வாவ்.. விஜய் ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. இம்மாதம் வெளியாகிறது தளபதி 66 அப்டேட்!

சென்னை: நடிகர் விஜய்யின் 66வது படம் குறித்த அறிவிப்பு இம்மாதம் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். குழந்தைகள், இளைஞர்கள், பெண்கள், பெரியவர்கள் என கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டுள்ளார்.

விஜய்யின் திரைப்படம், திரைப்படம் குறித்த அப்டேட்டுகள் எது வெளியாவது என்றாலும் அவருடைய ரசிகர்களுக்கு திருவிழாதான். கன்னாபின்னாவென ஹேஷ்டேக்குகளை கிரியேட் செய்து டிவிட்டரை தெறிக்க விடுவார்கள்.

பீஸ்ட் படத்தில் நடிக்கும் விஜய்

பீஸ்ட் படத்தில் நடிக்கும் விஜய்

நடிகர் விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் படத்தை தொடர்ந்து தற்போது நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். விஜய்யின் 65வது படமான இப்படத்தின் டைட்டில் கடந்த ஜூன் மாதம் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடப்பட்டது.

செல்வராகவன் வில்லன்

செல்வராகவன் வில்லன்

இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே, செல்வராகவன், அபர்ணா தாஸ், விடிவி கணேஷ், யோகி பாபு, சதீஷ் கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். பீஸ்ட் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

பீஸ்ட் பொங்கல் ரிலீஸ்

பீஸ்ட் பொங்கல் ரிலீஸ்

பீஸ்ட் திரைப்படத்தை பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடைபெற்றது. அதனை தொடர்ந்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கடந்த மே மாதம் சென்னையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

பீஸ்ட் படத்தின் 4வது கட்ட படப்பிடிப்பு

பீஸ்ட் படத்தின் 4வது கட்ட படப்பிடிப்பு

ஆனால் அப்போது கொரோனா இரண்டாவது அலை உச்சத்தில் இருந்ததால் படப்பிடிப்பு தள்ளிப் போனது. கொரோனா இரண்டாவது அலை சற்று ஓய்ந்துள்ளதால் தற்போது மீண்டும் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. அந்த வகையில் பீஸ்ட் படத்தின் 4வது கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது.

தோனி விஜய் சந்திப்பு

தோனி விஜய் சந்திப்பு

கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை கோகுலம் ஸ்டுடியோவில் பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. அப்போது விளம்பர படத்தின் ஷூட்டிங்கிற்காக அந்த ஸ்டுடியோவுக்கு வந்த கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி, நடிகர் விஜய்யை நேரில் சந்தித்தார்.

 தெலுங்கு இயக்குநர் வம்சி

தெலுங்கு இயக்குநர் வம்சி

அந்த போட்டோக்கள் இணையத்தில் வைரலானது. இந்நிலையில் விஜய்யின் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகி வருகிறது. அதாவது அடுத்ததாக நடிகர் விஜய் தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் தமிழ், தெலுங்கில் உருவாகும் புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார்.

தில் ராஜு தயாரிப்பு

தில் ராஜு தயாரிப்பு

இப்படத்தினை, பிரபல தெலுங்கு சினிமா தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார். வம்சி முதன்முறையாக இயக்குநராக அறிமுகமான பிரபாஸின் 'முன்னா' படத்தை தில் ராஜுதான் தயாரித்தார். மேலும் வம்சி இயக்கத்தில் வெளியான ராம் சரண் - அல்லு அர்ஜுனின் 'யுவடு' படத்தையும் அவர் தான் தயாரித்தார்.

தளபதி 66 படத்தின் அறிவிப்பு

தளபதி 66 படத்தின் அறிவிப்பு

தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் 'மகரிஷி' படத்தையும் தில் ராஜுதான் தயாரித்தார். இந்த நிலையில், வம்சி இயக்கும் விஜய் படத்தையும் தில் ராஜுதான் தயாரிக்கிறார் என கூறப்படுகிறது. ஏற்கனவே இம்மாதம் 'பீஸ்ட்' படத்தின் முதல் பாடல் வெளியாகிறது என்று கூறப்பட்ட நிலையில் விஜய் நடிக்கும் தளபதி 66 படத்தின் அறிவிப்பும் இம்மாதமே வெளியாகும் என கூறப்படுகிறது.

அப்டேட் - ரசிகர்கள் மகிழ்ச்சி

அப்டேட் - ரசிகர்கள் மகிழ்ச்சி

கடந்த ஜூன் 22 ஆம் தேதி நடிகர் விஜய்யின் 47வது பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. அன்றைய தினமே அவரது அடுத்தப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் இம்மாதம் படத்தின் அறிவிப்பு வெளியாகும் என்று தகவல் பரவி வருவது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X