Vijay Sethupathi: ஆர்ஜே பாலாஜியோட சேர்ந்து தம் அடிச்சிருக்கேன்.. விஜய் சேதுபதி கூல்!

சென்னை: நடிகர் ஆர்ஜே பாலாஜி -இயக்குநர் கோகுல் கூட்டணியில் உருவாகியுள்ள சிங்கப்பூர் சலூன் படம் வரும் 25ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ள நிலையில், இன்றைய தினம் படத்தின் ட்ரெயிலர் ரிலீசாகியுள்ளது. லோகேஷ் கனகராஜ், ஜீவா என இந்தப் படத்தில் கேமியோ ரோலில் நட்சத்திரங்கள் இணைந்துள்ள நிலையில், பிரபல நடிகர் ஒருவரும் படத்தில் இணைந்துள்ளதாகவும் அதை படக்குழுவினர் சஸ்பென்சாக வைத்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. படத்தில் The greatest of all time படத்தில் விஜய்யுடன் ஜோடி சேர்ந்துள்ள மீனாட்சி சவுத்ரி நாயகியாக அறிமுகமாகியுள்ளார்.

இன்னும் சில தினங்களில் படம் ரிலீசாகவுள்ள நிலையில், படத்திற்கான பிரமோஷன்களில் படக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர். படத்தில் சத்யராஜ், லால், ரோபோ சங்கர் உள்ளிட்டவர்களும் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர். படத்தில் இன்ஜினீயரிங் முடித்து கேம்பஸ் இன்டர்வியூவில் செலக்ட் ஆன போதிலும் தன்னுடைய கனவான முடி திருத்தும் நிபுணராகிறார் ஆர்ஜே பாலாஜி. இந்த முயற்சியில் அவர் சந்திக்கும் சவால்களை இந்தப் படம் கதைக்களமாக கொண்டுள்ளது. இந்தப் படத்தின் ட்ரெயிலர் ரிலீஸ் நிகழ்ச்சி இன்றைய தினம் சென்னையில் நடைபெற்றது. இதில் விஜய் சேதுபதி சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டு பல விஷயங்களை பகிர்ந்துள்ளார்.

Actor Vijay Sethupathi hails Singapore Saloon movie and hero RJ Balaji

நடிகர் ஆர்ஜே பாலாஜி: ரசிகர்களை கவரும்வகையில் எல்கேஜி, மூக்குத்தி அம்மன் போன்ற படங்களில் நடித்துள்ள ஆர்ஜே பாலாஜி, அடுத்ததாக கோகுல் இயக்கத்தில் நடித்துள்ள படம் சிங்கப்பூர் சலூன். இந்தப் படம் வரும் 25ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. விஜய்யுடன் The greatest of all time படத்தில் ஜோடியாகியுள்ள மீனாட்சி சவுத்ரி, இந்தப் படத்தில் நாயகியாக நடித்துள்ளார். சத்யராஜ், லால், ரோபோ சங்கர் உள்ளிட்டவர்களும் படத்தில் முக்கியமான கேரக்டர்களில் நடித்துள்ளனர். மேலும் படத்தில் லோகேஷ் கனகராஜ், ஜீவா ஆகியோரும் கேமியோ ரோல்களில் நடித்துள்ளனர்.

சிங்கப்பூர் சலூன் படம்: இதுமட்டுமில்லாமல் படத்தில் பிரபல ஹீரோ ஒருவரும் கேமியோ ரோலில் நடித்துள்ளதாகவும் அது சஸ்பென்சாக வைக்கப்பட்டுள்ளதாகவும் படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து அறிந்துக் கொள்ள ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயண்ட் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இன்னும் சில தினங்களில் படம் ரிலீசாகவுள்ள நிலையில், இன்றைய தினம் படத்தின் ட்ரெயிலர் வெளியீட்டு விழா நடத்தப்பட்டது.

நடிகர் விஜய் சேதுபதி: இந்த நிகழ்ச்சியில் நடிகர் விஜய் சேதுபதி உள்ளிட்டவர்கள் கலந்துக் கொண்டனர். முன்னதாக கோகுல் இயக்கத்தில் ஜூங்கா, இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படங்களில் விஜய் சேதுபதி நடித்துள்ள நிலையில், அவருடன் இணைந்து பணி புரிவது மிகவும் டார்ச்சர் என்று விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார். படத்தின் ட்ரெயிலரை தான் பார்த்ததாகவும் மிகவும் சிறப்பாக இருப்பதாகவும் அது கொடுக்கும் எனர்ஜி சிறப்பாக இருப்பதாகவும் புதியதாக துவங்கப்பட்ட சேனலின் லோகோ போல படத்தின் டைட்டில் இருப்பதாகவும் அவர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

Actor Vijay Sethupathi hails Singapore Saloon movie and hero RJ Balaji

சிங்கப்பூர் சலூன் ட்ரெயிலர்: இந்த ட்ரெயிலர் அதிகமான மக்கள் திரையரங்குகளுக்கு அழைத்து வரும் என்று தான் நம்புவதாகவும் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார். இந்தப் படத்தில் பாலாஜியை திரையில் பார்ப்பது மிகவும் சிறப்பாக உள்ளதாகவும் ரொம்ப வருடங்களுக்கு முன்னதாக பிக் எப்எம்மில் ஒரு படத்தின் ஸ்கிரீன் ப்ளே குறித்தெல்லாம் பேசிவிட்டு மொட்டை மாடியில் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக தம் அடித்துக் கொண்டே பேசியதாகவும் விஜய் சேதுபதி நினைவுகளை பகிர்ந்துக் கொண்டார். அவருடைய தற்போதைய வளர்ச்சி, தைரியமாக தன்னுடைய கருத்துக்களை கூறும் விதம் தனக்கு மகிழ்ச்சியை கொடுப்பதாகவும் விஜய் சேதுபதி குறிப்பிட்டார்.

நன்றாக கைத்தட்டுங்கள்: இதையடுத்து ரசிகர்கள் கைதட்ட, நன்றாக கைத்தட்டுங்கள், இதில் என்ன கஞ்சத்தனம் என்று விஜய் சேதுபதி பேச கூட்டத்தினர் அதிகமாக கைத்தட்டியதை பார்க்க முடிந்தது. இந்தப் படத்தில் சத்யராஜ், மிகச்சிறப்பாக கேரக்டரில் நடித்துள்ளதாக கூறப்படும் நிலையில், அவருடன் இணைந்து தான் பணியாற்ற விரும்புவதாக விஜய் சேதுபதி தன்னுடைய ஆசையை இந்த நிகழ்ச்சியில் வெளிப்படுத்தினார். இருவருக்கும் சமமான ரோலில் ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்றும் கூறினார். சத்யராஜின் டைமிங், ரொமான்ஸ், ஆக்ஷன் உள்ளிட்டவற்றை தான் அதிகமாக ரசித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X