அந்த மனசுதான் சார் கடவுள்.. ஃபெஃப்சி தொழிலாளர்களுக்கு ரூ. 1 கோடி வழங்கிய நடிகர் விஜய் சேதுபதி!

சென்னை: ஃபெஃப்சி தொழிலாளர்கள் வீடு கட்டுவதற்காக நடிகர் விஜய் சேதுபதி ஒரு கோடி ரூபாய் நன்கொடை வழங்கியுள்ளார்.

Recommended Video

Vijaysethupathi FEFSI pressmeet | Hindiல் பேசி அசத்திய Vjs, Bhagyaraj, R.K.Selvamani

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. தற்போது 10க்கும் மேற்பட்ட படங்களை கை வசம் வைத்துள்ளார்.

மாமனிதன், கடைசி விவசாயி, யாதும் ஊரே யாவரும் கேளிர், முகிழ் உள்ளிட்ட படங்கள் ரிலீஸுக்காக காத்திருக்கின்றன.

எதிர்பார்த்த அளவுக்கு கைகொடுக்கவில்லை

எதிர்பார்த்த அளவுக்கு கைகொடுக்கவில்லை

இதேபோல் இந்தி மற்றும் தெலுங்கு படங்களிரும் நடித்து வருகிறார் விஜய் சேதுபதி. அண்மையில் அவரது நடிப்பில் துக்ளக் தர்பார் மற்றும் அன்பெல் சேதுபதி ஆகிய படங்கள் ரிலீஸ் ஆனது. ஆனால் இந்த படங்கள் எதிர்பார்த்த அளவுக்கு கைகொடுக்க வில்லை.

பலருக்கும் உதவி வரும் விஜய் சேதுபதி

பலருக்கும் உதவி வரும் விஜய் சேதுபதி

தொடர்நது பல படங்களில் பிஸியாக நடித்து வரும் விஜய் சேதுபதி, ஏழை எளியோருக்கும் அவ்வப்போது உதவி வருகிறார். படிக்க முடியாத ஏழை மாணவ மாணவிகள் உட்பட லாக்டவுனின் போது வருமானம் இன்றி தவித்த பலருக்கும் உதவியுள்ளார் நடிகர் விஜய் சேதுபதி.

நடிகர்கள் குடும்பத்திற்கு உதவி

நடிகர்கள் குடும்பத்திற்கு உதவி

இதேபோல் கொரோனா தொற்றின் போது தமிழக அரசுக்கும் சினிமா சார்ந்த துறைகளுக்கும் தன்னால் முடிந்த அளவுக்கு உதவி செய்துள்ளார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மறைந்த நடிகர் தவசியின் குடும்பம், மறைந்த பிரபல சின்னத்திரை நடிகர் வடிவேல் பாலாஜி ஆகியோரின் குடும்பத்திற்கும் நடிகர் விஜய் சேதுபதி உதவியுள்ளார்.

ஃபெஃப்ஸிக்கு நிதியுதவி

ஃபெஃப்ஸிக்கு நிதியுதவி

இதுபோல் அவர் செய்த பல உதவிகள் வெளியே தெரிந்துள்ளது. சில உதவிகள் தெரியாமலேயே போயிருக்கிறது. இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி தென்னிந்தியத் திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனமான ஃபெஃப்ஸிக்கு நிதியுதவி செய்துள்ளார்.

ரூ. 1 கோடி நன்கொடை

ரூ. 1 கோடி நன்கொடை

ஃபெஃப்ஸி அமைப்பு தங்களின் நலிந்த தொழிலாளர்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. அந்த வகையில்

திரைப்படத்துறையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு வீடுகட்டிக் கொடுக்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளது. இதற்கு உதவும் வகையில் நடிகர் விஜய் சேதுபதி ரூபாய் ஒரு கோடியை நன்கொடையாக வழங்கியுள்ளார்.

காசோலை வழங்கிய விஜய் சேதுபதி

காசோலை வழங்கிய விஜய் சேதுபதி

இதனை ஃபெஃப்சி அமைப்பின் தலைவர் ஆர்.கே.செல்வமணியிடம் அளித்துள்ளார் நடிகர் விஜய் சேதுபதி. கலைப்புலி எஸ்.தாணு, பாக்கியராஜ் போன்ற சங்க நிர்வாகிகளின் முன்னிலையில் ஒரு கோடி ரூபாய்க்கான காசோலையை விஜய் சேதுபதி அளித்துள்ளார்.

நடிகரின் பிள்ளைகள் கணக்கில் ரூ.50 லட்சம்

நடிகரின் பிள்ளைகள் கணக்கில் ரூ.50 லட்சம்

இந்நிலையில் வெண்ணிலா கபடிக் குழு படத்தில் நடித்த நடிகர் நிதிஷ் வீராவின் 2 மகன்களின் வங்கிக்கணக்கில் 50 லட்சம் ரூபாய் டெப்பாசிட் செய்துள்ளார். நடிகை நிதிஷ் வீரா கடந்த மே மாதம் கொரோனாவால் உயிரிழந்தார். அவரது பிள்ளைகளுக்கு உதவும் வகையில் நடிகர் விஜய் சேதுபதி இந்த நிதியுதவியை செய்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X