Just In
- 2 hrs ago
நம்புங்க நானும் நல்லவன்தான்.. ஏவியை பார்த்து ஃபீல் பண்ணிய பாலா.. கடைசியா பேசியது இதுதான்!
- 6 hrs ago
காயப்படுத்தியிருந்தால் மன்னித்து விடுங்கள்.. ஃபினாலே மேடையில் விழுந்து உருக்கமாக மன்னிப்பு கேட்ட ஆரி
- 7 hrs ago
கடைசியா நேர்மை வென்று விட்டது.. பிக் பாஸ் டைட்டில் வின்னர் ஆரி.. ரன்னர்-அப் பாலாஜி முருகதாஸ்!
- 7 hrs ago
கதர் ஆடையை கையில் எடுத்த கமல்.. புதிய ஃபேஷன் பிராண்ட் ‘KH’ .. போட்டியாளர்களுக்கு கதர் துணி பரிசு!
Don't Miss!
- News
குடியரசு தினத்தன்று டெல்லியில் ஒரு லட்சம் டிராக்டர் பேரணி நடக்குமா.. சுப்ரீம் கோர்டில் இன்று விசாரணை
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 18.01.2021: இன்னைக்கு இந்த ராசிக்காரங்க வாயை திறக்காம இருக்குறது நல்லது…
- Finance
48% அதிகரிப்பாம்.. பெட்ரோல், டீசல் மீதான வரியால் தூள் கிளப்பிய வரி வசூல்.. !
- Automobiles
20-இன்ச் அலாய் சக்கரங்களுடன் கியா சொனெட் காரை பார்த்திருக்கீங்களா?! இங்க பாத்துக்கோங்க
- Sports
வலிமையான அணிகள் மோதும் 62வது போட்டி... பரபர அனுபவத்திற்கு தயாராகும் ரசிகர்கள்!
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
நடுக்காட்டில் முரட்டு பூனையுடன் விஜய்சேதுபதி..மனுஷன் சும்மா தெறிக்கவிடுறாரு!
சென்னை : தமிழ்,தெலுங்கு,மலையாளம் ஆகிய மொழிகளைத் தொடர்ந்து இப்பொழுது பாலிவுட்டிலும் அறிமுகமாக இருக்கும் விஜய் சேதுபதி அதில் ஷாகித் கபூருடன் இணைந்து பணியாற்ற உள்ளார்.
அடுத்தடுத்து எக்கச்சக்கமான படங்களில் கமிட்டாகி வரும் விஜய் சேதுபதி, விஜய் கூட்டணியில் உருவாகியிருக்கும் மாஸ்டர் திரைப்படத்திற்காக ஒட்டுமொத்த திரையுலகமே காத்துக் கொண்டிருக்கிறது.
தப்பு மேல தப்பு செஞ்சுக்கிட்டு இருக்குறவங்கள என்ன செய்றது? பாலாவுக்கு பூஜை இருக்கு..மிரட்டும் கமல்!
வித்தியாசமான பல வேடங்களை தேர்ந்தெடுத்து நடிப்பதில் வல்லவரான விஜய் சேதுபதி இப்பொழுது நடு காட்டில் முரட்டு பூனையை கட்டி அணைத்துக் கொண்டு செம ஸ்டைலிஷாக போஸ் கொடுத்திருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

வில்லனாகவும் மிரட்டி
சிறந்த நடிகராக மட்டுமல்லாமல் சிறந்த தயாரிப்பாளராகவும் தமிழ் சினிமாவில் கலக்கிக் கொண்டிருக்கும் நடிகர் விஜய் சேதுபதி ஹீரோவாக பல திரைப்படங்களில் கலக்கிக் கொண்டிருக்கும் அதேசமயம் வில்லனாகவும் மிரட்டி வருகிறார்.

நடிக்க முடியாமல்
விக்ரம் வேதா, பேட்ட ஆகிய திரைப்படங்களைத் தொடர்ந்து இப்பொழுது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் மாஸ்டர் திரைப்படத்திலும் கொடூரமான வில்லனாக நடித்து வரும் விஜய் சேதுபதி, தெலுங்கில் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகும் புஷ்பா திரைப்படத்திலும் வில்லனாக நடிக்க இருந்த நிலையில் தேதி பிரச்சினை காரணமாக அதில் நடிக்க முடியாமல் போனது இப்பொழுது அந்த கதாபாத்திரத்தில் நடிகர் ஆர்யா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

முதன்முறையாக வெப் சீரிஸில்
இந்த நிலையில் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளை தொடர்ந்து இப்போது இந்தியிலும் கால் தடத்தை பதித்து வரும் விஜய் சேதுபதி ஷாகித் கபூர் முதன்முறையாக நடிக்கும் வெப் சீரிஸில் ஒப்பந்தமாகி இருக்கும் நிலையில் இதில் ஹீரோயினாக நடிகை மாளவிகா மோகனன் நடிக்க உள்ளார்.

2021 இறுதிக்குள்
அதுமட்டுமல்லாமல் லோகேஷ் கனகராஜின் அறிமுக திரைப்படமான மாநகரமும் இப்போது இந்தியில் ரீமேக் செய்யப்படும் நிலையில் அதில் சந்தீப் கிஷான் கதாபாத்திரத்தில் நடிக்க விஜய் சேதுபதி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த திரைப்படம் மிக விரைவில் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு 2021 இறுதிக்குள் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

முரட்டு பூனையை அணைத்தவாறு
அடுத்தடுத்து திரைப்படங்களில் தொடர்ந்து வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து இந்தியா முழுவதும் கலக்கி வரும் விஜய் சேதுபதி இப்பொழுது நடுக்காட்டில் செம ஸ்டைலிஷான காஸ்ட்யூமில் முரட்டு பூனையை கட்டி அணைத்தவாறு புத்தாண்டுக்கு வெளியிட்டுள்ள இந்த தாறுமாறு புகைப்படம் ரசிகர்களின் பாராட்டு மழையில் நனைந்து வைரலாகி வருகிறது.