என்னை முகத்திற்கு நேராக புகழ்வது பிடிக்காது.. சொல்றது யாருன்னு தெரியுமா?
என்னை முகத்திற்கு நேராக புகழ்வது பிடிக்காது என நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.
Recommended Video

ஜூங்கா கதை சொல்லும் விஜய் சேதுபதி- வீடியோ
சென்னை: என்னை முகத்திற்கு நேராக புகழ்வது பிடிக்காது என நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.
தனது நடிப்பு திறமையால் தமிழ் திரையுலகில் அசுர வளர்ச்சியடைந்தவர் நடிகர் விஜய் சேதுபதி. மக்கள் செல்வன் என்றும் அன்போடு அழைக்கப்படுகிறார்.

இந்நிலையில் ரஜினியுடன் அவரது 165வது படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். அனைவருக்கும் பிடித்த நடிகரான விஜய்சேதுபதிக்கு பிடிக்காத விஷயம் ஒன்று உள்ளதாம்.
அது என்னவென்றால், விஜய்சேதுபதியை நேராக புகழ்ந்தால் சுத்தமாக பிடிக்காதாம். அவரை எதிரில் உட்கார வைத்துக்கொண்டே புகழ்ந்து பேசுவது பிடிக்கவே பிடிக்காது என கூறியுள்ளார்.
அதுபோன்ற சமயங்களில் என்னசெய்வதென்று புரியாமல், எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் எதையோ யோசிப்பது போன்று அங்கும் இங்கும் வேடிக்கை பார்த்துக்கொண்டு அமர்ந்திருப்பேன் என்றும் விஜய்சேதுபதி தெரிவித்துள்ளார்.
Comments


Click it and Unblock the Notifications