அடேங்கப்பா... மிரட்டுறாப்ல... விறுவிறு வில்லனாக நடிக்க விஜய் சேதுபதிக்கு இவ்ளோ கோடி ரூபாயாம்ல!
சென்னை: நடிகர் விஜய் சேதுபதி வில்லனாக நடிப்பதற்காக பேசப்பட்ட சம்பளம் தெரிய வந்துள்ளது.
நடிகர் விஜய் சேதுபதி, இப்போது, கடைசி விவசாயி, லாபம், யாதும் ஊரே யாவரும் கேளிர், துக்ளக் தர்பார் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
மலையாளத்தில் மார்கோனி மத்தாய் என்ற படத்தில் நடித்தார். இப்போது நடிகர் விஜய்யின் மாஸ்டர் படத்தில் வில்லனாக நடித்து வருகிறார்.

லால் சிங் சத்தா
தெலுங்கில் உப்பென்னா என்ற படத்திலும் இந்தியில் ஆமிர்கான் நடிக்கும் லால் சிங் சத்தா என்ற படத்திலும் நடித்து வருகிறார். தெலுங்கில் தொடர்ந்து நடிக்க அவருக்கு வாய்ப்புகள் வந்துகொண்டிருக்கிறது.

ராஷ்மிகா மந்தனா
இந்நிலையில், பிரபல தெலுங்கு ஹீரோ அல்லு அர்ஜுன் நடிக்கும் படத்தில் அவர் வில்லனாக நடிக்கிறார். இதை அல்லு அர்ஜுன் நிகழ்ச்சி ஒன்றில் உறுதிப்படுத்தினார். இந்தப் படத்தை சுகுமார் இயக்குகிறார். இதில் ஹீரோயினாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.

எத்தனை கோடி?
இந்தப் படத்தில் வில்லனாக நடிக்க, அவர் எவ்வளவு சம்பளம் வாங்கியுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதாவது அவர் 10 பத்து கோடி ரூபாய் சம்பளம் வாங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

சரியான சம்பளம்
ஆனால், இதை படக்குழு உறுதிப்படுத்தவில்லை. தமிழில் முன்னணி ஹீரோவாக உள்ள ஒருவருக்கு வில்லனாக நடிக்க இது சரியான சம்பளம்தான் என்று கோலிவுட்டில் கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications











