வெற்றி வேல் வீர வேல்.. தைப்பூசத்திற்கு வேலுடன் போஸ் கொடுத்த விஜய் சேதுபதி!
சென்னை: தைப்பூசத்தை முன்னிட்டு இன்று முருகன் கோயில்களில் தைப்பூசத் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் விஜய்சேதுபதி கையில் வேலுடன் இருக்கும் போட்டோவை வெளியிட்டு அனைவருக்கும் வாழ்த்து கூறியுள்ளார்.
தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். தை மாதத்தின் முக்கிய நிகழ்வு தைப்பூசம். இந்த நாளில் அரசியல் கட்சி தலைவர்கள் முதல் திரைப்பிரபலங்கள் வரை அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், இன்று பிரதமர் மோடி தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார். வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என ட்விட்டரில் பதிவிட்ட பிரதமர் மோடி, முருகப்பெருமானின் அருள் எப்போதும் நமக்குக் கிடைக்கட்டும் என்றும், எல்லாருக்கும் நல்ல ஆரோக்கியம், வெற்றி கிடைக்கட்டும் என்று கூறியுள்ளார்.

வெற்றிவேல் வீரவேல்: அதே போல, இந்த தைபூசத் திருநாளை முன்னிட்டு, நடிகர் விஜய்சேதுபதி, கையில் பெரிய வேலுடன் இருக்கும் போட்டோவை பகிர்ந்து அனைவருக்கும் இனிய தைப்பூச தின நல்வாழ்த்துக்கள் என கூறியுள்ளார். அந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் அனைவரும் "வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா" என்றும் வெற்றி வேல் வீரவேல் என கருத்துக்களை பகிர்ந்துள்ளனர்.
Slum Dog: விஜய்சேதுபதி நடித்த காந்தி டாக்ஸ் மௌன திரைப்படம் வெள்ளிக்கிழமை வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து பூரி ஜெகன்நாத் இயக்கத்தில், 'ஸ்லம் டாக்' படத்தில் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் பான் இந்திய திரைப்படமாக வெளியாக உள்ள இந்த படத்தில், சமயுக்தா, தபு ஆகியோர் முக்கிய ரோலில் நடித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











