twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஸ்டார் அண்ட் மாஸ் ஹீரோ விஜய் சேதுபதி.. கடந்து வந்த பாதை ஒரு அலசல்!

    |

    சென்னை : ஸ்டார் அண்டு மாஸ் ஹீரோ யாருன்னா அது நம்ம விஜய்சேதுபதி தான். எளிமையின் அடையாளமாகவும், ஈகோ கொஞ்சம் கூட இல்லாதவராகவும் , எந்த சமூக பிரச்சனையாக இருந்தாலும் தனியா கெத்தா வந்து தனது கருத்தை வெளிப்படையா தெரிவிக்கும் ஒரு மாஸ் அண்டு கிளாஸ் ஹீரோவாக உள்ளார் விஜய்சேதுபதி.

    பல வருடங்களாக, பல போராட்டங்களை சந்தித்தும், சிறு சிறு கதாப்பாத்திரங்களை ஏற்று நடித்து இன்று தனக்கென ஒரு இடத்தை ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து இன்று வெற்றி நாயகனாக வலம் வருகிறார் விஜய்சேதுபதி..

    ரசிகர்களால் அன்போடு மக்கள் செல்வன் என்று அழைக்கப்படும் விஜய் சேதுபதி கடந்த வந்த பாதை குறித்தும், அவர் நடித்த ஹிட் படங்கள் குறித்தும் ஒரு சிறப்பு ரீவைண்டில் பார்க்கலாம்.

    'களத்தில் சந்திப்போம்' தைப்பூசத்தன்று ரிலீஸ்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது படக்குழு!'களத்தில் சந்திப்போம்' தைப்பூசத்தன்று ரிலீஸ்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது படக்குழு!

     துபாயில் வேலை

    துபாயில் வேலை

    1978ம் ஆண்டு ஜனவரி 16ந் தேதி ராஜபாளையத்தில் பிறந்தார் விஜய்சேதுபதி. தனது பள்ளி படிப்பை விருதுநகரில் முடித் த இவர், பி.ஏ எக்னாமிக்ஸ் படித்துள்ளார். நான் ஒரு ஆவ்ரேஜ் ஸ்டூடென்ட்தான் என்று பல நிகழ்ச்சிகளில் அவரே கூறியுள்ளார். ஆரம்பத்தில் கிடைத்த வேலையை செய்து வந்த இவர், குடும்ப சூழ்நிலை காரணமாக துபாயில் 3 ஆண்டுகள் கணக்காளராக பணிபுரிந்தார். பின்னர் இவர் சென்னை வந்தார்.

    கூத்துப்பட்டறை

    கூத்துப்பட்டறை

    இவரின் முகமும், கட்டுமஸ்தான உடல் கட்டமைப்பும், பளிச் கண்களுமே திரைத்துறைக்கு இவர் நுழைய காரணம் என்று சொல்லலாம், ஒரு போட்டோ கிராஃபர் உங்கள் முகம் போட்டோவில் ரொம்ப அழகாக தெரியும்னு சொல்ல, அதுவே இவர் திரைத்துறையில் காலடி எடுத்து வைக்க உந்துதலாக இருந்தது. கலைத்துறையின் மீது இருந்த ஆர்வத்தால் ஒரு கூத்துப்பட்டறையில் கணக்காளராக தனது பணியை தொடங்கினார்.

     குறும்படங்களில் நடித்தார்

    குறும்படங்களில் நடித்தார்

    இவர் முதன் முறையாக பெண் என்ற தொலைக்காட்சி தொடரில் நடித்துள்ளார். மேலும், கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நாளைய இயக்குனரில் கார்த்திக் சுப்புராஜுன் இணைந்து பல குறும்படங்களில் நடித்துள்ளார். கிட்டத்தட்டட 5 ஆண்டுகளாக நிறைய போராட்டங்களை சந்தித்து கிடைத்த வாய்ப்பை கச்சிதமாக பயன்படுத்திக் கொண்டார் விஜய்சேதுபதி.

     அதிஷ்டக்காற்று

    அதிஷ்டக்காற்று

    நீண்ட நெடிய போராட்டத்திற்கு பிறகு அதிர்ஷ்டக்காற்று இவர் மீது வீசியது. அதுவரை சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவர் முதன்முறையாக தென்மேற்கு பருவக்காற்று படத்தில் நாயகனாக அறிமுகமானார். ஒரு கிராமத்து இளைஞன் வேடத்தில், தாடி வைத்த முகமும், வாரப்படாத தலை முடியும், மேக்கப் இல்லாத முகமும், என கிட்டத்தட்ட நாம் நேரில் பார்க்கும் விஜய் சேதுபதி போலத்தான் இருந்தார். அந்த படத்தில் இவரின் இயல்பான நடிப்பு இவரை அடுத்த நிலைக்கு கொண்டு சென்றது.

    என்னாச்சு

    என்னாச்சு

    என்னாச்சு... என்னாச்சுனு சொல்லியே படம் முழுக்க சிரிக்க வைத்தாலும், அந்த படத்தோட வெற்றிக்கு இந்த ஒற்றை டைலாக்தான் பிரதானமாக இருந்தது. என்னாச்சுனு கேக்குற விதமும், மாடுலேஷனும் இவர் மீதான பித்தை ஏகத்திற்கும் ஏற்றிவிட்டு, தாறுமாறா சிரிக்க வைத்து அசால்ட்டாக ஹிட்டடித்தது.

     மற்றுமொரு வெற்றி

    மற்றுமொரு வெற்றி

    விஜய்சேதுபதிக்கு மற்றுமொரு வெற்றியைத் தேடித்தந்த திரைப்படம் சூது கவ்வும், இந்த படத்தில், ஒரு வித்தியாசமான ஆள் கடத்தல் பேர்வழியாக நடித்து இருப்பார். தனது கற்பனை காதலியுடனும், ஒரு ஓட்டை காரை வைத்துக்கொண்டு ஒன்றுக்கும் உதவாக ஜடியாவால் ஆள் கடத்தலில் சொதப்புவது வேறலேவல் காமெடி. மாமா டவுசர் கிழிஞ்சிடுச்சுனு அனைவரையும் சொல்லவைத்த ஒரு திரைப்படம் சூது கவ்வும்.

    அனைவரும் ஹேப்பி

    அனைவரும் ஹேப்பி

    பொதுவாக ஹீரோனா சண்டை போடனும், வில்லனை அடிக்கனும் அப்போ தான் அவன் ஹீரோ. ஆனால் இது எதுவுமே இல்லம, செம ஜாலியான ஒரு கதாபாத்திரத்தில் ரொம்ப இயல்பா நடித்து அனைவரையும் ஹேப்பியாக்கியவர் நம்ம விஜய்சேதுபதி. இந்த இயல்பான நடிப்பே இந்த படம் வெற்றி பெற காரணமாக இருந்தது.

     வெற்றிக்கு ஒரு மைல் கல்லாக

    வெற்றிக்கு ஒரு மைல் கல்லாக

    சேதுபதி திரைப்படத்தில் நேர்மையான போலீஸ் அதிகாரியாக நடித்து மிரட்டி இருப்பார் மக்கள் செல்வன். அழகான குடும்பம், அன்பான மனைவி வழக்கம் போல நேர்மையான போலீஸ் அதிகாரிக்கு வரும் பிரச்சனை என நம் அனைவருக்கும் தெரிந்த கதைத்தான் என்றாலும் இந்த படத்தின் ஹைலைட்டே விஜய்சேதுபதியும், அவரது ரவுடிசம் கல ந்த போலீஸ் அதிகாரி கதாபாத்திரம் தான். இந்த திரைப்படத்தின் வெற்றிக்கு ஒரு மைல் கல்லாக அமைந்தது விஜய்சேதுபதியின் மாஸ் லுக் தான்.

     எதார்த்த நாயகன்

    எதார்த்த நாயகன்

    கிராமத்து இளைஞனாக இயல்பான பக்கத்து வீட்டு பையன் போல நடித்து அனைவரையும் கவர்ந்து இருப்பார் விஜய்சேதுபதி, என்னத்தான் டாக்டர் கதாபாத்திரத்தில் நடித்தாலும் இயல்பாக இருக்கும் விஜய்சேதுபதி போல, படம் முழுக்க எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இந்த படத்தையும் வெற்றிப்பெற செய்தார்.

     பிளாக் பஸ்டர் ஹிட்

    பிளாக் பஸ்டர் ஹிட்

    போலீஸ், தாதா கதையை வித்தியாசமான கதையாக்கி விறுவிறுப்பான திருப்பங்களுடன் வெளிவந்த படம் தான் விக்ரம் வேதா. என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்டாக வரும் மாதவன், தாதா கதாபாத்திரத்தில் வரும் விஜய்சேதுபதி, உனக்கு ஒரு கதை சொல்றேனு சொல்லும் விதம் ஆடியன்சிடம் இருந்து பலத்த கைத்தட்டல்களை பெற்றுத்தந்ததோடு படத்தை பிளாக் பஸ்டர் ஹிட்டிக்கும் வழி வகுத்தது.

    English summary
    Actor Vijay sethupathi Hit movies special report
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X