நடிகைக்கு சிபாரிசு செய்தாரா விஜய் சேதுபதி? மறுப்பு தெரிவிக்கும் நடிகர் தரப்பு!
சென்னை : நடிகர் விஜய் சேதுபதி தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.
Recommended Video
நடிகை ராசி கண்ணா உடன் சங்கத்தமிழன், துக்ளக் தர்பார் ஆகிய படங்களில் அவர் நடித்துள்ளார்.
இந்நிலையில் இந்தியில் விஜய் சேதுபதி நடிக்க உள்ள வெப் தொடரில் ராசிக் கண்ணாவிற்கு அவர் சிபாரிசு செய்ததாக கூறப்படுகிறது.

நடிகர் விஜய் சேதுபதி
நடிகர் விஜய் சேதுபதி தமிழ் மற்றும் தெலுங்கில் பல படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். அவரது நடிப்பில் கடைசி விவசாயி, விக்ரம் உள்ளிட்ட படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. தொடர்ந்து அவர் பல படங்களில் கமிட்டாகி வருகிறார்.

சொதப்பிய படங்கள்
சமீபத்தில் அவரது நடிப்பில் ரிலீசான லாபம், அனபெல் சேதுபதி உள்ளிட்ட படங்கள் அவருக்கு சிறப்பாக கை கொடுக்கவில்லை. இந்தப் படங்கள் வசூல் ரீதியாகவும் வெற்றி பெறவில்லை. இந்நிலையில் அடுத்தடுத்த படங்களின் வெற்றியை அவர் எதிர்நோக்கியுள்ளார்.

வெப் தொடரில் விஜய்சேதுபதி
அடுத்தடுத்த படங்களில் தொடர்ந்து கமிட்டாகி வரும் விஜய் சேதுபதி தற்போது இந்தியில் ஒரு வெப் தொடரில் நடிக்க உள்ளார். இதில் அவருக்கு ஜோடியாக நடிகை ராசி கண்ணா நடிக்க உள்ளார்.

விஜய் சேதுபதியுடன் நடிக்கும் ராசி கண்ணா
முன்னதாக நடிகர் விஜய் சேதுபதி மற்றும் ராசி கண்ணா இருவரும் சங்கத்தமிழன் மற்றும் துக்ளக் தர்பார் ஆகிய படங்களில் நடித்துள்ளனர். இந்நிலையில் தற்போது வெப் தொடரிலும் இணைந்து நடிக்க உள்ளனர்.

சிபாரிசு செய்தாரா விஜய் சேதுபதி?
இந்தத் தொடரில் தன்னுடன் இணைந்து நடிக்க ராசி கண்ணாவை விஜய்சேதுபதி சிபாரிசு செய்ததாக கூறப்படுகிறது. ஆனால் விஜய் சேதுபதி தரப்பு இதை மறுத்துள்ளது.

விஜய் சேதுபதி மறுப்பு
வெப் தொடரில் நடிக்க ராசி கண்ணாவை இயக்குனரே தேர்வு செய்ததாக விஜய் சேதுபதி தரப்பு கூறியுள்ளது. தமிழ் மட்டுமின்றி மற்ற மொழிகளிலும் கவனம் செலுத்தி வருகிறார் விஜய் சேதுபதி.

உயரும் மார்க்கெட் வேல்யூ
இந்நிலையில் இந்த வெப் தொடரில் நடிப்பதன் மூலம் அவரது மார்க்கெட் வேல்யூ இன்னும் அதிகரிக்கக்கூடும். ஏற்கனவே விஜய், ரஜினிகாந்த் என முன்னணி நடிகர்களின் வில்லனாக மிரட்டி வருகிறார் விஜய் சேதுபதி. இந்நிலையில் இந்தியில் உருவாகும் இந்த வெப் தொடரில் நடிப்பதன் மூலம் அவர் மேலும் பிரபலமாகும் வாய்ப்புகள் உள்ளது.

சம்பள உயர்வு
தற்போது அதிகமான படங்களில் நடித்து தன்னுடைய சம்பளத்தை கணிசமான உயர்வில் வைத்துள்ள விஜய்சேதுபதி, இந்த வெப் தொடரில் நடிப்பதன் மூலம் அவரது சம்பளம் மேலும் அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளது.


Click it and Unblock the Notifications











