்குனர் லோகேஷ், நெல்சன் இசையமைப்பாளர் அனிருத் உள்ளிட்டவர்களுடன் குறும்புடன் விஜய் பழகியதை பார்க்க முடிந்தது. கோட் படப்பிடிப்பில் அவர் ஸ்கேட்டிங் ஓட்டிய காட்சிகளையும் இந்த வீடியோவில் ரசிகர்கள் இணைத்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











