பாலய்யா ரேஞ்சுக்கு பல்க் ஆகிறாரா விஜய்?.. ஜெயில் செட் வேறயாம்.. கடைசியில அந்த படம் தானா?
சென்னை: தளபதி 69 படத்தில் நடிகர் விஜய் போலீஸ் அதிகாரியாக நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. எச். வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் விஜய்யின் கடைசி படமான தளபதி 69 படத்தில் வில்லனாக பாபி தியோல் நடித்து வருகிறார். அனிமல் படத்தில் அவருக்கு நல்ல வரவேற்பு இருந்தது. ஆனால், கோலிவுட்டில் அவர் அறிமுகமான கங்குவா படம் அவருக்கு பெரிய ஹிட் படமாக அமையவில்லை.
விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். முக்கியமான கதாபாத்திரத்தில் மமிதா பைஜு, பிரியாமணி, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பல பிரபலங்கள் இந்த படத்தில் நடித்து வருகின்றனர்.

தளபதி 69 படத்தின் கதை பாலகிருஷ்ணா நடிப்பில் தெலுங்கில் வெளியான பகவந்த் கேசரி படத்தின் கதைதான் என ஏகப்பட்ட தகவல்கள் உலா வருகின்றன. இந்நிலையில், விஜய்யின் லேட்டஸ்ட் லுக்கை பார்த்த ரசிகர்கள் ஒருவேள இருக்குமோ என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
பகவந்த் கேசரி: அனில் ரவிப்புடி இயக்கத்தில் கடந்த ஆண்டு அக்டோபர் 18ம் தேதி வெளியான பாலகிருஷ்ணா நடித்த பகவந்த் கேசரி தெலுங்கில் மிகப்பெரிய வெற்றியடைந்தது. தமிழிலும் டப் செய்து அந்த படம் வெளியானது. காஜல் அகர்வால், ஸ்ரீலீலா உள்ளிட்ட பலர் பகவந்த் கேசரி படத்தில் நடித்திருந்தனர். டேக்கர் லாரியை எடுத்துக் கொண்டு ஏரில் பறந்து ஆக்ஷன் காட்சியெல்லாம் செய்து பாலகிருஷ்ணா பகீர் கிளப்பியிருப்பார். காஜல் அகர்வாலை ஆன்ட்டி என பாலய்யா சொல்வதை பார்த்து அவரை விட ரசிகர்களுக்கு ஹார்ட் அட்டாக் வந்துவிட்டது. ஸ்ரீலீலாவை தனது மகள் போல வளர்த்து வரும் பாலய்யா அவருக்கு வீரத்தை ஊட்ட முயற்சிப்பார். கடைசியில் ஸ்ரீலீலாவுக்கு வீரம் வந்து எதிரிகளை எப்படி பந்தாடுகிறார் என்பது தான் அந்த படத்தின் கதையாக அமைந்திருந்தது.

தளபதி 69 அந்த படம்தானா?: சென்னையில் தற்போது ஜெயில் செட் எல்லாம் போட்டு படமாக்கி வருகின்றனர் என்கிற தகவல்கள் கசிந்துள்ளன. பகவந்த் கேசரி படத்தின் இன்ட்ரோ சீனே ஜெயில் சீன் தான் என்பதால் அதே படம் தானா? என்கிற கேள்விகளையும் ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர். பகவந்த் கேசரி படத்தின் தழுவல் என்றும் எச். வினோத் புதிய படம் போலவே இதை உருவாக்கி வருகிறார் என்றும் மமிதா பைஜு விஜய்க்கு தங்கையாக நடித்து வருகிறார் என்றும் சில நெருங்கிய வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

பல்க்கான விஜய்: விக்கிரவாண்டி வி. சாலையில் பிரம்மாண்டமாக விஜய்யின் மாநாடு நடந்தது. சுமார் 8 லட்சத்துக்கும் அதிகமான நபர்கள் பங்கேற்றனர். 180 ஏக்கரில் மாநாடு நடத்த இடம் கொடுத்த மக்களுக்கு நன்றி தெரிவித்து விஜய் அவர்களுக்கு இன்று விருந்தளித்தார். அந்த விழாவுக்கு வந்த நடிகர் விஜய் திடீரென பல்க்காக ஆகிவிட்டாரே என்றும் பாலய்யா அளவுக்கு மாறிவருகிறாரா? என ஏகப்பட்ட கேள்விகளை தற்போது சோஷியல் மீடியாவில் ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர். கோட் படத்துக்காக உடல் எடையை குறைத்து விஜய் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. தெலுங்கு படங்களை ரீமேக் செய்து முன்பெல்லாம் நடிகர் விஜய் பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார். அதே பாணியை தனது கடைசி படத்துக்காகவும் விஜய் எடுத்திருக்கிறாரா? அல்லது எச். வினோத் புதிய கதையாக இந்த படத்தைக் கொடுத்து ரசிகர்களை குஷிப்படுத்துவாரா என்பது விரைவில் தெரிந்துவிடும்.


Click it and Unblock the Notifications











