துபாயில் பாத்ரூம் கழுவினேன்..கனவுகாணக் கூட நேரம் இருக்காது; விஜய் சேதுபதி எமோஷ்னல்

சென்னை: தமிழ் சினிமா வட்டாரத்தில் எல்லோராலும் கொண்டாடப்படும் நடிகர் என்றால் அதில் விஜய் சேதுபதி பெயர் டாப் லிஸ்ட்டில் இருக்கும். சினிமாவில் நடிக்க பல ஆண்டுகளாக முயற்சி செய்து, சைடு கேரக்ட்டர்களில் நடித்து, கடந்த 2010ஆம் ஆண்டு இயக்குநர் சீனு ராமசாமி இயக்கத்தில் வெளியான தென்மேற்கு பருவக்காற்று படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார்.

அதன் பின்னர் தனக்கு கிடைத்த நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்துக்கொண்டு இருந்த விஜய் சேதுபதியின் மார்க்கெட் தொடர்ந்து உயர்ந்த வண்ணம் இருக்கின்றது. கதாநாயகன் மட்டும் இல்லாமல், வில்லன், குணச்சித்திர கதாப்பத்திரங்கள், கௌரவ வேடங்கள் என தொட்ட இடத்தில் எல்லாம் தனது முத்திரையைப் பதித்து வந்தார் விஜய் சேதுபதி. சமீபத்தில் இந்தி சினிமா பக்கம் எட்டிப் பார்த்துள்ள விஜய் சேதுபதி அங்கும் நல்ல விமர்சனங்களையே பெற்று வருகின்றார்.

Actor Vijay Sethupathi VJS 50 Maharaja Movie

விஜய் சேதுபதி 50

இந்நிலையில் இவரது 50வது படமான மகாராஜா திரைப்படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது. மகாராஜா படத்தை குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நித்திலன் சுவாமிநாதன் இயக்கியுள்ளார். மகாராஜா படத்தை சுதன் சுந்தரம் மற்றும் ஜெகதீஷ் பழனிசாமி இணைந்து தயாரித்துள்ளனர். இதில், அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நட்ராஜ், முனிஸ் காந்த், சிங்கம்புலி, பாரதிராஜா, வினோத் சாகர், ஏ.எல் தேனப்பன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் ட்ரைலர் சில தினங்களுக்கு முன்னர் துபாயில் உள்ள புர்ஜ் கலிஃபாவில் ஒளிபரப்பப்பட்டது. விஜய் சேதுபதியின் 50வது திரைப்படம் வரும் 14ஆம் தேதி முதல் ரிலீசாகவுள்ளது. நேற்று அதாவது ஜூன் 8ஆம் தேதி இந்த படத்தில் இருந்து சித் ஸ்ரீராம் பாடிய தாயே தாயே என்ற பாடலின் லிரிக் வீடியோ வெளியிடப்பட்டது. இந்த பாடலை வைரமுத்து எழுதியுள்ளார். அப்பா மகள் பாசத்தை விவரிக்கும் இந்த பாடலுக்கு ரசிகர்கள் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Actor Vijay Sethupathi VJS 50 Maharaja Movie

ஏக்கத்தோடு பார்த்திருக்கின்றேன்

இந்நிலையில் மகராஜா படக்குழுவினர் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய விஜய் சேதுபதி, " எனக்கு 21 வயது இருந்த போது துபாய்க்கு வேலைக்கு வந்தேன். குடும்பத்தின் வருமையைப் போக்க அந்த காலகட்டத்தில் என்னால் இப்படித்தான் உதவ முடிந்தது. மாதம் 10 ஆயிரம் ரூபாய் அனுப்புவேன். துபாயில் அங்கங்கு வெண்டர் மிஷின் இருக்கும். அதில் காசு போட்டால் கூல் டிரிங்ஸ் வரும். அதனை பலமுறை ஏக்கத்துடனே பாத்திருக்கின்றேன்.

Actor Vijay Sethupathi VJS 50 Maharaja Movie

பாத்ரூம் கழுவியிருக்கேன்

வெளிநாட்டில் வேலை செய்கின்றேன் என்பதற்காக நான் ரொம்ப ஜாலியாக எல்லாம் இல்லை. வியாழக்கிழமை அனைவரும் ஒன்றாக இணைந்து கறி சமைத்து சாப்பிடுவோம். கிரிக்கெட் விளையாடுவோம், தங்கியிருக்கும் ரூமை சுத்தம் செய்வோம் பாத்ரூம் கழுவுவோம் அவ்வளவுதான். அங்கு 21 வயது இளைஞனுக்கு கனவு காணக் கூட நேரம் இருக்காது. புர்ஜ் கலிஃபாவில் மகாராஜா படத்தின் டிரைலர் ஒளிபரப்பப்பட்டபோது கூட நான் அதைப் பார்க்காமல் 21 வயதில் நான் எவ்வாறு இங்கு கஷ்டப்பட்டுகொண்டு இருந்தேன் என்பதைத்தான் யோசித்துக் கொண்டு இருந்தேன் என எமோஷ்னலாக பேசியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X