சூப்பர் டீலக்ஸ் இயக்குநரிடம் விருது பெற்ற விஜய் சேதுபதி

சென்னை : சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்தில் நடித்ததற்காக சமீபத்தில் தேசிய விருதை பெற்றிருந்தார் நடிகர் விஜய் சேதுபதி.

சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்தில் திருநங்கையாக அவர் நடித்திருந்தார். படத்தை இயக்கியிருந்தார் தியாகராஜன் குமாரராஜா.

இந்நிலையில் தன்னுடைய தேசிய விருதை தியாகராஜன் குமாரராஜாவிடம் கொடுத்து வாங்கியுள்ளார் நடிகர் விஜய் சேதுபதி.

சூப்பர் டீலக்ஸ் படம்

சூப்பர் டீலக்ஸ் படம்

நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 2019ல் வெளியான படம் சூப்பர் டீலக்ஸ். படத்தை இயக்கியிருந்தார் தியாகராஜன் குமாரராஜா. வெவ்வேறு கதைகளை இணைத்து வித்தியாசமான வகையில் இந்தப் படம் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றது.

திருநங்கையாக விஜய் சேதுபதி

திருநங்கையாக விஜய் சேதுபதி

இந்தப் படத்தில் திருநங்கையாக நடித்திருந்தார் மக்கள் செல்வன். படத்தில் சமந்தா, பகத் பாசில், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். ஆரண்ய காண்டம் படத்தை இயக்கி ரசிகர்களிடையே வரவேற்பு பெற்றிருந்த குமாரராஜா இந்தப் படத்தின்மூலம் மேலும் கவனம் பெற்றார்.

சிறந்த துணை நடிகர் விருது

சிறந்த துணை நடிகர் விருது

இந்நிலையில் இந்தப் படத்தில் நடித்ததற்காக நடிகர் விஜய் சேதுபதிக்கு சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது கிடைத்துள்ளது. சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் பங்கேற்ற அவர் குடியரசு துணை தலைவர் வெங்கய்ய நாயுடுவிடம் இருந்து விருதினைப் பெற்றுக் கொண்டார்.

விஜய் சேதுபதி மகிழ்ச்சி

விஜய் சேதுபதி மகிழ்ச்சி

மேலும் விருதை எதிர்பார்த்து இந்தப் படத்தில் நடிக்கவில்லை என்றும் இயக்குநரின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் சவாலான இந்த கதாபாத்திரத்தை ஏற்று நடித்ததாகவும் அது சிறப்பான பலன்களை கொடுத்துள்ளதாகவும் விஜய் சேதுபதி மகிழ்ச்சி தெரிவித்திருந்தார்.

நேரில் சந்தித்து வாழ்த்து

இந்நிலையில் தற்போது சூப்பர் டீலக்ஸ் இயக்குநர் தியாகராஜன் குமாரராஜாவை நேரில் சந்தித்து தன்னுடைய விருதினை காட்டி மகிழ்ந்துள்ளார் விஜய் சேதுபதி. மேலும் அவரது கையால் விருதினை தன்னுடைய கழுத்தில் போடவைத்து மகிழ்ந்துள்ளார். இதன் வீடியோ மற்றும் புகைப்படங்களையும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

நான்கு கோணங்கள்

நான்கு கோணங்கள்

நான்கு கோணங்களில் நான்கு கதைகளை தொடர்பு ஏதுமின்றி எடுக்கப்பட்ட படம் சூப்பர் டீலக்ஸ். இதில் நீண்ட ஆண்டுகள் கழித்து தன்னுடைய மகனை பார்க்க திருநங்கையாக வரும் விஜய் சேதுபதி சந்திக்கும் சூழல்கள், அவர் இந்த சமூகத்தில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் உள்ளிட்டவை படமாக்கப்பட்டிருந்தன.

சிறப்பான விமர்சனங்கள்

சிறப்பான விமர்சனங்கள்

இந்த கேரக்டரில் விஜய் சேதுபதி சிறப்பாக நடித்து நல்ல விமர்சனங்களை பெற்றிருந்தார் அவரது கதைச்சூழல் சிறப்பான வகையில் படமாக்கப்பட்டிருந்தது. வித்தியாசமான கதைக்களங்களை தேடிப்பிடித்து நடித்துவரும் விஜய் சேதுபதிக்கு இந்த கேரக்டர் சிறப்பான வகையில் தீனி போட்டது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X